அமேசான்,பிளிப்கார்ட் ஆறு நாட்களில் ரூ. 19,000 கோடி சம்பாதித்துள்ளது!.

ஆன்லைன் வணிக நிறுவனங்களான அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) நடத்திய பண்டிகை கால ஆன்லைன் சிறப்பு விற்பனையில் பல கோடிகளை சம்பாதித்துள்ளது. செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 4 வரை ஆறு நாட்களில் மொத்தம் மூன்று பில்லியன் டாலர் (சுமார் ரூ. 19,000 கோடி) விற்பனை மூலம் பெற்றுள்ளது. செவ்வாயன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் இதுக்குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தீபாவளி வரை பண்டிகை காலம் என்பதால் அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டின் ஆன்லைன் விற்பனை ஆறு பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.39,000 கோடி) வரை செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்ஸீர் கன்சல்டிங்கின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் கூறுகையில், “சவாலான பொருளாதார சூழ்நிலை இருந்தபோதிலும், பண்டிகை காலத்தின் முதல் சுற்றில் 3 பில்லியன் டாலர் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது, இது ஆன்லைன் ஷாப்பிங்கை நோக்கிய நுகர்வோர்கள் வருவதைக் காட்டுகிறது எனக் கூறியுள்ளார்.