ஆன்லைன் மளிகை வியாபாரம் ரூ.74,000 கோடிக்கு அதிகரிக்கும்.

ஆன்லைன் மளிகை வியாபாரம் வரும் 2023ம் ஆண்டில் 55 சதவிகிதம் அதிகரித்து 74,000 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்று ஆய்வு நிறுவனமான ரெட்சீர் அறிக்கையில் கூறியுள்ளது.சர்வதேச அளவில் சில்லறை விற்பனை 10 சதவிகிதம் என்றும், இதில் ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை விற்பனை 3.5 சதவிகிதம் ஆகும். இதே ஆன்லைன் மளிகை 0.2 சதவிகிதம் என்றும் கூறப்படுகிறது.எவ்வாறயினும் அனைத்து கண்களும் தற்போது ஆன்லைன் விற்பனையின் பக்கம் திரும்பியுள்ளது உண்மையே.

இந்த நிலையில் இது குறித்து ரெட் சீர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 2023ம் ஆண்டில் ஒட்டுமொத்த சந்தையில் 1.2 சதவிகிதத்தை எட்டும் என்றும், இது 55 சதவிகித வளர்ச்சி கண்டு, 74,000 கோடி ரூபாயாக பெருகும் என்றும் கூறியுள்ளது. இந்த நிலையில் ஆன்லைன் விற்பனையை ஊக்கப்படுத்தவும், தங்களது விற்பனையை மேம்படுத்தவும் அமேசான், பிளிப்கார்ட், க்ரோஃபர்ஸ் மற்றும் பிக்பாஸ்கெட் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது திட்டங்களை வெளீயிட்டு வருகின்றன.

இந்த நிறுவனங்களின் திட்டத்தில் பிக் பாஸ்கெட் அதிகளவு ஈடுபாட்டைக் கொண்டுள்ளது என்று ரெட் சீர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வளர்ச்சியடைந்த மெட்ரோ வாடிக்கையாளர்களை விட, அதற்கு அடுத்த இடத்தில் உள்ள இரண்டாம் நகர வாடிக்கையாளர்கள் மிகுந்த ஈடுப்பாட்டுடன் உள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏனெனில் ஜெய்ப்பூர் போன்ற நகரங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் மளிகை பிரிவுக்காக அதிக செலவு செய்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.இதே ஆஃப் லைனில் பெரிய அளவில் கடைகள் மிகக் குறைவாக இருப்பதே என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக ஜெயிப்பூரில் நவீன சில்லறை விற்பனை நிலையங்கள் நகரத்திற்குள் உள்ள பிரபலமான பகுதிகளில் மட்டுமே உள்ளன என்றும் ரெட்சீர் அறிக்கையில் கூறப்படுகிறது. இந்த நேரத்தில் ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்கள் புறநகர்ப் பகுதிகளில் தங்கள் இருப்பைக் குறி வைத்திருப்பதாகவும் கூறப்படும் நிலையில், ஆன்லைனில் தற்போது அனைத்து வகையான சிறப்பு பொருட்களையும் கூட தற்போது வாங்க தயாராக உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

அதிலும் குறிப்பாக பிராண்டட் தின்பண்டங்கள், நாம்கீன்கள் ஆன்லைனில் அதிகம் விரும்பி வாங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது தவிர காலை உணவு தானியங்கள், இது தவிர TOO YOU OR PRINGLES உள்ளிட்ட சிப்ஸ் வகைகளும், பிஸ்கட் மற்றும் குக்கீஸ், குறிப்பாக இதில் மிக விரும்பி சாப்பிடப்படும் பிராண்டட் வகைகள் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும் கூறப்படும் நிலையில், இதன் வளர்ச்சி விகிதம் 14.5 சதவிகிதம் பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக சாக்லேட்கள் மற்றும் மிக விலை உயர்ந்த மிட்டாய்கள் உயர்ந்த பதிவை செய்தன என்றும் கூறப்படுகிறது. இதே நம்ம ஊர் கடலை மிட்டாய் போன்று இருக்கும் பல வகை தானியங்களை உபயோகப்படுத்தி செய்யப்படும் தானிய பார்கள் மற்றும் கிரானோலா 46.5 சதவிகித வளர்ச்சியும் கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இது தவிர மக்களை அதிகப்படியான தள்ளுபடிகளும், சிறப்பு சலுகைகளுமே ஈர்க்கின்றன. இந்த நிலையில் இந்த ஆன்லைன் நிறுவனங்கள் இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, அவர்களது சொந்த லேபிள்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் க்ரோப்பர்ஸ் 40 சதவிகிதம் சொந்த லேபிள்களை விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது. இதே அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்காள் கூட தனியார் லேபில்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளன.
ஆக மொத்தம் எப்படியோ மக்கள் இனி கடைக்கு போவதை வெகுவாக குறைத்து கொண்டே வருவதை இதன் மூலம் மறைமுகமாக நாம் அறிய முடிகிறது.