ஏர்டெல், வோடபோன் கடன் பிரச்னையால் பதறும் வங்கிகள்..?

சில தினங்களுக்கு முன், உச்ச நீதிமன்றம், ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற இந்திய டெலிகாம் நிறுவனங்கள், மத்திய டெலிகாம் துறை கோரிய 92,642 கோடி ரூபாயைச் செலுத்த வேண்டும் என தீர்ப்பு வழங்கி இருப்பதை அறிவோம். இந்த பிரச்னை ஏதோ டெலிகாம் நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் டெலிகாம் துறைக்கு இடையில் நடந்த பிரச்னையாக மட்டும் தானே நமக்குத் தெரியும்..! ஆனால் இப்போது இந்த தீர்ப்பினால், வங்கிகள் தங்கள் தலையில் கை வைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏன் ஏர்டெல், வொடாபோன் ஐடியா, ஏர்செல் போன்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு எதிராக வெளி வந்த தீர்ப்புக்கு இவர்கள் வருத்தப்படுகிறார்கள் என்று கேட்டால்… கடன் என்கிறார்கள். அட ஆமாங்க. நம் ஏர்டெல், வொடாபோன் ஐடியா தொடங்கி பல முன்னணி டெலிகாம் நிறுவனங்களும் பெரிய அளவில் கடன் கொடுத்து இருக்கிறார்கள் நம் வங்கிகள்.

ஏர்டெல் நிறுவனம், தன்னுடைய கடந்த ஜூன் 2019 காலாண்டு நிதி நிலை அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது படிப் பார்த்தால், ஏர்டெல் நிறுவனத்துக்கு 1.01 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது. ஏர்டெல் இப்போது மேலும் 21,682 கோடி ரூபாய் லைசென்ஸ் கட்டண பாக்கியை வட்டியோடு செலுத்த வேண்டும் என்றால் என்ன ஆவது. ஏர்டெல் நிறுவனத்தின் கையில் இருக்கும் மொத்த பணமே 13,132 கோடி ரூபாய் தான் என்பதும் இங்கு கவனிக்க வேண்டி இருக்கிறது. அதே போல, வொடாபோன் ஐடியாவின், ஜூன் 2019 காலாண்டு நிதி நிலை அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது படிப் பார்த்தால், வோடபோன் ஐடியா நிறுவனத்துக்கு 1.20 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது. அதோடு இந்த நிறுவனம் (19824 + 8,485) 28,309 கோடி ரூபாய் லைசென்ஸ் தொகையை செலுத்த வேண்டும். ஆனால் இவர்கள் கையில் வெறும் 21 ஆயிரம் கோடி ரூபாய் தான் பணமே இருக்கிறது.

இவர்களின் நிலையும் கவலைக்குரியது தான். 2ஜி சேவையை முடக்க எந்த திட்டமும் இல்லை.. ஏர்டெல் அதிரடி தகவல்..! இரண்டு நிறுவனங்களையும் சேர்த்தால் சுமாராக 2.2 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது. அதோடு உச்ச நீதி மன்ற தீர்ப்பின் படி ஒரு (21,682 + 28,309) 49,991 கோடி ரூபாய் வேறு செலுத்த வேண்டும் என்றால், இந்த நிறுவனங்கள் எப்போது பாக்கி கட்டணத்தைச் செலுத்துவார்கள்..? எப்படி கடனை அடைப்பார்கள் என்பது தான் வங்கியின் கவலையாக இருக்கிறது. அதனால் தான் மீண்டும் டெலிகாம் நிறுவனங்களால் வாராக் கடன் பிரச்னை வந்துவிடுமோ என பயந்து கொண்டு இருக்கிறார்கள். எப்படியோ ஒழுங்காக வங்கிகள் கொடுத்த கடன் என்பிஏ ஆகாமல் இருந்தால் சரி

Related posts: