இந்தியர்கள் வருமானத்தில், 10 சதவீதம் மருத்துவ சிகிச்சைகளுக்கு செலவிடுகின்றனர்?

வருமானத்தில், 10 சதவீத தொகையை, மருத்துவ சிகிச்சைகளுக்காக இந்தியர்கள் செலவிடுவதாக, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இலங்கை, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில், மருத்துவ சிகிச்சைகளுக்கு மக்கள் செலவிடும் தொகை குறித்து ஆய்வு நடத்திய, உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:இந்தியர்களில், 23 கோடி பேர், அதாவது, நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 17 சதவீதம் பேர், தங்கள் வருமானத்தில், 10 சதவீதத்துக்கும் மேல், மருத்துவ சிகிச்சைகளுக்கு செலவிடுகின்றனர். இது, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விட அதிகம். இலங்கையில், 2.9 சதவீதம்; பிரிட்டனில், 1.6 சதவீதம்; அமெரிக்காவில், 4.8 சதவீதம் மற்றும் சீனாவில், 17.7 சதவீதத்தினர், மருத்துவ சிகிச்சைக்காக வருமானத்தில், 10 சதவீதத்துக்கும் அதிகமாக செலவிடுகின்றனர்.

பெரும்பாலானோர், தங்கள் வருமானத்தில் பெரும் பங்கு அல்லது வருமானத்துக்கு மேல் மருத்துவ சிகிச்சைகளுக்கு செலவிடும் போது, வறுமை நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்தியாவில், அரசின் சுகாதார திட்டங்களை அனைவராலும் பெற இயலவில்லை. இதனால், நோயாளிகள் உயிரிழப்பது கவலையளிக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது