HLL பயோடெக் கம்பெனி திறக்காததற்கு யார் காரணம் ? பீஜேபியும் அதிமுகவும் ஏன் நடவடிக்கை எடுக்கலை ?

HLL பயோடெக் நிறுவனம் HLL Lifecare) என்ற கேரள அரசுக்கு சொந்தமான (State owned) மத்திய பொதுத்துறை நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்த HLL லைஃப்கேர் நிறுவனம் என்பது முன்னாள் ஹிந்துஸ்தான் லேடக்ஸ் (Hindustan Latex Limited) நிறுவனமே ஆகும். ஆரம்பத்தில் கருத்தடை சாதனங்கள் தயாரிப்பதில் புகழ்பெற்றிருந்தது. நிரோத், உஸ்தாத், மூட்ஸ், மாலா-டி (Mala-D) போன்ற கருத்தடை சாதனங்கள் இந்த HLL-ன் புகழ்பெற்ற தயாரிப்புகளே.

இந்த HLL ஆனது 55 ஆண்டுகளுக்கு முன்னர் 1966ல் இந்திரா காந்தி அம்மையார் முதல்முறையாக பிரதமராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் மருத்துவர் சுசீலா நய்யார். இந்த மருத்துவர் சுசீலா நய்யார் அவர்கள் அண்ணல் காந்தியடிகளின் மருத்துவராக இருந்தார். இவரது காலகட்டத்தில் கேரளாவிலுள்ள திருவனந்தபுரத்தை தவைமையிடமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதுதான். இந்த HLL நிறுவனம். ஆரம்பத்தில் கருத்தடை சாதனங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்திய இந்த HLL நிறுவனம் பின்னர் படிப்படியாக பிற துறைகளிலும் கவனம் செலுத்தியது. குறிப்பாக 2005 முதல் அமெரிக்காவின் அக்யூமென் (Acumen) என்ற இலாபநோக்கமற்ற நிறுவனத்துடன் இணைந்து “லைப்ஸ்பிரிங் ஹாஸ்பிடல்ஸ்” (Lifespring) என்ற 20 பிரசவ ஆஸ்பத்திரிகளை தெலங்கானாவில் நடத்திவருகிறது.

கடந்த 2014 பிப்ரவரியில், இந்த HLL நிறுவனமானது கோவா மாநில அரசுக்கு சொந்தமான மத்திய பொதுத்துறை நிறுவனமான நட்டத்தில் இயங்கிவந்த “கோவா ஆண்டிபயாடிக் மற்றும் பார்மசூட்டிகல்ஸ் லிமிடெட்” என்ற நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை மத்தியஅரசு அனுமதியுடன் வாங்கி, தனது துணை நிறுவனமாக்கிக் கொண்டது.

2014 பிப்ரவரியில் ஆட்சியில் இருந்தது  பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு. தனியார் மயத்தை காங்கிரஸ் அரசு ஆதரித்தாலும் அது பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்கவே செய்தது. இந்த “கோவா ஆண்டிபயாடிக் மற்றும் பார்மசூட்டிகல்ஸ் லிமிடெட்” நிறுவனம் நட்டத்தில் இயங்கி வந்தாலும் அதை பாதுகாக்கும் பொருட்டு அதை HLL நிறுவனத்துடன் இணைத்து அதன் துணை நிறுவனமாக்கி இயங்கவே செய்தது, காப்பாற்றவே செய்தது. ஆனால் இப்போதைய பிஜேபி அரசானது அரை நூற்றாண்டிற்கு மேல் 55 வருட பாரம்பரியமுள்ள HLL நிறுவனத்தை கடந்த ஜனவரி 2018ல் தனியார் மயமாக்க முயற்சித்தது. இதை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சமே ஆதரிக்கவில்லை. பினராயி விஜயன் தலைமையிலான கேரளா அரசாங்கமுமே இந்த HLL நிறுவனம் தனியார் மயமாவதை கடுமையாக எதிர்த்தது. இதற்கு பழி வாங்கும் விதமாகவே இந்த HLLக்கு எந்த நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை ஆளும் பிஜேபி அரசு.

