இடையீட்டு கதிரியக்கவியல் வழிகாட்டுதலில் முடநீக்கியல் அறுவை சிகிச்சைக்கு மறுவிளக்கம் அளிக்கும் எம்ஜிஎம் ஹெல்த்கேர்

நகரின் மையத்தில் அமைந்துள்ள நான்காம் நிலை மருத்துவமனையான எம்ஜிஎம் ஹெல்த்கேர், நாட்டிலேயே முதன் முறையாக இடையீட்டு கதிரியக்கவியல் வழிகாட்டுதலுடன் சிடி சூட்டில் காணப்பட்ட எலும்புக் கட்டிக்கான குறைந்தபட்சத் துளைஅறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இது எலும்பு மற்றும் மெல்லிய திசுக் கட்டிகளை அதிகத் துல்லியத்துடன் கண்டுபிடித்து அகற்றும் அணுகுமுறையாகும். இந்தியாவில் இந்தப் புதுமையான அணுகுமுறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் முழுமையான மற்றும் குறைந்தபட்சத் துளைஅறுவை சிகிச்சையை முறையை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல எம்ஜிஎம் ஹெல்த்கேர் முனைந்துள்ளது. குறைந்தபட்சத் துளைஅறுவை சிகிச்சை முறை சென்னையைச் சேர்ந்த 30 வயது ஸ்ரீதருக்கு நடத்தப்பட்டது.

இது குறித்து எம்ஜிஎம் ஹெல்த்கேர் இயக்குனர் டாக்டர் பிரசாந்த் ராஜகோபாலன் கூறுகையில் ‘சிறப்பு மருத்துவங்களின் கலவையாகவும், பல்துறை அணுகுமுறை கொண்ட மருத்துவமனையாகவும், எம்ஜிஎம் ஹெல்த்கேர் திகழ்கிறது. இரு வித்தியாசமான சிறப்பு மருத்துவப் பிரிவுகளைஅதிகத் திறனுடன் ஒருங்கிணைத்து நோயாளிக்குப் புதிய சிகிச்சை முறையை உருவாக்கி உள்ளோம்’என்றார்.

ஒரு வருடத்துக்கு முன்பு ஸ்ரீதர் உடற்பயிற்சி மையத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது வலது முழங்கைக்குக் கீழே கடுமையான வலியிருப்பதை உணர்ந்தார். பொது மருத்துவரைச் சந்தித்து எக்ஸ்ரே எடுத்ததில் காயமோ, சிதைவுப் புண்ணோ காணப்படவில்லை. வலியைக் குறைக்கச் சில மாத்திரைகள் கொடுக்கப்பட்டது. எனினும் சிறிது நேரத்துக்குப் பிறகு மீண்டும் வலிக்கத் தொடங்கியது. மருத்துவப் பரிசோதனையில் ‘டென்னிஸ் எல்போ’ என்றும் அதற்கு இயன் மருத்துவ சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டது. ஆனாலும் வலி குறையவில்லை. இரவு நேரங்களில் வலி கடுமையாகித் தூக்கமற்ற இரவுகளைத் தந்தது. பல மாதங்கள் வலியுடன் போராடிய நிலையில், நண்பர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனைக்கு வருகை தந்தார். மருத்துவ மற்றும் சிடி ஸ்கான், 3 டெஸ்லா எம்ஆர்ஐ ஸ்கான் ஆகியவை மூலம் அதி நவீன நோய்க்குறி அறிதல் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. உயர் ரிசல்யூஷன் ஸ்கான் பரிசோதனையில் சந்தேகத்துக்கிடமான சிதைவுப் புண் – எலும்புத் திசுத் திரள் கட்டி – முழங்கையில் காணப்பட்டது. மேலும் இந்தக் கட்டி சிகிச்சை அளிக்க முடியாத இடத்தில், மூட்டு முனைக்கருகே இருப்பதால், தாங்க முடியாத வலிக்கும் காரணமானது.

கட்டி இருக்கும் இடம் அறுவை சிகிச்சைக்குச் சவாலான இடம் என்பதால், இடையீட்டு கதிரியக்க நிபுணர்கள் மற்றும் முடநீக்கியல் நிபுணர்கள் அடங்கிய குழு இணைந்து சிகிச்சை அளிக்க முடிவானது. ஸ்ரீதரிடம் சிகிச்சை முறை தெரிவிக்கப்பட அவரும் ஒப்புக் கொண்டார்.

எம்ஜிஎம் ஹெல்த்கேர் முடநீக்கியல் துறைத் தலைவர் & மூத்த மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஏ பி கோவிந்தராஜ் கூறுகையில் ‘எலும்புத் திசுத் திரள் கட்டிக்கான சிகிச்சை கணிசமான அளவு எலும்பை அகற்றும் வழக்கமான அறுவை சிகிச்சை ஆகும். ஆனால் சிகிச்சை அளிக்க முடியாத அளவுக்கு எலும்பு மூட்டுப் பகுதியைக் கடுமையாகப் பாதித்துவிடும். நோயாளி இளைஞர் என்பதால் மேற்கூறிய வழக்கமான அறுவை சிகிச்சைக்குப் பதிலாக மாற்று வழியை யோசித்து, இமேஜ் வழிகாட்டுதல் மூலம் அகற்றும் முறைக்கு எங்கள் இடையீட்டு கதிரியக்க நிபுணர்களிடம் நோயாளியை அனுப்பினோம்’ என்றார்.

எம்ஜிஎம் ஹெல்த்கேர் மூத்த மருத்துவ ஆலோசகரும், மருத்துவச் சேவைகள் இணை இயக்குனருமான டாக்டர் நவீன் ஞானசேகரன் மற்றும் இடையீட்டு கதிரியக்கவியல் துறை ஆலோசகர் டாக்டர் அருண்குமார் நீலகண்டன் ஆகியோர் பேசுகையில் ‘எலும்புத் திசுத் திரள் கட்டிக்கான மிகச் சிறந்த சிகிச்சை முறை குறைந்தபட்சத் துளை சிடி வழிகாட்டுதலுடன் கூடிய கதிரியக்கவியல் நீக்கம் ஆகும். இந்த நோயாளியைப் பொருத்தவரை கட்டி சிக்கலான இடத்தில் இருப்பதால், இவ்வகைச் சிகிச்சைகள் முழுமையாக நிறைவடையாமல் அரைகுறையாக முடியும். மேலும் கடுமையான வெப்பம் அருகிலிருக்கும் மூட்டு குருத்தெலும்பையும் சேதப்படுத்தி இருக்கும். எங்கள் முடநீக்கியல் மருத்துவர்களுடன் கலந்தாலோசித்து எங்கள் சிடி சூட்டில் இடையீட்டு கதிரியக்கவியல் வழிகாட்டுதலின் கீழ் பல்துறை எலும்பு அறுவை சிகிச்சையை செய்ய முடிவெடுத்தோம். இதனைத் தொடர்ந்து சிடி வழிகாட்டுதலில் துல்லியமாகத் துளையிட்டுச் திசுக் திரள் கட்டியைச் சுரண்டி எடுத்தோம்’ என்றார்.

சிடி ஸ்கான் உதவியுடன் முதலில் கட்டி இருக்கும் இடத்தைத் தெரிந்து கொண்டோம். 3டி மீட்டுருவாக்கம் மற்றும் லேசர் வழிகாட்டுதல் உதவியுடன், முடநீக்கியல் – இடையீட்டு கதிரியக்கவியல் கூட்டுக் குழு கட்டி இருக்கும் இடத்தைக் துல்லியமாகக் கண்டறிந்து நுழைவுப் புள்ளியைத் திட்டமிட்டது. சருமத்தில் மிகச் சிறிய 5 மிமீ அளவில் துல்லியமாகத் துளையிட்டுச் சுரண்டி எடுத்தோம். ஆர்பி நீக்கத்தை விடவும் துளையிடுதல் மற்றும் சுரண்டலின் போது மீள் நிகழ்வு விகிதம் சற்றே அதிகம் என்பதால் கட்டியை முழுமையாக அகற்றியதை இமேஜிங்க் மற்றும் திசுநோயியல் துறைகள் உறுதிப்படுத்தின. சருமத் துளை ஸ்டேப்பிள்ஸ் தைப்புக் கருவி மூலம் மூடப்பட்டது.
டாக்டர் கோவிந்தராஜ் மேலும் தொடர்கையில் ‘மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியமற்றப் பகல் நேரச் சிகிச்சை என்பதால் ஸ்ரீதர் 24 மணி நேரத்துக்குள் மருத்துவமனையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டார். அறுவை சிகிச்சை முடிந்த அடுத்த நாள் முதற்கொண்டே அவருக்கு வலி நிவாரணிகள் தேவைப்படவில்லை. 20 நாள்களுக்குப் பிறகு கடுமையான வலியிலிருந்தும் முழுமையாக விடுதலை பெற்றதால் ஒராண்டுக்குப் பின்னர் இரவு நன்றாகத் தூங்கினார்’ என்றார்.

