உணவு சேவை நிறுவனங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் !

தடை நீட்டிக்கப்பட்டிருப்பதை அடுத்து, உணவு சேவைகள் நிறுவனங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் என்றும் மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள் மூடப்பட்டால் ஆச்சரியமில்லை என்றும், இத்துறையை சேர்ந்த, யெலியோர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

தடை நீட்டிப்பின் காரணமாக, உணவு சேவைகள் துறையை சேர்ந்த நிறுவனங்களின் வருவாய், 70 சதவீதம் அளவுக்கு சரிவைக் காணும் என்றும் இந்நிறுவனம் கணித்துள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சஞ்சய் குமார் கூறியுள்ளதாவது: இந்திய உணவு சேவைகள் துறை, 53 ஆயிரத்து, 200 கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாகும்.விருந்தோம்பல் துறை, விமான போக்குவரத்து துறை ஆகியவற்றைப் போலவே,உணவு சேவைகள்,துறையும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிஇருக்கிறது.இந்த துறையானது, 60–70 சதவீதம் அளவுக்கு,வருவாய் இழப்பை சந்திக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. தற்போது எங்கள் நிறுவனத்தில், 5,200 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி உள்ளோம். இவர்களில், 25 அல்லது 30 சதவீதத்தினர் தான் வேலையை தொடர வாய்ப்பிருப்பதாக கருதுகிறேன்.

மேலை நாடுகளில், நிறுவனங்கள், ஊழியர்களுக்கு தர வேண்டிய ஊதிய சுமையில், ஒரு குறிப்பிட்ட பகுதியை,அரசாங்கமும் பகிர்ந்துகொள்கிறது. ஆனால் இங்கே அப்படி பார்க்க முடியவில்லை. தற்போதைய நிலையில், சம்பளத்தை வழங்க முடியாத நிலையில் தான் நிறுவனங்கள் உள்ளன.

சிறிய நிறுவனங்களாக இருந்தாலும் சரி, பெரிய நிறுவனங்களாக இருந்தாலும் சரி, இந்த நோய் தொற்றால், நீண்டகால பின்னடைவை சந்திக்கும் என, தெரிகிறது.இந்த துறையில், மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள் மூடப்பட்டால் ஆச்சரியமில்லை.இவ்வாறு, அவர் கூறி உள்ளார்