இந்த HLL நிறுவனத்தின் துணை நிறுவனமான HLL பயோடெக் நிறுவனம்தான் செங்கற்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் தாலுகாவில் திருமணிங்கிற கிராமத்தில் உள்ளது.இ்ந்த HLL பயோடெக் நிறுவனமானது 2012ல் அன்றைய பிரதமர்  மன்மோகன்சிங் அவர்கள் அமைச்சரவையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பலநல அமைச்சகத்தின் அமைச்சராக இருந்த குலாம் நபி ஆசாத் அவர்களால் தமிழ்நாட்டிற்காக கிட்டத்தட்ட 594 கோடி செலவில் கட்டப்ப்பட்டது. இதற்கான கோரிக்கைகள் அனைத்தையும் முந்தைய கலைஞர்ஆட்சியில் வைக்கப்பட்டது தான்.. பின்னர் 2014 ல் மத்தியில் பிஜேபி அரசு அமைந்ததும், 2014-19 காலகட்டத்தில் பிஜேபி அரசில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஜே.பி.நத்தாவோ, 2019 முதல் உள்ள ஹர்ஷவர்த்தனோ, தமிழ்நாட்டில் உள்ள ஒரு பொதுத்துறை நிறுவத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வதா? அப்படியே இந்த HLL பயோடெக்கை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாங்க. இதற்கிடையில் 2018 ஜனவரியில் இந்த HLL பயோடெக் மற்றும் இதன் தாய் நிறுவனமான HLL லைஃப்கேர் உட்பட இதன் தொடர்பாக அனைத்து நிறுவனங்களையும் தனியார் மயமாக்க முனைந்தது பிஜேபி அரசு. அதற்கு கேரளா அரசாங்கம் கடுமையான எதிர்ப்பு காட்டியதால் சற்றே பின்வாங்குகியது. எந்தவொரு பொதுத்துறை நிறுவனத்தையும் உருவாக்கவோ காப்பாற்றவோ முயற்சி எடுக்காத பிஜேபி அரசு தனியாருக்கு தாரை வார்ப்பதில் மட்டும் முனைப்பு காட்டுது.

இந்நிலையில் டிசம்பர் 2019ல் தொடங்கிய கொரொனா அலையானது ஆழிப்பேரலையாய் உலகம் முழுவதும் சுழற்றி அடிக்க, 2020 மார்ச் முதல் உலகமே முடங்குகிறது. இந்த கொரொனாவிற்கு தடுப்பூசி ஒன்றே தீர்வு என்று உலகம் தடுப்பூசியை நோக்கி படையெடுக்கிறது. அப்போதும் இந்த HLL பயோடெக்கை கண்டுகொள்ளவே இல்லை மத்திய பிஜேபி அரசு. தனியார் பார்மா முதலைகளான பூனாவாலாவின் ஸீரம் இன்ஸ்டிடியூட்டின் “கோவிஸீல்ட்” அப்புறம் கிருஷ்ணா இலாவின் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிகளையே மத்தியஅரசும் அனுமதிக்கிறது. 594 கோடி ரூபாய் செலவில் துவங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனமான HLL ஐக் கண்டுகொள்ளாமல் நிர்க்கதியாய் விடப்படுகிறது தமிழ்நாட்டில் இருப்பதாலோ என்னவோ?
ஆனால் தனியார் தடுப்பூசிகள் சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்கப்படுகிறது. பிஜேபியின் தனியார் மயமாக்கல் வெறித்தனத்திற்கு இதைவிட வேறு உதாரணம் வேண்டுமா? என்ன.?
பொதுத்துறை நிறுவனமான HLL பயோடெக் நிறுவனம் மாற்றாந்தாய் பிள்ளையாய் அநாதையாக கிடக்கிறது, தனியார் நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசிகள் கொண்டாடப்படுகின்றது. மக்களும் உண்மை புரியாமல் இந்தியா தடுப்பூசியில் தன்னிறைவு பெற்றது, பிஜேபி அரசு சாதித்தது, சுதேசி, வெற்றி என பிஜபியின் தனியார்மயமாக்கல் கொள்கை மாயையைக் கொண்டாடுகின்றனர்.

