1070ம் ஆண்டில் பழங்காலத்தில் ஐந்தீவு பகுதி ஒன்று இருந்தது. பெருமாட்சி, ஆர்த்தி, முக்காடு, வெண்காடு, மண்டைக்காடு என இந்த தீவுகள் ஐந்து பகுதிகளாக பிரிந்து கிடக்கின்றன. ஒவ்வொரு தீவிலும் தனித்தனி குணம் கொண்ட ஆதிவாசிகள் வசிக்கின்றனர். பெருமாட்சி தீவில் கங்குவா ( சூர்யா) வம்சத்தைச் சேர்ந்த மக்கள் வசிக்கிறார்கள். ஆர்த்தி தீவில் உதிரன் (பாபி. தியோள்) வம்சத்தைச் சார்ந்த மக்கள் வசிக்கிறார்கள. இதே போல் ஒவ்வொரு தீவிலும் ஒவ்வொரு குழு வசிக்கிறது. போர்ச்சுக்கல் படை ஐந்தீவு பகுதியை கைப்பற்ற எண்ணி 25 ஆயிரம் சிப்பாய்களுடன் தீவை நெருங்குகிறது. அங்குள்ள உளவாளி உதிரன் துணை கொண்டு போரிட்டால் கங்குவா வசிக்கும் தீவை கைப்பற்றி விடலாம் என்று ஐடியா தர அதன்படி போர்ச்சுக்கல் படை உதிரனுக்கு தங்க காசுகள் கொடுத்து அவனை தன் பக்கம் வளைத்துப் போடுகிறது. இந்நிலையில் நடக்கும் போரில் கங்குவா உதிரனின் சகோதரர்களை கொல்கிறான். அத்துடன் உதிரன் மகனும் கொல்லப்படுகிறான். ஆவேசம் அடைந்த உதிரன் கங்குவாவை கொல்வேன் என்று சபதம் செய்கிறான். இதற்கிடையில் கங்குகாவிடம் ஒரு தாய் தன் மகனை ஒப்படைத்துவிட்டு இறந்து விடுகிறாள். அதற்கு முன், ” என் மகனை நீ தான் காப்பாற்ற வேண்டும்” என்று வாக்கு வாங்கிக் கொள்கிறாள். அந்த வாக்கை நிறைவேற்றுவதற்காக கங்குவா தன் உயிரையும் பணயம் வைக்க துணிகிறான். இறுதியில் நடப்பது என்ன என்பதற்கு கங்குவா ஒரு எதிர்பாராத பதிலை அளிக்கிறது.
சூர்யா ஏராளமான படங்களில் ஆக்சன் காட்சிகள்,, காதல் ரொமான்ஸ் காட்சிகள் என நடித்திருந்தாலும் இப்படம் அவருக்கு முற்றிலும் ஒரு மாறுபட்ட படமாகவும், அனுபவமாகவும் இருந்திருக்கும் என்பதை உறுதியாக சொல்லலாம்.
ஜடா முடி, பழங்கால உடைகள், உடம்பு முழுவதும் டாட்டூக்கள் வரைந்துக் கொண்டு கையில் ஆயுதத்துடன் கங்குவா என்ற ஒரு போர் வீரனாகவே கண் முன் நிற்கிறார் சூர்யா.
தன் இன மக்களை காப்பதற்காக உயிரைத் துச்சமென மதித்து எதரிகளுடன் சூர்யா போரிடுவது , அந்த ஆவேசத்துக்கு ஏற்ப வா.. என ஆக்ரோஷமாக கத்தி அரங்கை பரபரப்புக்கு உள்ளாக்குகிறார்.
மரத்தின் மீது தாவி பறந்தும் , அங்கு தொங்கியபடி அம்புவீசியும் ஈட்டி எறிந்தும் எதிரிகளை சூர்யா கொல்வதும் அதற்கான சண்டை காட்சிகளில் உயிரைப் பற்றி கவலைப்படாமல் ரிஸ்க் எடுத்து அநாயசமாக நடித்திருக்கிறார் .
தண்ணீருக்கு அடியில் நீந்திச் சென்று பலம் வாய்ந்த பயங்கர முதலையுடன் சூர்யா சண்டையிடுவது அடுத்து என்ன நடக்குமோ என்ற திகிலை ஏற்படுத்துகிறது.
