அடுத்த தலைமுறை நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பிராண்டான Amstrad , தமிழ்நாட்டில் அறிமுகம் !

அடுத்த தலைமுறை நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பிராண்டான Amstrad , தமிழ்நாட்டில் அறிமுகமாகிறது ! முதல் ஆண்டிலேயே ரூ . 150 கோடி விற்பனை வருவாயை இலக்காக இது நிர்ணயித்திருக்கிறது ! ! ! சென்னை : இந்தியாவின் முதல் அடுத்த தலைமுறை நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு பயன்பாட்டு சாதனங்கள் பிராண்டான Amstrad , தமிழ்நாட்டில் அதன் தயாரிப்புகளை அறிமுகம் செய்திருக்கிறது . Amstrad , புனே நகரில் தலைமையகத்தைக் கொண்டுள்ள OVOTPvt . Ltd – க்கு சொந்தமான பிராண்டாகும் . மகிழ்ச்சியும் , உற்சாகமும் கரைபுரண்டோடும் சுப வேளையான தீபாவளி திருநாளையொட்டி தமிழ்நாட்டில் தனது பயணத்தை தொடங்கும் Amstrad , முதல் ஆண்டிலேயே ரூ . 150 கோடி விற்பனை வருவாயை அடைவதை இலக்காகக் கொண்டிருக்கிறது . கட்டுபடியாகக்கூடிய மிதமான விலைகளில் இந்திய நுகர்வோர்களுக்கு உயர் தரத்திலான அடுத்த தொழில்நுட்ப சாதனங்களை வழங்க வேண்டும் என்பதே Amstrad – ன் குறிக்கோள் என்று OVOT Pvt . Ltd – ன் Mr . Nipun Singhal , MD & CEO ஊடகவியலாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார் . தற்போது , தமிழ்நாட்டில் Amstrad – ன் தயாரிப்புகள் புகழ்பெற்ற ரீடெய்ல் நிறுவனமான சத்யா ஸ்டோர்ஸ் – ன் அனைத்து விற்பனையகங்களிலும் கிடைக்கிறது .
இந்த தீபாவளிக்கு தமிழ்நாடு சந்தைக்கு உயர்தரத்திலான அடுத்த தலைமுறை தொழில்நுட்ப சாதனங்களின் ஒரு மிகப்பெரிய அணிவரிசையை Amstrad அறிமுகம் செய்கிறது . televisions , air conditioners and washing machines இதில் உள்ள டங்கும் . அறிமுக சலுகையாகவும் மற்றும் அதனோடு விழாக்கால சிறப்பு சலுகையாகவும் அனைத்து 4K UHD டிவிகள் வாங்கும்போது American Tourister trolley bags மற்றும் குறிப்பிட்ட smart series டிவிகளுக்கு Wildcraft backpacks போன்ற உத்தரவாத பரிசுகள் வழங்கப்படுவதையும் இந்நிறுவனம் அறிவித்திருக்கிறது . தீபாவளி திருநாள் சிறப்பு சலுகையாக ஏர் – கன்டீஷனர்களுக்கு 5 ஆண்டுகள் முழுமையான வாரண்டியையும் மற்றும் LED டிவிகளுக்கு 3 ஆண்டுகள் முழுமையான வாரண்டியையும் Amstrad அறிவித்திருக்கிறது . Amstrad – ன் 4K UHD series டிவிகள் Google licensed பெற்ற Android – ஐ சார்ந்து செயல்படுகின்றன மற்றும் இவைகளில் voice remote control இடம் பெற்றிருக்கிறது . Google assistant , Artificial Intelligence , Netflix , Amazon Prime , Youtube , Dolby digital sound , OTA ( ஓவர் தி ஏர் ) நிகழ் நிலைப்படுத்தும் வசதி , Amstrasound வழியாக வியப்பூட்டும் ஒலி தாக்கங்கள் , சுற்றுச்சூழல் தோழமையுள்ள ROHS சான்றாக்கம் , உயர் தரத்திற்கான சான்றிதழ்பெற்ற A + பேனல் , நேர்த்தியான வண்ணத்தால் மூடப்பட்டுள்ள WCG பேனல் மற்றும் இதுபோன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களையும் இந்த அணிவரிசை டிவிகள் கொண்டிருக்கின்றன . Amstrad டிவி அணிவரிசையில் 24 அங்குலத்திலிருந்து 65 அங்குலம் வரையிலான பல்வேறு அளவுகளில் டிவிகள் கிடைக்கின்றன .

1 டன் , 1 . 5 டன் மற்றும் 2 டன் திறனளவுகளில் smart inverter மற்றும் நிர்ணயிக்கப்பட்ட வேக ஏர் கன்டீஷனர்களையும் Amstrad அறிமுகம் செய்திருக்கிறது . Amstrad Washing Machine தயாரிப்பு அணிவரிசையில் டாப் லோடு , ஃபிரண்ட் லோடு முற்றிலும் ஆட்டோமேட்டிக் மற்றும் செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின்கள் இடம்பெற்றுள்ளன . இவையனைத்துமே அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன . இந்த அணிவரிசையின் சிறப்பு அம்சங்களில் IMD பேனல்கள் , வலுவாக உறுதியாக்கப்பட்ட toughened glass , tubclean , memory backup , CED டிஸ்ப்ளே ஆகியவை உள்ளடங்கும் . இந்த சிறப்பம்சங்கள் , சலவை செய்வதை மிக எளிதானதாக ஆக்குகின்றன . உலக தரத்திலான நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் அணிவரிசைக்கு அடுத்த தலைமுறை சேவை வழங்கப்படுவதற்கும் Amstrad உத்தரவாதமளிக்கிறது .

வாடிக்கையாளருக்கு ஒவ்வொரு நிலையிலும் சர்வீஸ் குறித்த நிகழ்நிலைத் தகவலை இது வழங்குகிறது . புனே நகரில் மிக நவீன உற்பத்தி ஆலையை இந்நிறுவனம் நிறுவி வருகிறது . அடுத்த நிதியாண்டு தொடக்கத்தில் உற்பத்தி ஆலையானது செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது . கட்டுபடியாகக்கூடிய விலைகளில் கிடைக்கக்கூடிய அடுத்த தலைமுறை தொழில்நுட்ப புத்தாக்க சாதனங்கள் என்ற வரிசையில் சந்தையில் Amstrad நிலைநிறுத்தப்பட்டுள்ளது . இது , அறிமுகம் செய்யப்பட்ட அனைத்து மாநிலங்களிலும் மிகச்சிறப்பான வரவேற்பைப் பெற்றிருக்கிறது . தமிழ்நாட்டை அடுத்த மாநிலமான கேரளாவில் வெறும் 6 மாதங்களில் 30 , 000 ஏர் கன்டீஷனர்கள் மற்றும் 25 , 000 LED டிவிக்களை விற்பனை செய்து சாதனை படைத்திருக்கிறது . இந்த பிராண்டின் வெற்றிக்கும் மற்றும் இதன் பிசினஸ் மாடலுக்கும் இந்த சாதனை விற்பனையானது சாட்சியமாகத் திகழ்கிறது என்று தென் மண்டல வர்த்தக தலைவர் அனில் வி நாயர் கூறினார் .