2021, மே 6ம் தேதி தமிழ்நாட்டில் ஆட்சியும் மாறுகிறது, காட்சியும் மாறுகின்றது. முதல்வர் ஸ்டாலின் அவர்கள் “தமிழ்நாடு மாநில அரசே நேரிடையாக தடுப்பூசியை கொள்முதல் செய்யும், தேவையான தடுப்பூசிகளை தமிழ்நாடே உற்பத்தி செய்யும்” என்கிறார். உடனே பதறிய பிஜேபி அரசு “தடுப்பூசியை மாநிலங்கள் நேரடியாக வெளிநாடுகளில் இருந்து வாங்கக்கூடாது, நாங்களே கொள்முதல் செய்து தருவோம்” என்கிறது. எங்கே மாடர்னா, ஃபைசர், ஜான்சன் & ஜான்சன் போன்ற அமெரிக்க மருந்து நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு தடுப்பூசியை விற்றுவிடுவார்களோ என்றஞ்சி பிஜேபி அரசானது பதறிக்கொண்டு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை உடனடியாக அமெரிக்காவுக்கே அனுப்பி “லாபி – lobby” செய்கிறது.

இதற்கிடையில் கடந்த 25ம் தேதி முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேரடியாக திருக்கழுக்குன்றம் HLL பயோடெக் நிறுவனத்திற்கு ஆய்வுக்கு சென்றபோதுதான் பீஜேபியின் அனைத்து சதிவேலைகளும் வெளியே தெரியவருகிறது. புத்திசாலித்தனமாக ஸ்டாலின் அவர்கள் உடனடியாக தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவையும் நாடாளுமன்ற திமுக எம்பிக்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலுவையும் நேரிடையாக (எடப்பாடி போல் கடுதாசி போடாமல்) கடந்த 27ந் தேதி டெல்லிக்கு அனுப்பி, மத்திய சுகாதாரத்துரை அமைச்சர் ஹர்ஷவர்த்தனிடம் HLL பயோடெக்கை நீங்கள் நடத்துகின்றீர்களா அல்லது நாங்கள் நடத்தவான்னு கேட்க ஆடிப்போய்விட்டது பீஜேபி அரசு. ஒரு வார காலம் அவகாசம் கேட்டுள்ளது மத்திய அரசு. பீஜேபிக்கு வேறு வழியே இல்லை. ஒன்று அவர்கள் HLL பயோடெக்கை நடத்தவேண்டும் இல்லேன்னா தமிழ்நாட்டு அரசிடம் கொடுத்துத்தான் ஆகவேண்டும். இரண்டுமே இல்லையென்றால் பீஜேபி அரசு மிகப்பெரும் அவமானத்தை இந்தியஅளவில் சந்திக்கும். தனியாருக்கு துணைபோவது அப்பட்டமாக தெரிந்துவிடும். பிஜேபிக்கு “செக்” வைக்கும் ஸ்டாலினின் நுட்பமான அரசியல் நகர்வு இது என்றே சொல்லலாம்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்துள்ள மத்திய அரசின் ஒருங்கிணைந்த தடுப்பூசி தயாரிப்பு மையத்தை.. தமிழக அரசுக்கு குத்தகைக்கு தர வேண்டும்னு பிரதமருக்கு முதல்வர் ஏற்கெனவே கடிதமும் எழுதியிருக்கிறார்.
இதன் ஒரு கட்டமாகவே முதல்வர் ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகில் திருமணி மில் அமைந்துள்ள மத்திய அரசின் எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி உற்பத்தி மையத்தை பார்வையிட்டார்.இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் – செங்கல்பட்டுவில் உள்ள எச்.எல்.எல் பயோடெக் லிமிடெட், மார்ச் 2012 இல் 100 ஏக்கர் பரப்பளவில் ரூ. 594 கோடி  திட்டத்துடன், இந்தியாவின் தடுப்பூசி பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக எச்.பி.எல். உருவாக்கப்பட்டது.  வர்த்தக உற்பத்தியை இன்னமும்ம் தொடங்கவில்லை. 
மூடியே கிடக்கிறது.