இடையீட்டு கதிரியக்கவியல் வழிகாட்டுதலின் கீழ் சிடி சூட்டில் உள்ள எலும்புத் திசுத் திரள் கட்டிக்கான முடநீக்கியல் அறுவிய சிகிச்சை இந்தியாவிலேயே முதல் முறையாக செய்து கொண்ட ஸ்ரீதர் இது குறித்துக் குறுகையில் ‘கடந்த ஒரு வருடமாகவே கடுமையான வலியால் துடித்துக் கொண்டிருந்தேன். எனவே டாக்டர் கோவிந்தராஜ் சிடி ஸ்கான் வழிகாட்டுதலில் குறைந்தபட்சத் துளை அறுவை சிகிச்சை முறையைச் சொன்ன போது உடனே எனது சம்மதத்தைத் தெரிவித்தேன். இந்தப் புதிய சிகிச்சை முறை வேகமானது மற்றும் கட்டாயம் பலனளிக்கக் கூடியதாகும். சிகிச்சை முடிந்த உடனேயே நான் முன்பை விடவும் பாவாயில்லை என்றும் மிக வேகமாகக் குணமடைவதையும் உணர்ந்தேன். வரும் காலங்களில் இந்தப் புரட்சிகரமான தொழில்நுட்பம் மூலம் மேலும் பல நோயாளிகள் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.

சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ள நான்காம் நிலை எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை 400 படுக்கைகள், 100 ஐசியூ படுக்கைகள், 250+ மருத்துவர்கள், 12 செண்டர்ஸ் ஆஃப் எக்ஸலன்ஸ், 30+ துறைகள், 12 அறுவை சிகிச்சை அறைகள், 24×7 அவசர சிகிச்சை என பரந்து விரிந்துள்ளது. 3 டெஸ்லா எம்ஆர்ஐ ஸ்கேனர், பைபிளேன் கேத் லேப், மேமோகிராம் எந்திரம், வயர்லெஸ் ஃபீடல் கண்காணிப்பு எந்திரம், ஐஓடி இயலுறு ஐசியூ சார்டிங்க் எந்திரம், நியூரோநேவிகேஷன் எந்திரம் உள்ளிட்ட அதி நவீன ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட் தொழில்நுட்பங்கள் உள்ளன. அறுவை சிகிச்சை நிபுணர்கள், பொது மருத்துவர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த தொழில்கள், நிர்வாகம் மற்றும் பராமரிப்பு ஊழியர்கள் என அனுபவமும், ஆற்றலும் நிறைந்தவர்களைக் கொண்டுள்ளது. இயக்குனர் டாக்டர் பிரசாந்த் ராஜகோபாலன் மற்றும் சிஇஓ டாக்டர் ராகுல் மேனன் தலைமையில் தனிப்பட்ட கவனத்துடன் உயரிய மருத்துவ சிகிச்சைக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

Related posts:

‘மிகமிக அவசரம்’ ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் தமிழ்க்குடிமகன்
தேவையை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் வாகன துறையினர் இறங்க வேண்டும் !
காமெடி கிங் கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் முழு நீள நகைச்சுவை திரைப்படம் 'ஒத்த ஓட்டு முத்தையா'!
ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் YES BANK ? PHONE PE க்கு பாதிப்பு?
தமிழ்நாட்டில் கருவுறாமை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது !
திவால் சட்டம் அமலுக்கு வந்த பின் வாராக் கடன்களுக்கு தீர்வு!
இதுதான் நடக்கிறது மருத்துவமனைகளில்...! இரு மருத்துவர்களின் ஒப்புதல் வாக்குமூலம் ?
நல்ல காலம் பொறக்குது ! உடன்பிறப்புகளுக்கு நல்ல காலம் பொறக்குது !!