ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் சரத்குமார் பரிசுகள் வழங்கினார்.

பால்சன் பியூட்டி அண்ட் ஃபேஷன் (பி) லிமிடெட்டின் ஸ்லாம் லைஃப்ஸ்டைல் அண்ட் ஃபிட்னஸ் ஸ்டுடியோ கடந்த 26ந் தேதி ஸ்லாம் கிளாசிக் 1.0 என்கிற ஆணழகன் போட்டியை நடத்தியது. சென்னை அண்ணாசாலையில் உள்ள ஹயாத் ஓட்டலில் Dr ஜமுனாபாயி. ஸ்கின் லேப்இந்த போட்டியை நடத்தியது. இந்த ஆணழகன் போட்டியில் பல்வேறு பகுதிகளில் இருந்து 80 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்தப் போட்டியில் கலந்துகொண்டவர்களில் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்க ஹைதராபாத்தைச் சேர்ந்த குமார் மானவா, மும்பையைச் சேர்ந்த தேஜல்கடம், சென்னையைச் சேர்ந்த திமோதி செல்வோரும் நடுவர்களாக பங்கேற்று வீர்களைத் தேர்வு செய்தனர்.

இந்நிகழ்ச்சி குறித்து பால்சன் குரூப் இயக்குனர் Dr.எஸ்ஆர் சாம் பால், பேசும்போது:இதுபோன்ற நிகழ்ச்சிகளில் நாங்கள் முன்னணியில் இருக்கிறோம். ஸ்லாம் கிளாசிக் என்ற நிகழ்ச்சி மூலம் ஆணழகன்களைத் தேர்ந்தெடுத்திருப்பது எங்களுக்குப் பெருமையே! இந்த ஆணழகன் போட்டி எங்களின் முதல் நிகழ்ச்சியாகும். இந்த போட்டியில் வெற்றிபெற்றவர்கள் தேசிய அளவில் வெற்றி பெற வேண்டுமென்பதே எங்கள் நோக்கமாகும் என்றார். அஜித் ராஜா சாம்பியன் ஆஃப் சாம்பியன் விருது வென்றார். மேலும் பல்வேறு பிரிவுகளில் டொமினிக் ஆரோக்கியராஜ், அருண்பிரசாந்த், விவேகானந்த் சண்முகம் ஆகியோர் பரிசுகள் வென்றனர்.