ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய திட்டங்கள் !

ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு!  ஆட்டோமொபைல் துறையை சரிவிலிருந்து மீட்பதற்கான புதிய திட்டங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று அறிவித்துள்ளார். வாகன விற்பனை கடும் சரிவு கடந்த ஜனவரி மாதம் முதல் ஆட்டோமொபைல் துறை வளர்ச்சி வெகுவாக குறைந்து வருகின்றது. கார் மற்றும் பைக் விற்பனை கடுமையாக சரிந்துள்ளதையடுத்து, இந்த துறையில் பல லட்சம் வேலைவாய்ப்புகள் பறி போக துவங்கியுள்ளன. பல்லாயிரம் கோடிகளை முதலீடு செய்துள்ள வாகன உற்பத்தி நிறுவனங்கள் கலக்கத்தில் உள்ளன. புதிய விதிகளால் சுணக்கம் மத்திய அரசின் புதிய பாதுகாப்பு விதிமுறைகள், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள், ஜிஎஸ்டி வரி உள்ளிட்டவை ஆட்டோமொபைல் துறையை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்வதாக கருத்துக்கள் மேலோங்கின. இதில், அரசு தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. பொருளாதார மந்த நிலை ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சி நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வீழ்ச்சியின் பிரதிபலிப்பாகவே பேசப்படுகிறது.

இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது, பொருளாதார வளர்ச்சியை தக்க வைப்பதற்கான சில முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளார். குறிப்பாக, ஆட்டோமொபைல் துறைக்காக பல முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார். புதிய பதிவுக் கட்டண முறை அதன்படி, புதிய வாகனங்களுக்கான பதிவுக் கட்டணத்தை பல மடங்கு உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. அந்த திட்டத்தை வரும் 2020ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஒத்திப்போடுவதற்கு முடிவு செய்துள்ளதாக நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

எலெக்ட்ரிக் வாகனங்களை போலவே, பெட்ரோல், டீசல் வாகனங்கள் தொடர்ந்து பதிவு செய்யப்படும். இதில் எந்த குழப்பமும் இல்லை என்று தெளிவுப்படுத்தி உள்ளார். முழுமையான ஆயுட்காலம் அடுத்த ஆண்டு மார்ச் வரை இருந்த வாங்கப்படும் பிஎஸ்-4 மாசு உமிழ்வு தர கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் பதிவு செய்யப்படும் ஆண்டுகள் வரை முழுமையாக பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது. குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மேல் பிஎஸ்-4 வாகனங்கள் தடை செய்யப்படலாம் என்ற அச்சமும் இதன் மூலமாக நீங்கி இருக்கிறது. யாரும் அறியாத பிரம்மிப்பான பாதுகாப்பு ரகசியங்கள் பழைய வாகன ஒழிப்பு திட்டம்! மேலும், குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மேலான கார்களை ஒழிப்பதற்கான புதிய திட்டத்தையும் மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார். 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை ஒழிக்க வேண்டும் என்று கார் நிறுவனங்கள் மிக நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றன. எனவே, இந்த திட்டமும் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான திட்டம் மத்திய அரசிடம் உள்ளது. இதனால், புதிய வாகனங்கள் விற்பனை அதிகரிக்கும்.

அரசுத் துறைகளுக்கான பயன்பாட்டிற்காக புதிய கார்கள் வாங்குவதற்காக விதிக்கப்பட்ட தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால், பழைய வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்களை வாங்குவதற்கு அரசுத் துறைகளிலிருந்து புதிய ஆர்டர்களை கார் நிறுவனங்கள் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வாகனக் கடன் வட்டி குறைப்பு வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், கார் வாங்குவோரை கவர்ந்து இழுக்கும் வாய்ப்பை நிறுவனங்கள் பெற முடியும். மொத்தத்தில், இந்த புதிய அறிவிப்புகள் வாகனத் துறையை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் வாய்ப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.