உயிருக்கே உலை வைக்கும் எலும்புப் புற்றுநோய் ?

உடலின் உள் உறுப்புகளைத் தாக்கி உயிருக்கே உலை வைக்கும் சில கட்டிகள் நமது உடலின் இரும்பு என்று அழைக்கப்படும் எலும்புகளைக் கூட விட்டு வைப்பதில்லை. கட்டிகள் என்பது உடலின் எந்த பகுதியையும் தாக்கலாம். உடலின் உள் உறுப்புகளைத் தாக்கி உயிருக்கே உலை வைக்கும் சில கட்டிகள் நமது உடலின் இரும்பு என்று அழைக்கப்படும் எலும்புகளைக் கூட விட்டு வைப்பதில்லை. நமது உடலிலுள்ள செல்கள் எல்லாம் வளர்சிதை மாற்றத்தில் தான் இயங்கிக் கொண்டு வருகின்றன.இந்த செல்களின் கட்டமைப்பில் அளவுக்கு அதிகமான, அசுர வேகத்தில் பல்கி பெருகும் செல்கள் தான் கட்டிகள் எனப்படும். இது உடலின் ஒரு பகுதியில் தோன்றி மற்ற பகுதிக்கு பரவும் தன்மை புற்று நோய் கட்டிகளுக்குஉண்டு. புற்றுநோயை முதலிலேயே கண்டறிந்து விட்டால் கட்டுப்படுத்த கூடியது என்பது ஆறுதலான விசயம். எலும்புக் கட்டிகளில் உள்ள இருவகைகளைப் பார்ப்போம்.