உற்றான் திரைப்பட நாயகன் ரோஷன் அறிமுக பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைப்பெற்றது. !

உற்றான் திரைப்பட நாயகன் ரோஷன் அறிமுக பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைப்பெற்றது. ! இந்நிகழ்ச்சியில் உற்றான் திரைப்படத்தின் இயக்குநர் ஓ.ராஜாகஜினி, மற்றும் கானா சுதாகர், தமிழ்நாடு பத்திரிக்கையாளர்களின் சங்க மாநிலத் தலைவரும், உற்றான் பட புதுமுக நாயகன் தந்தையுமான டி.எஸ்.ஆர் சுபாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது செய்தியாளார்கள் கேட்ட கேள்விகளுக்கு அறிவுப் பூர்வமாக பதிலளித்தார்.இயக்குநர் ஆக வேண்டும் என்று திரையுலகக்கு வந்த நீங்கள் நடிப்புத் துறைக்கு வந்தது பற்றி நிருபர் கேள்விக்கு பதிலளித்த ரோஷன்:

நான் சிறுவயது முதற்கொண்டு சினிமாவை நேசித்தது வருகிறேன்.எனக்கென்று திரைத் துறையில் என்ன வேலையென்றாலும் ஏற்றுக் கொள்ளும் மனபக்குவத்துடன் இருக்கிறேன்.நான் உதவி இயக்குநாகவும் பணியாற்றியிருக்கிறேன்.அடுத்து இயக்குநர், தயாரிப்பாளர் என எந்த பணி அமைத்தாலும் அதை ஈடுபாட்டுடன் செய்வேன்.லைட் பாய் வேலை கிடைத்திருந்தாலும் அதை ஈடுபாட்டுடன் செய்திருப்பேன்.
எக்காரணம் கொண்டும் நான் நேசிக்கும் சினிமாவை விட்டு விலகியிருக்க மாட்டேன்.

நான் சிறுவயதில் இயக்குநர்களை கண்டு வியப்பேன் , காரணம் ஷூட்டிங்கின் போது இயக்குநர் ரெய்ன் என்றால் மழை வரும். ஸ்டாப் என்றதும் மழை நின்று விடும் . சினிமா உலகில் இயக்குநர் , கடவுள் போல உணர்வேன். ஆகவே இயக்குகநர் பணி எனக்கு மிகவும் பிடிக்கும். இருந்தாலும் இப்போது நடிகன் – நான் சினிமாவில் கமல் சாரை பின்பற்றுவேன். புதுமுக நடிகர் ரோஷன்.நான் ஒரே மாதிரியான கேரக்டர் இல்லாமல் அனைத்து வகையான கேரக்டரிலும் கதைக்கும் , வித்தியாமான ரோலுக்கும் முக்கியத்துவம் கொடுப்பேன் .நான் நடிப்பில் கமல் சாரை பின்பற்றுவேன். இவ்வாறு ரோஷன் கூறினார்.