உலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்

இந்திய நிறுவனம் ஒன்று, மிகவும் குறைவான விலையில், உலகின் அதிநவீன ஹெல்மெட்டை விற்பனைக்கு அறிமுகம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் விலை எவ்வளவு என தெரிந்தால், நீங்கள் உடனே இந்த ஹெல்மெட்டை வாங்கி விடுவீர்கள்.

சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில், டூவீலர்களில் பயணம் செய்யும் இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு இந்தியாவில் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதே கிடையாது. ஹெல்மெட் அணிந்தால் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுவதாகவும், இதன் காரணமாகதான் ஹெல்மெட் அணிவதில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். எனவே டூவீலர் ஓட்டிகளின் அசௌகரியங்களை களையும் வகையில், புதிய அதிநவீன ஹெல்மெட் ஒன்று தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிகவும் மலிவான விலையில் அறிமுகமாகியிருக்கும் இந்த ஹெல்மெட்டில் இடம்பெற்றிருக்கும் வசதிகள் ஆச்சஉலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான இந்தியாவின் ஸ்டீல்பேர்டு (Steelbird) தயாரித்துள்ள இந்த ஹெல்மெட்டிற்கு, எஸ்பிஏ-1 ஹெச்எப் (SBA-1 HF) என பெயரிடப்பட்டுள்ளது.

இதில், ஹெச்எப் என்பது ஹேண்ட்ஸ் ஃப்ரீ (Hands Free) என்பதை குறிக்கிறது.ரியம் அளிக்கும் வகையில் உள்ளன. உலகின் அதிநவீன ஹெல்மெட்களில் ஒன்றாக கருதப்படும் எஸ்பிஏ-1 ஹெச்எப் ஹெல்மெட்டின் பின் பகுதியில், 2 டிவைஸ்கள் இடம்பெற்றுள்ளது. இந்த டிவைஸ், ஹெல்மெட்டிற்குள் இருக்கும் காற்றை சுத்திகரிக்கும் திறன் கொண்டது.ஹெல்மெட் அணிவதன் காரணமாக, டூவீலர்களில் பயணிக்கும்போது, செல்போனில் வரும் அழைப்புகளுக்கு பதில் அளிக்க முடிவதில்லை, பாடல்களை ரசித்து கேட்க முடிவதில்லை என ஆதங்கப்படுபவர்களுக்கான பிரத்யேக வசதிகளும் எஸ்பிஏ-1 ஹெச்எப் ஹெல்மெட்டில் இடம்பெற்றுள்ளன. எஸ்பிஏ-1 ஹெச்எப் ஹெல்மெட்டில் இடம்பெற்றிருக்கும் ஒரு பட்டனை அழுத்துவதன் மூலமாக செல்போன் அழைப்புகளுக்கு பதில் அளிக்க முடியும். இதில், குறிப்பிடத்தகுந்த அம்சம் என்னவென்றால், உங்கள் குரல் மட்டுமே எதிர்முனையில் பேசி கொண்டிருப்பவர்களுக்கு கேட்கும். போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் இரைச்சல் அவர்களுக்கு கேட்காது. அதற்கு ஏற்ற வகையில், எஸ்பிஏ-1 ஹெச்எப் ஹெல்மெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரைச்சல் கேட்காது என்பதால், எவ்வித தடங்கலும் இன்றி செல்போனில் உரையாட முடியும்.செல்போன் அழைப்பை எடுக்க பயன்படுத்திய அதே பட்டனை மீண்டும் அழுத்துவதன் மூலமாக அழைப்பை துண்டிக்கவும் செய்யலாம். இதற்கு முதலில் உங்கள் செல்போனை, எஸ்பிஏ-1 ஹெச்எப் ஹெல்மெட் உடன் இணைக்க வேண்டும். எஸ்பிஏ-1 ஹெச்எப் ஹெல்மெட் வாட்டர் ஃப்ரூப் (Water Proof) வசதி கொண்டது என்பது மற்றொரு சிறப்பம்சம் ஆகும். இதில் உள்ள ஹேண்ட்ஸ் ஃப்ரீ பாகங்களை பாதுகாப்பதற்காக, ஐபி5 வாட்டர் ரெஸிஸ்டண்ட் (IP5 Water Resistant) வசதி வழங்கப்பட்டுள்ளது. சிகப்பு, கருப்பு மற்றும் வெள்ளை என மூன்று வண்ணங்களில் எஸ்பிஏ-1 ஹெச்எப் ஹெல்மெட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 58 செமீ முதல் 60 செமீ வரையிலான அளவுகளில், இந்த ஹெல்மெட் கிடைக்கும். சில சமயங்களில் ஹெல்மெட் அணிந்து கொண்டால், சாலையில் உடன் பயணிக்கும் மற்ற வாகனங்களின் சப்தம் கேட்காது. விபத்துக்கள் ஏற்பட இதுவும் ஒரு காரணமாக அமைகிறது. ஆனால் இந்த பிரச்னைக்கும் எஸ்பிஏ-1 ஹெச்எப் ஹெல்மெட்டில் தீர்வு காணப்பட்டுள்ளது.எஸ்பிஏ-1 ஹெச்எப் ஹெல்மெட்டில், சாலையில் ஏற்படும் இரைச்சலை நீக்கும் வசதி (Noise Cancellation Feature) வழங்கப்படவில்லை.

எனவே சாலையில் ஏற்படும் சப்தங்களை கேட்டு கொண்டு, அதற்கு ஏற்ப வாகனங்களை இயக்க முடியும்.ஆனால் ஏற்கனவே குறிப்பிட்டபடி செல்போனில் பேசும்போது, எதிர்முனையில் பேசுபவர்களுக்கு இரைச்சல் கேட்காது என்பது குறிப்பிடத்தக்கது. 2 ஆண்டு கால ஆராய்ச்சிக்கு பின் எஸ்பிஏ-1 ஹெச்எப் ஹெல்மெட்டை உருவாக்கியிருப்பதாக ஸ்டீல்பேர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு குறிப்பாக நகரங்களில் இரு சக்கர வாகனங்களை இயக்குபவர்களுக்கு, இந்த ஹெல்மெட் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. எஸ்பிஏ-1 ஹெச்எப் ஹெல்மெட்டில் இடம்பெற்றுள்ள வசதிகளுடன் ஒப்பிடுகையில், இதன் விலையும் மிக குறைவாகதான் உள்ளது. ஸ்டீல்பேர்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், எஸ்பிஏ-1 ஹெச்எப் ஹெல்மெட்டின் விலை 2,589 ரூபாய் மட்டுமே என குறிப்பிடப்பட்டுள்ளது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் இதை விட குறைவான விலைக்கு வாங்க முடியும் என கூறப்படுகிறது.தற்போது இந்தியா முழுவதும் எஸ்பிஏ-1 ஹெச்எப் ஹெல்மெட் விற்பனைக்கு தயாராக உள்ளது. மிகவும் குறைவான விலையில் அதிநவீன வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதால், எஸ்பிஏ-1 ஹெச்எப் ஹெல்மெட் விற்பனையில் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.