இந்தியாவில் சோனி இன்-இயர் வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம் !

சோனி நிறுவனத்தின் புதிய இன் இயர் வயர்லெஸ் ஹெட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.சோனி நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக வயர்லெஸ் இன்-இயர் ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது. புதிய சோனி ஹெட்போன் WI-1000XM2 என்ற பெயரில் அறிமுகமாகி இருக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 21,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய சோனி ஹெட்போனில் அதிநவீன நாய்ஸ் கேன்சலிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளதாக சோனி தெரிவித்துள்ளது. இதற்கென புதிய ஹெட்போனில் சோனி நிறுவனம் பிரத்யேக ஹெச்.டி. நாய்ஸ் சேன்சலிங் பிராசஸர் QN1 வழங்கியுள்ளது. புதிய ஹெட்போன் தற்சமயம் கருப்பு நிறத்தில் மட்டும் கிடைக்கிறது.இதில் அடாப்டிவ் சவுண்ட் கண்ட்ரோல் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இது வெளிப்புற சூழல் மற்றும் பயனரின் நடவடிக்கைக்கு ஏற்ப ஹெட்போன்களின் சத்தத்தை தானாக மாற்றியமைக்கும். ஆங்கில்டு இயர்போன் வடிவமைப்பு வெளிப்புற சத்தம் காதில் நுழைவதை தடுக்கிறது. புதிய ஹெட்போனில் மெல்லிய சிலிகான் நெக்பேண்ட் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

சோனி WI-1000XM2 ஹெட்போனில் பில்ட்-இன் மைக்ரோபோன் மற்றும் கூகுள் அசிஸ்டண்ட், அமேசான் அலெக்சா போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் ஹை-ரெஸ் ஆடியோ வசதியும் வழங்கப்பட்டுள்ளது.இதில் உள்ள பேட்டரி 10 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. மேலும் இதனை பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 80 மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும். புதிய ஹெட்போனினை சார்ஜ் செய்ய யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதில் ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் கழற்றக்கூடிய 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் பயன்படுத்த முடியும். சோனி WI-1000XM2 இன்-இயர் வயர்லெஸ் நாய்ஸ் கேன்சலேஷன் ஹெட்போன் சோனி விற்பனை மையம் மற்றும் ஆன்லைன் விற்பனை தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.