ஒரு புறம் அமெரிக்காவில் கரோனா பலி எண்ணிக்கை 1 லட்சம் முதல் 2, 40,000 வரை இருக்கலாம் என்ற அச்சுறுத்தல் இருந்து வரும் நிலையில் பொருளாதாரம் பெரும் பின்னடைவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.அமெரிக்க தொழிலாளர் துறை சுமார் 1 கோடியே 30 லட்சம் பேர் இதுவரை வேலையிழந்துள்ளனர், இது பலதுறைகளையும் சேர்த்து என்றும் இப்படியே போனால் 2 மாதங்களில் 4 கோடி பேர் வேலையிழக்கலாம் என்றும் 2009 பொருளாதார நெருக்கடியை விட மோசமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்,வியாழக்கிழமை தரவுகளின் படி பல லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். பாந்தியன் மேக்ரோ இகனாமிக்ஸ் ஆலோசனை நிறுவனம் கூறும்போது, “இப்படிப்பட்ட பயங்கரத்தைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியவில்லை” என்று வேதனை தெரிவித்துள்ளது.
மேலும் 50 லட்சம் பேர் வேலையின்மையினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடுகள் கோரியுள்ளனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.கடந்த வாரம் வெளியான அறிக்கைகளின்படி 66 லட்சம் பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது, மார்ச் 26 அறிக்கையிலேயே 33 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர்.பரவலான லாக்-டவுன் காரனமாக அமெரிக்கப் பொருளாதாரம் மார்ச் 12ம் தேதி வாக்கிலேயே 7 லட்சம் பேர் வேலையைப் பறித்துள்ளது. ஏப்ரலில் மட்டும் 1 கோடியே 30 லட்சம் பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது, தற்போது வேலையின்மை விகிதம் 15% ஆக உள்ளது.
வேலையின்மையினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க அமெரிக்க காங்கிரஸ் 2.2 ட்ரில்லியன் டாலர்கள் தொகையை அறிவித்துள்ளது. இதன் மூலம் நேரடியாக வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்துவது நடைபெறும். வேலையின்மை காப்பீடு 350 பில்லியன் டாலர்களாக விரிவு படுத்தப்பட்டுள்ளது.