ஓஹோவென படங்கள் ஓடிய சேலம் ஓரியண்டல் தியேட்டர்…!

சேலத்திலேயே,ஏன் தமிழகத்திலேயே மிக முக்கியமான திரையரங்கமாக திகழ்ந்தது சேலம் பழைய பஸ் நிலையம் அருகிலிருந்த ஓரியண்டல் தியேட்டர்..!1-11-1926 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த பழைமையான தியேட்டரில் முதல் 5 ஆண்டுகள் மெளனமொழி படங்கள் திரையிடப்பட்டு வந்தன.! பின்பு 31-10-1931 முதல் பேசும் படங்கள் திரையிடப்பட்டன..! முதல்படமாக அந்தந்த மொழி கலைஞர்கள் அந்தந்த மொழி பேசி நடித்த காளிதாஸ் படம் திரையிடப்பட்டு சிறப்பாக ஓடியது..!பின்பு கிருஷ்ணலீலா,வள்ளி,பிரகலாதா, சத்தியவான் சாவித்திரி,ஸ்ரீநிவாசா கல்யாணம்,லவகுசா,போன்ற போன்ற ஆரம்பகால பழைய படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர் ஓரியண்டல் ஆகும்..!குறவஞ்சி படம் காலைகாட்சியாக 52 வாரம் ஓடியது..!
எம்.ஜி.ஆரின் முதல்படம் சதிலீலாவதி ஒரியண்டலில் தான் 28-3-1936 இல் ரிலீசானது..!

கமல் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா ஓரியண்டலில் தான் ரிலீஸானது..!சிவாஜி,ஜெயலலிதா நடித்த சுமதி என் சுந்தரி 1971 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது…!சிவாஜி 3 வேடங்களில் நடித்த திரிசூலம் 200 நாட்கள் ஓடியது சாதனை சரித்திரம்..!கல்தூண் படமும் நன்கு ஓடியது..!அமிதாப்பச்சன் நடித்த ஷோலே இந்திபடம் ஒரு வருடம் ஓடி இமாலய சாதனை படைத்தது இந்த ஓரியண்டல் திரையரங்கில் தான்..!குர்பானி நன்கு ஓடியது..!

மாடர்ன் தியேட்டர்ஸ் படங்கள் ரெகுலராக ஓரியண்டலில் தான் வெளியாகும்…!.பிற்காலத்தில் A.V.M படங்களின் இராசியான தியேட்டராக ஓரியண்டல்ஆகி விட்டது..!கமலின் சகலகலாவல்லவன்,சூப்பர் ஸ்டார் ரஜினியின் முரட்டுக்காளை இரண்டும் ரசிகர்களின் பேராதரவோடு அரங்கம் நிரம்பி வழிய ஓடி வசூலில் சாதனை படைத்தன..!கமலின் 100 வது படம் ராஜபார்வை இங்கு நன்கு ஓடியது…!

போக்கிரி ராஜா ரஜினியின் வெற்றிபடமாக சிறப்பாக ஒடிய தியேட்டர்..!ஏ.வி.எம் படமான சம்சாரம் அது மின்சாரம் மாபெரும் வெற்றி பெற்று வசூலை குவித்த தியேட்டர் இந்த ஓரியண்டல் தியேட்டர்…! நவீன வசதிகள் இல்லாவிட்டாலும், சேலம் பஸ்நிலையம் அருகே இருந்ததால் மாவட்டம் முழுவதும்இருந்து மக்கள் வந்து படம் பார்த்து ரசித்தனர்..! புதுப்பட வெளியீட்டின் போது தியேட்டரே திருவிழா கோலம் காணும்..!

ஓரியண்டல் தியேட்டரில் வைக்கப்படும் கட்அவுட்கள் பிரமாண்டமாக இருக்கும்..! டிக்கட் கொடுக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் ஹவுஸ்ஃபுல் போர்டு தொங்கும்..! நீண்ட கியூவரிசையில் நின்று மக்கள் டிக்கட் பெற்று படம் பார்ப்பர்…! இன்று ஓரியண்டல் தியேட்டர் இல்லாவிட்டாலும், அங்கு வணிக வளாகம் வந்து விட்டாலும் ,முக்கிய லேண்ட் மார்க் ஆக திகழ்கிறது..! இன்றும் அந்த பகுதியை கடக்கும் போதெல்லாம் அங்கு படம் பார்த்த நினைவுகள் மனதில் இனிமையாக வந்து செல்கின்றன..!