ஆசுஸ் பிரத்தியேக ஸ்டோர் சென்னையில் அறிமுகம் !

தொழில்நுட்ப நிறுவனமான ஆசுஸ் இந்தியா தனது அதிநவீன புதிய ஸ்டோரை சென்னையில் தொடங்குவதாக அறிவித்தது. ஆசுஸ் இந்தியாவின் விநியோக மற்றும் வணிக மேலாளர் பியூஷ் சேத் மற்றும் ஸ்டோரின் உரிமையாளர் குஷால் பஜாஜ் ஆகியோர் ஆசுஸ் பிரத்தியேக கடையை திறந்து வைத்தனர். புதிய ஆசுஸ் பிரத்தியேக ஸ்டோரானது, பிராண்டின் முதன்மை தயாரிப்புகளான விவோபுக், ஜென்ப்புக், ஜென்புக்-ஃபிளிப், மற்றும் ரிப்பப்ளிக் ஆஃப் கேமெர்ஸ் (ஆர்.ஓ.ஜி) மடிக்கணினிகள் உள்ளிட்ட விரிவான எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கணினி வன்பொருள்களை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளது, பிராண்டின் புதிய ஆசுஸ் பிரத்தியேக ஸ்டோரானது டாட் காம், புதிய எண்- ஏஜி 63, பழைய எண்- ஏஜி 31, சாந்தி காலனி, மெயின் ரோடு, 4 வது அவென்யூ, அண்ணா நகர், சென்னை. என்ற இடத்தில அமைந்துள்ளது.இந்த ஸ்டோரின் துவக்கம் 2020 க்குள் 200 கடைகளைத் திறந்து பயனர்களுடன் அதன் கடைசி மைல் இணைப்பை வலுப்படுத்தும் ஆசுஸ் முயற்சியின் ஒரு பகுதியாக அமைத்துள்ளது.வலுவான விரிவாக்கத் திட்டத்துடன், ஆசுஸ் 2019 க்குள் முதல் 3 நோட்புக்(லேப்டாப்) நிறுவணங்கில் ஒருவராக இருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது

புதிய ஸ்டோர் துவக்கமானது பல்வேறு சந்தை அடுக்குகளில் அதன் சந்தை இருப்பை விரிவுபடுத்துவதற்கான ஆசுஸின் பார்வையின் ஒரு பகுதியாக இந்த நிதியாண்டின் இறுதிக்குள் 100 ஸ்டோர்களை நிறுவனம் திறக்கவுள்ளது, இந்த ஸ்டோர் பயனர்களுக்கு பிராண்டின் சமீபத்திய மற்றும் முதன்மை தயாரிப்புகளை எளிதாக அணுகும். ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ஸ்டோருக்கு சென்று விவோபுக், ஜென்ப்புக், ஜென்புக்-ஃபிளிப் மற்றும் ரிப்பப்ளிக் அப் கேமெர்ஸ் (ஆர்ஓஜி) மடிக்கணினிகள் உள்ளிட்ட பலவகையான ஆசுஸின் முன்னிலை வாய்ந்த புதுமையான தயாரிப்புகளை அனுபவிக்க முடியும்.

ஸ்டோர் துவக்கம் குறித்து கருத்து தெரிவித்த, ஆசுஸ் இந்தியா நிறுவனத்தின், நுகர்வோர், வணிக மற்றும் கேமிங் பிசி வணிகத் தலைவர் அர்னால்ட் சு அவர்கள் கூறியது “தமிழ்நாட்டின் சென்னையில் ஆசுஸ் ஸ்டோர் தொடங்கப்படுவதை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். புதிய ஸ்டோர் துவக்கத்துடன், இந்த நிதியாண்டின் இறுதிக்குள் 100 புதிய கடைகளைத் திறக்கும் எங்கள் பார்வையை வெற்றிகரமாக முன் வைத்துள்ளோம். தொழில் மற்றும் வாடிக்கையாளர் அனுபவங்களை எதிர்காலத்தில் முன்னெடுத்துச் செல்வதற்காக ஆசுஸ் சில்லறை தொழில்நுட்பத்தை மீண்டும் உருவாக்கி வருகின்றோம். ஆர்வமுள்ள பயனர்கள் ஸ்டோருக்கு சென்று ஆசுஸ் வழங்கும் புதுமையான மற்றும் அதிநவீன தயரிப்புகளை இங்கு பெறமுடியும் ”

ஆசுஸ் பிரத்தியேக ஸ்டோர்களுடன் கூடுதலாக, ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் குரோமா போன்ற பெரிய வடிவிலான கடைகள் மூலமாகவும் ஆசுஸ் ஒரு வலுவான வாடிக்கையாளர் இணைப்பைக் கொண்டுள்ளது. அதன் பெரிய சில்லறை நெட்வொர்க்கில் பங்களிப்பதற்கு இந்தியாவில் 600 மாவட்டங்களில் பரவியுள்ள சில ஆயிரம் மறுவிற்பனையாளர்கள். தவிர, ஆசுஸின் ஆன் சைட் சேவை தடம் இந்தியாவில் 20,000 அஞ்சல் குறியீடுகளை உள்ளடக்கியுள்ளது. ஆஃப்லைன் இணைப்பிற்கு கூடுதலாக; தொழில்துறை முன்னணி வாய்ந்த அதிநவீன புதுமையான கண்டுபிடிப்புகளில் சிறந்ததை சொந்தமாக்க விரும்பும் லட்சிய வாடிக்கையாளர்களை அடைய ஆசுஸ், பேடிஎம் மால் மற்றும் பிளிப்கார்ட் போன்ற ஈ-காமர்ஸ் தளங்களுடன் துடிப்பான கூட்டணியை மேற்கொண்டுள்ளது.