எச்.பி.எல், ஆண்டுக்கு 585 மில்லியன் டோஸ்களைத் தயாரிக்கும் திறன் கொண்டது, பென்டாவலண்ட் காம்பினேஷன், பி.சி.ஜி, தட்டம்மை, ஹெபடைடிஸ் பி, மனித ரேபிஸ், ஹிப் மற்றும் ஜப்பானிய என்செபாலிடிஸ்  தடுப்பூசிகளை முதல் கட்டத்தில் தயாரிக்கும். இந்தியாவின் யுனிவர்சல் நோய்த்தடுப்பு திட்டத்திற்கு (யுஐபி) தேவையான தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வழங்குவதைத் தவிர்த்து, எதிர்கால தடுப்பூசிகளை உருவாக்குவதற்கான வலுவான ஆராய்ச்சி தளத்தை உருவாக்க எச்.பி.எல் முயற்சித்து வருது.

2012ல் திறக்கப்பட்ட இந்த மையம் கிட்டத்தட்ட 9 வருடங்களாக இயங்கவே இல்லை. மத்திய அரசு சார்பாக கட்டப்பட்டு இருக்கும் இந்த மையம், தடுப்பூசி உற்பத்தி செய்யப்படாமல் மூடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி உற்பத்தி மையத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். இதற்கான உதவிகளை செய்ய தயார் என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார். மத்திய அரசு இதை கொஞ்சம் கவனித்து இருந்தால், தமிழகத்திலேயே பல மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை உற்பத்தி செய்திருக்க முடியும். இந்த நிலையில்தான் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு டெல்லி புறப்பட்டார். மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உள்ளிட்ட சிலரை அவர் சந்திக்க உள்ளார். இந்த பயணத்தில்  டி.ஆர். பாலு எம்பி வும் உடன் சென்றுள்ளார்.

இதில் தங்கம் தென்னரசுக்கு முதல்வர் ஸ்டாலின் இரண்டு முக்கியமான பொறுப்புகளை கொடுத்துள்ளார்.  இந்த தடுப்பூசி மையத்தை உடனே மத்திய அரசு செயல்பாட்டுக்கு கொண்டு வந்து அங்கு கோவாக்சின் அல்லது கோவிட்ஷீல்ட் அல்லது ஸ்புட்னிக் உற்பத்தியை தொடங்க வேண்டும். மத்திய அரசு உடனே இங்கு தடுப்பூசி உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும். இதுதான் முதல் டாஸ்க். இதில் இன்னொரு விஷயம், இந்த தடுப்பூசி மையத்தை மத்திய அரசு ஒருவேளை ஏற்காவிட்டால் 10-15 வருட குத்தகை அடிப்படையிலேயே இது தனியாருக்கு அளிக்கப்படும். இதனால் தமிழக அரசே இதை குத்ததைக்கு எடுக்கும் திட்டமும் கைவசம் இருக்கு.. இதை பற்றித்தான் தங்கம் தென்னரசு பேசுவார் என்கிறார்கள். சிப்காட் மூலம் இதை குத்தகைக்கு எடுத்து பணிகளை தொடங்கும் திட்டத்தில் உள்ளனர். இதற்கான அனுமதியை பெறும் முயற்சிகள் நடக்கின்றன. இதனால் இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்கும் ஒரே மாநில அரசு என்ற பெருமை தமிழக அரசுக்கு கிடைக்கும்.. தமிழகத்தின் வேக்சின் தேவையும் பூர்த்தியாகும்.  ஒருவேளை தமிழக அரசுக்கு இந்த மையத்தை குத்தகைக்கு தரவில்லை என்றாலும், தனியார் நிறுவனம் மூலம் இதை இயங்க வைத்து, தமிழகத்திற்கு 50 சதவீதத்துக்கும் அதிகமான தடுப்பூசியை ஒதுக்க ஒப்பந்தம் போடப்படும். இரண்டில் எது நடந்தாலும் தமிழகத்திற்கு தான் பலன் கிடைக்கும் என்கிறார்கள். திடீரென அமைச்சர் தங்கம் தென்னரசு டெல்லி புறப்பட்டது இதுக்குத்தான். இதனால் விரைவில் தடுப்பூசி தட்டுப்பாட்டில் பெரிய மாற்றம் வரும் என்கிறார்கள். ஒருவேளை மத்திய அரசு தமிழக அரசுக்கு இந்த தடுப்பூசி மையத்தை நீண்ட கால குத்தகைக்கு வழங்கினால் தடுப்பூசி தயாரிக்கும் முதல் மாநிலமாக தமிழகம் மாறும்.கடந்த 9 ஆண்டுகளாக இந்த தடுப்பூசி மையத்தை துவக்காததற்கு யார் காரணம் என்பதை இப்போ மக்கள் புரிஞ்சிருப்பாங்க.

