“என் கரியரில் சிறந்த கதாபாத்திரத்தை ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் விஜய் மில்டன் சார் கொடுத்துள்ளார்”- நடிகை மேகா ஆகாஷ்!

“என் கரியரில் சிறந்த கதாபாத்திரத்தை ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் விஜய் மில்டன் சார் கொடுத்துள்ளார்”- நடிகை மேகா ஆகாஷ்!

ஸ்டைலிஷ் கதாநாயகி, பக்கத்துவீட்டுப் பெண் என பலதரப்பட்ட கதாபாத்திரங்களுக்குப் பொருந்திப் போகும் கதாநாயகிகளை தமிழ் சினிமா ரசிகர்கள் சிவப்பு கம்பளத்தோடு வரவேற்பார்கள். அப்படிபட்ட திறமையான நடிகைகளில் மேகா ஆகாஷும் ஒருவர். ஆகஸ்ட் 2, 2024 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வரவிருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக அவர் நடித்திருக்கிறார்.

படம் குறித்தானத் தனது அனுபவங்களை உற்சாகமாகப் பகிர்ந்து கொண்டார், “விஜய் மில்டன் சார் எப்போதும் தனது படங்களில் கதாநாயகிகளுக்கு வலுவான கதாபாத்திரங்களைத் தருவார். ’மழை பிடிக்காத மனிதன்’ படத்திற்காக என்னை அணுகியபோது, கதையைக் கேட்கும் முன்பே என் மனதில் தோன்றிய முதல் விஷயம் எனக்கு ஒரு வலுவான கதாபாத்திரம் கிடைக்கிறது என்பதுதான். நான் நினைத்தது போலவே, படத்தில் நல்ல கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. நடிகராக என் திறமையை வெளிப்படுத்த இந்த கதாபாத்திரம் அமைந்துள்ளது.

என் கரியரில் சிறந்த கதாபாத்திரத்தை ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் விஜய் மில்டன் சார் கொடுத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முழுவதும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. மேலும், இந்த சிறந்த வாய்ப்பை வழங்கிய ஒட்டுமொத்த குழுவிற்கும், குறிப்பாக விஜய் ஆண்டனி சார், விஜய் மில்டன் சார் மற்றும் இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் தயாரிப்பாளர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

’மழை பிடிக்காத மனிதன்’ படத்தை இயக்குநர் விஜய் மில்டன் இயக்கி, ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர் கமல் போஹ்ரா, டி. லலிதா, பி. பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

Related posts:

Dwarka Productions தயாரிப்பில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் காமெடி திரில்லர் பூஜையுடன் இனிதே துவங்கியது !!  
ஹம்ஸா அறக்கட்டளையின் மூலம் வசதிவாய்ப்பற்றவர்களுக்கு இலவச சிகிச்சை !
ஷாருக்கின் ஜவான் பட முதல் பாடல், 24 மணி நேரத்தில் 46 மில்லியன் பார்வைகளைப் பெற்று வரலாற்று சாதனை படைத்து உள்ளது!!
இசையமைப்பாளர் கதிஜா ரஹ்மானின்  அறிமுகப்படமான 'மின்மினி'யில் தனது மாயாஜால இசை மூலம் அனைவரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார்!
'டான்' படப்புகழ் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி - ஸ்ரீ வர்ஷினி திருமணம் இனிதே நடைபெற்றது!
டெட்பூல் மற்றும் வால்வரினின் இந்திய ரசிகர்களுக்கான அட்வான்ஸ் புக்கிங்கை மார்வெல் ஸ்டுடியோஸ் இன்று முதல் தொடங்கி இருக்கிறது!
நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் சைக்காலஜிக்கல் திரில்லர் 'சபரி' திரைப்படம் மே 3, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!