உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ?

தனியார் நிறுவனங்கள் வாடிக்கையாளரிடம் ஆதாரை வாங்கக் கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆதாரைப் பெற்றுக்கொண்டே புதிய சிம் வழங்குகின்றன.

ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், தனியார் நிறுவனங்கள் வாடிக்கையாளரிடம் ஆதாரை வாங்கக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் புதிய சிம் வாங்குவதற்கான அடையாளச் சான்றாக வாடிக்கையாளரிடம் ஆதாரைப் பெறக் கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது. இதேபோல வங்கிகள் புதிய கணக்குத் தொடங்க ஆதாரைப் பெறக் கூடாது என்றும் குறிப்பிட்டிருந்தது.இந்தத் தீர்ப்பு வந்து ஒரு மாதமாகியும் பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதை மீறும் வகையில் ஆதாரைப் பெற்றுக் கொண்டே புதிய சிம் வழங்கி வருகின்றன.