ஐகானிக் ஸ்டார் அல்லு அர்ஜூனின் புதிய அலுவலகம் ‘ICONZA’!

தனது தாத்தா அல்லு ராமலிங்கய்யாவின் பிறந்தநாளில் புதிய அலுவலகம் திறந்த அல்லு அர்ஜூன்!

மறைந்த பழம்பெரும் நடிகரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான அல்லு ராமலிங்கய்யா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் ‘ICONZA’ என்ற தனது புதிய அலுவலகத்தை திறந்தார்.

எளிமையாக நடைபெற்ற தொடக்க விழா பூஜையில் அல்லு அர்ஜூன் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இந்த சிறப்பான நாளின் புகைப்படங்களைப் பகிர்ந்த அல்லு அர்ஜுன், தனது தாத்தாவின் நிலைத்திருக்கும் கலைப் பாரம்பரியத்திற்கு அர்ப்பணிப்பாக இந்த புதிய அலுவலகம் செயல்படும் என்றார்.

இந்திய சினிமாவின் முன்னோடியாகப் போற்றப்படும் அல்லு ராமலிங்கய்யா அவர்களின் புகழ்பெற்ற திரைப்பயணம் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களையும் உள்ளடக்கியது. தனது தாத்தாவின் பிறந்தநாளில் இந்த புதிய பயணத்தைத் தொடங்கும் அல்லு அர்ஜுன், சினிமா, படைப்பாற்றல் மற்றும் கலைநோக்கில் தனது குடும்ப பாரம்பரியத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கிறார்.

கிரியேட்டிவிட்டி, இணைந்து செயல்படுதல் மற்றும் புதிய யோசனைகளுக்கான இடமாக உருவாக்கப்பட்டுள்ள ICONZA, நடிப்பைத் தாண்டி அல்லு அர்ஜுனின் விரிவடைந்து வரும் கலைப் பயணத்தில் மற்றொரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.

தற்போது, அட்லி இயக்கும் ‘ராக்கா’ திரைப்படத்திற்காக அல்லு அர்ஜுன் தயாராகி வருகிறார். இந்த திரைப்படம் சமீபத்தில் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்தது. இதனைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘AA23’ திரைப்படத்திலும், அதன் பின்னர் ‘புஷ்பா 3: தி ரேம்பேஜ்’ திரைப்பத்திலும் நடிக்கிறார்.

Related posts:

கவித்துவமான காதல், கண்கவரும் காட்சிகள், ரசிக்க வைக்கும் கெமிஸ்ட்ரியுடன் மனம் வருடும் அழகிய காதல் கவிதையாக வெளியாகியுள்ளது ‘ஹைக்கூ’ திரைப்பட டீசர்!

லண்டனில் வெளிவரும் இயக்குனர்/கவிஞர் சினு ராமசாமியின் நூலை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் இன்று வெளியிட்டார்

லாக் டவுன் டைரி பட இசை, டிரெய்லர் வெளியீட்டு விழா !

டிராகன் -- விமர்சனம்.!

நடிகர்கள் விமல், சூரி 'படவா' திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா

இந்தியாவில் வெளியான ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்’ திரைப்படம் வசூலில் புதிய சாதனை!

கிரசென்ட் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் மற்றும் RICS இணைந்து, இந்தியாவின் மிகவும் சிறப்பு வாய்ந்த ரியல் எஸ்டேட் மேலாண்மை MBA படிப்பைத் தொடங்குகிறது!