அப்பல்லோ கேன்சர் மையம் சார்பாக ரோஸ் தின கொண்டாட்டம்.!

உலகம் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரோஜா பூ கொடுத்து வாழ்த்துச் சொல்வதை வழக்கமாக நடத்தி வருகின்றனர்.புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணமாகும் என்கிற நம்பிக்கையில் வாழவேண்டும் என்ற எண்ணத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சி தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ கேன்சர் மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா., நடிகர் சதீஷ், நடிகர் தர்ஷன்., நடிகை வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தப் புற்றுநோய் மையத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரோஜா பூவைக் கொடுத்து பரிபூரணமாகக் குணமாகி வீடு திரும்ப வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர்.குறிப்பாக கனடா நாட்டைச் சேர்ந்த மெலிண்டா ரோஸ் என்கிற 14 வயது பெண் குழந்தையிடம் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, நடிகர் சதீஷ், நடிகர் தர்ஷன்,நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் பேசினார்கள்.

அப்பல்லோ கேன்சர் மையம் சார்பாக ரோஸ் தினம் நிகழ்ச்சிகொண்டாடப்பட்டது.புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் நோய் குணமாகும் என்கிற நம்பிக்கையிலும் வாழவேண்டும் என்ற எண்ணத்துடனும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சி தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ கேன்சர் மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா., நடிகர் சதீஷ், நடிகர் தர்ஷன்., நடிகை வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தப் புற்றுநோய் மையத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரோஜா பூவைக் கொடுத்து பரிபூரணமாகக் குணமாகி வீடு திரும்ப வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர்.குறிப்பாக கனடா நாட்டைச் சேர்ந்த மெலிண்டா ரோஸ் என்கிற 14 வயது பெண் குழந்தையிடம் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, நடிகர் சதீஷ், நடிகர் தர்ஷன்,நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் பேசினார்கள்.

அப்பல்லோ கேன்சர் மையத்தின் மூத்த மருத்துவர் டாக்டர் ரேவதிராஜ் ரோஜா தினம் குறித்து பேசும்போது: ஒவ்வொரு நாளும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களைப் பார்க்கும்போது எந்த அளவுக்கு அவர்கள் தைரியமாகவும் மற்றும் நம்பிக்கையுடனும் இருக்கிறார்கள் என்பதை கண்கூடாக பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.புற்றுநோயைக் குணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் நீண்ட நாட்கள் வாழணும் என்று வேண்டிக் கொள்கிறோம்.80 சதவீத ஆரம்ப நிலைப் புற்றுநோய்குணப்படுத்தக் கூடியதுதான்.எனவேபுற்று நோய் பாதிக்கப்பட்டவர்களோடு நாங்கள் உரையாடி அவர்கள் மனதில் இருக்கும் தேவையற்ற பயத்தைப் போக்கி தன்னம்பிக்கையூட்டி அவர்கள் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறோம். புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாது அவர்களது பெற்றோர்களும் முழு ஒத்துழைப்பு கொடுப்பதால் ஆச்சரியப்படத்தக்க வகையில் குணமடைந்து வருகிறார்கள் என்று குறிப்பிட்டார்.