ஆதார் எண்ணை இணைக்காத பான் கார்டுகள் முடக்கப்படும்.!

ஆதார் எண்ணை இணைக்காத பான் கார்டுகள் இன்னும சில நாட்களில் முடக்கப்படலாம். மத்திய நேரடி வரி வாரியம் (CBDT) ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க மார்ச் 31, 2019 வரை அவகாசம் அளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், வரும் 31ஆம் தேதிக்குப் பின் ஆதார் எண்ணும் பான் கார்டும் இணைக்கப்படவில்லை என்றால் அந்த பான் கார்டு முடக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது. வருமான வரி பிடித்தத்தை திரும்பப் பெறவும் முடியாது. வங்கிக் கணக்கு தொடங்குவது போன்ற பல தேவைகளுக்கு பான் கார்டு முக்கிய ஆவணமாக இருப்பதால் பல வகைகளில் சிக்கல் ஏற்படும்.இதனைத் தவிர்க்க பான் கார்டுடன் ஆதார் எண்ணை மார்ச் 31ஆம் தேதிக்குள் இணைத்துவிடுவது நல்லது. கடந்த ஆண்டு மட்டும் 11.44 லட்சம் பான் கார்டுகள் பல்வேறு காரணங்களுக்காக முடக்கப்பட்டுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2018 மார்ச் நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள 33 கோடி பான் கார்டுகளில் 16.64 கோடி கார்டுகளில் மட்டுமே ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வருமானவரித்துறையின் https://www.incometaxindiaefiling.gov.in/home என்ற இணையதளத்துக்குச் சென்று Link Aadhaar பக்கத்துக்குச் செல்லவும். ஆதார் எண் பான் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க, https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/AadhaarPreloginStatus.html என்ற முகவரிக்குச் செல்லவும்.

Related posts:

மினிமம் பேலன்ஸ் விதிகள் ரத்து? மறுபரிசீலனை செய்கிறது ரிசர்வ் வங்கி ?
கடன்களுக்கான தவணை தொகை மூன்று மாதங்களுக்கு மட்டுமே தள்ளிப் போடப்பட்டுள்ளது.?
பழைய வீடுகளை விற்று புது வீடு வாங்கினாலும் வரிச்சலுகை பெறலாம் ! வருமான வரித்துறை தீர்ப்பாயம் உத்தரவு !!
டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேம்படுத்த புதிய குழு !
வருமான வரித் துறை அதிகாரிகள் கண்காணிக்கப்பட வேண்டும் ? ஆடிட்டர்கள் கோரிக்கை !
சென்னையில் தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீடு தீர்ப்பாய அமர்வு !
பொதுத்துறை வங்கிகளின் வாடிக்கையாளர் சேவை நேரம் மாற்றம் !
5 முறைக்கு மேல் ஏடிஎம்களில் பணம் எடுத்தால் மட்டுமே கட்டணம்..! ஆர்பிஐ அதிரடி!