2024 ஆம் ஆண்டில் போலீசுக்கு சிக்காத கிரிமினல் குற்றவாளிகளை பிடித்துத் தரும் பிரான்சிஸ் கதாபாத்திரத்தில் சூர்யா வழக்கமான தனது ஸ்டைலையும், ரொமான்ஸையும் செம்மையாக வெளிப்படுத்துகிறார்.
சூர்யாவுடன் வரும் திஷா. பதானி அடிக்கடி அவருடன் செல்லச் சண்டைகள் இடுவது ருசிகரம் . இவர்களுடன் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி தங்கள் பங்குக்கு காமெடி செய்திருக்கிறார்கள்
இந்தி நடிகர் பாபி தியோள் உதிரன் என்ற வில்லன் பாத்திரத்தில் ரத்தம் கொப்பளிக்க நடித்திருக்கிறார். சூர்யாவுக்கும் பாபிக்கும் இடையே நடக்கும் கிளைமாக்ஸ் மோதல் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது.
எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சியாக சிறப்பு தோற்றத்தில் கார்த்தி நடித்திருக்கிறார். மண்டை ஓடுகளை குதிரைகளில் கட்டிக்கொண்டு அவர் வில்லத்தனமாய் சிரித்துக்கொண்டு வருவது அச்சத்தை ஏற்படுத்தி விடுகிறது. கங்குவா சூர்யாவுக்கு. கார்த்தி தான் வில்லன். இது கங்குவா இரண்டாம் பாகத்தில் நடக்கவிருக்கும் கதை என்பதை எண்டு கார்டு போடுவதற்கு முன் கோடிட்டு காட்டுகிறார் இயக்குனர் சிவா.
கே ஈ ஞானவேல் ராஜா, , வம்சி பிரமோத்துடன் இணைந்து இப்படத்தை பிரமாண்ட பொருட் செலவில் தயாரித்திருக்கிறார்..
தேவி ஸ்ரீ பிரசாத் இசை சூர்யாவுக்கு எப்போதுமே ஒரு ராசியான இசையமைப்பாளர். சிங்கம் படம் தொடங்கி இந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கிறது. அது கங்குவா படத்திலும் தொடர்கிறது
வெற்றி பழனிசசாமி ஒளிப்பதிவு காட்டுப்பகுதியில் உள்ள பிரம்மாண்டத்தை கண்களின் இமைகளை விரித்து போட்டு உள்ளே நுழைத்து காட்டுகிறது.
சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பிரபல நடிகர்கள் அவர்களுடன் 3000 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் என ஒரு பட்டாளத்தையே வைத்துக்கொண்டு காட்டுப்பகுதியில் இப்படி ஒரு படத்தை எடுப்பதற்கு துணிச்சல் வேண்டும் அந்த துணிச்சல் இயக்குனர் சிவாவுக்கு இருந்திருக்கிறது; காட்டுப்பகுதியில் ஏற்படும் இடையூறுகளை தாண்டிக் குதித்து ஹாலிவுட் படத்துக்கு நிகராக இயக்கி காட்டி இருக்கிறார்.
கங்குவா. படம் 3 டி வடிவில் திரைக்கு வந்திருக்கிறது. காட்டுப்பகுதி நாணல்கள், கற்கள், நெருப்பு துகள்கள், தண்ணீர் திவலைகள் போன்றவை கண்கள் மீது வந்து விழுவதுபோல் படமாக்கப்பட்டு ஒரு புதிய அனுபவத்தை தந்திருக்கிறது டெக்னிக்கல் குழு.i
கங்குவார் – காட்டுக்குள் ஒரு பிரம்மாண்டம்.
நடிப்பு: சூர்யா (இரட்டை வேடம்), கார்த்தி (;சிறப்பு தோற்றம்), பாபி தியோள் திஷா பதானி, போஸ் வெங்கட், கருணாஸ், நட்டி கே.எஸ் ரவிக்குமார், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, பிரேம்குமார் மற்றும் பலர்
தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன் கே ஈ ஞானவேல்ராஜா, வம்சி பிரமோத்
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
ஒளிப்பதி,வு: வெற்றி பழனிசாமி
இயக்கம்: சிவா
பி ஆர் ஓ: சுரேஷ் சந்திரா, நாசர்