ஸ்டாலின் அவர்கள் இந்த HLL பயோடெக் நிறுவனத்திற்கு நேரடியாக கள ஆய்வுக்கு சென்றதுனாலத்தான் இப்படி ஒரு நிறுவனம் இருப்பது பற்றியும் இதனை மத்திய பிஜேபி அரசு எப்படியெல்லாம் புறக்கணித்தது என்பது பற்றியும் வெளியே தெரியவந்துள்ளது. இல்லையென்றால்? அவ்வளவும் மூடி மறைக்கப்பட்டிக்கும்?
சரி, கடந்த மார்ச் 2020 கடைசி வாரத்தில் இருந்து இன்றுவரை உலகமே லாக்டவுனில் இருந்தது. கடந்த மார்ச் 2020ல் இருந்து 2021, மே-6ம் தேதி வரை எடப்பாடியார் தலைமையிலான அதிமுக அரசு தான் , கிட்டத்தட்ட 13 மாதங்கள் ஆட்சியில் இருந்துச்சி. உலகமே தடுப்பூசியை நோக்கி பயணப்பட ஆரம்பித்து அவருக்கும் நல்லாவே தெரியும்.. அப்போதும் சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணனன் தான்  இப்போதும் இருக்கிறார் . சென்னைக்கு புறக்கடையில் உள்ள இந்த HLL பயோடெக்கைப் பற்றி முதலில் அவருக்கு தெரியுமா? வெறும் 10 மாதங்களில் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்ஸின் தடுப்பூசியை கண்டுபிடித்து சந்தைப்படுத்துகிறது. ஆனால் மத்தியஅரசின் பொதுத்துறை நிறுவனமான HLL பயோடெக்கால் இது முடியாமல் போகுது. காரணம் மத்திய பிஜேபி அரசின் பாராமுகம் தான்.தமிழ்நாடு மாநிலஅரசும் கண்டுகொள்ளவில்ல ?முதல்வர் ஸ்டாலின் அவர்களின் வேகத்தில் கொஞ்சமாவது எடப்பாடியார் காட்டி இருந்தால், மத்திய பிஜேபி அரசுக்கு நெருக்கடி தந்திருந்தால், இதே HLL பயோடெக் நிறுவனத்தாலும் தடுப்பூசிய தயாரித்திருக்க முடியும். கொரொனா இரண்டாம் அலை பரவலையும் தடுத்திருக்கமுடியும், பல லட்சக்கணக்கான மக்களை நோய்த்தொற்றில் இருந்து பாதுகாத்திருக்க முடியும். பல ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளை தடுத்திருக்க முடியும். கத்தார், துபாய், குவைத், சிங்கப்பூர் மாதிரி கொரொனா நோய்த் தொற்றிலிருந்து  மீண்டிருக்க முடியும்.ஆனால்  பீலா ராஜஷை விட்டு தப்லீக் ஜமாத், சிங்கிள் ஸோர்ஸ் என்று பீலா விட்டதைத் தவிர, எடப்பாடியார் ஆட்சியில் என்னதான் செய்தீர்கள் ?

முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இதே நுட்பத்துடனும் மாநில சுயசார்பு சிந்தனையுடனும் வேகத்துடனும் சென்றால் மூன்றாம் அலை என்பதற்கு வாய்ப்பே இல்லாமல் செய்துவிடலாம். இன்னும் மூன்று மாதங்களுக்குள் கொரொனாவை இல்லாமல் செய்துவிடலாம்னு நம்பிக்கையிருக்கிறது. எடப்பாடியை அடக்கி ஒடுக்கி வைத்த மாதிரி ஸ்டாலினையும் அடக்கிர்றலாம்னு நெனச்ச பீஜேபீக்கு ஏமாற்றம் தான் கெடச்சிருக்கு. முதல்வர் ஸ்டாலின் முயற்சி வெற்றி பெறும் என்கிறார்கள்.நம்புவோம் !