இன்னும் 100 நாட்களில் இந்தியாவில் 5ஜி சேவை.!

இன்னும் 100 நாட்களில் இந்தியாவில் 5ஜி சோதனை முறையை துவங்கப்படும் என்று தெரிகின்றது. இதற்காக சீனாவை சேர்ந்த ஹூவாய் நிறுவனம் இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.இந்தியாவுக்கு வந்தாச்சு 5ஜி சேவை- இனி 100 நாட்களில் துவங்குகின்றது.! அமெரிக்காவின் தடையால் கடும் நெருக்கடியில் ஹூவாய் சிக்கிய இருக்கின்றது. இதை சமாளிக்க பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றது.இந்நிலையில் இந்தியாவுக்கும் 5ஜி சோனைதனை தொடர்பாக சிறப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ராணுவ ரகசியங்களையும் ஓட்டு கேட்டு சீனாவுக்கு தெரிவிப்பதாக ஹூவாய் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. மேலும், இதுகுறித்து அமெரிக்கா சிறப்பு குழுவின் விசாரணையிலும் ஹுவாய் இதுபோன்ற குற்றச்சாட்டுகளில் ஈடுபடுபதாக தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் சீனாவுக்கும் அமெரிக்காவும் வர்த்தக சண்டையில் ஈடுபட்டன. அப்போது ஹூவாய் நிறுவனம் அமெரிக்காவின் தொழில்நுட்பங்களையும் திருடுவதாக குற்றச்சாட்டுகளை முன் வைத்து ஹூவாய் நிறுவனத்தின் மீது இரட்டை தாக்குதல் நடத்தப்பட்டது.மேலும், ஹூவாய் நிறுவனத்துடன் வர்த்தகம் செய்ய அரசின் சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்று கோரிக்கையும் முன் வைத்தார் அதிபர் டிரம்ப்.ஹூவாய் நிறுவனத்தின் தொடர்புடைய சுமார் 80 நிறுவனங்களும் வர்த்த தடை ஏற்பட்டது. இதனால் அந்த நிறுவனங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின.

அமெரிக்காவின் திடீர் தடை உத்தரவால் பெரும் ஹூவாய் நிறுவனத்தின் 5ஜி சேவைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இந்த தடை தொடர்ந்தது.இதனால் ஹூவாயின் 5ஜி தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்று அமெரிக்கா பல்வேறு கடும் கட்டுப்பாடுகயும் விதித்தது. ஹூவாயுக்கு 5ஜி சேவையை முடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.அமெரிக்கா அரசின் நடவடிக்கை எதிரான நீதிமன்றத்தை நாடியுள்ளது ஹூவாய் நிறுவனம்.

5ஜி சோதனையில் பங்கேற்க அனுமதிப்பது குறித்து தங்கள் நிறுவனத்தின் மீது இந்தியா சுதந்திரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் சீனாவை சேர்ந்த ஹூவாய் நிறுவனம் வேண்டு கோள் விடுத்துள்ளது.இந்த நிலையில் ஹூவேய் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 20 ஆண்டுகளாக இந்திய அரசிடம் இருந்து முழு ஆதரவை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.5 ஜி சோதனையில் பங்கேற்க தங்களது நிறுவனத்தை அனுமதிப்பது குறித்து இந்தியா உண்மைநிலை அறிந்து, சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது