இந்தியாவில் ஏத்தர் லிமிட்டெட் எடிஷன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் !

பெங்களூருவை சேர்ந்த ஏத்தர் எனர்ஜி நிறுவனம் லிமிட்டெட் எடிஷன் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் வெளியிட இருக்கிறது. ஏத்தர் 450 எக்ஸ் பெயரில் இந்த ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முதற்கட்டமாக ஏத்தர் 450 எக்ஸ் லிமிட்டெட் எடிஷன் ஸ்கூட்டர் இந்தியாவின் பத்து நகரங்களில் விற்பனை செய்யப்படுகிறது.பத்து நகரங்கள் பட்டியலில் பூனே, மும்பை, பெங்களூரு, டெல்லி என்.சி.ஆர்., சென்னை மற்றும் ஐதராபாத் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இவற்றுடன் கோயம்புத்தூர், கொச்சி, கொல்கத்தா மற்றும் ஆமதாபாத் போன்ற நகரங்களில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் லிமிட்டெட் எடிஷன் மாடல் தற்சமயம் விற்பனை செய்யப்படும் 450 மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. ஏத்தர் 450 மாடலில் 2.4kWh, IP67 தரச்சான்று பெற்ற லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பி.எல்.டி.சி. மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.இது 7.1 பி.ஹெச்.பி. பவர், 20.5 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. ஏத்தர் 450 ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி நிமிடத்திற்கு ஒரு கிலோமீட்டர் வரை செல்லும் திறன் அளவுக்கு ஸ்கூட்டரை சார்ஜ் செய்திட முடியும்.

ஏத்தர் 450 மாடலில்: இகோ, ரைடு மற்றும் ஸ்போர்ட் என மூன்றுவித மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 75 கிலோமீட்டர்கள், 65 கிலோமீட்டர்கள் மற்றும் 55 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க வழி செய்கின்றன. மற்ற அம்சங்களை பொருத்தவரை ஏத்தர் 450 ஸ்கூட்டரில் 7.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, ரிவர்ஸ் மோட் மற்றும் ஒ.டி.ஏ. மென்பொருள் அப்டேட்கள் வழங்கப்படுகின்றன.