Thursday, April 18

Author: admin

ஏர்டெல், வோடபோன்,  ஜியோ தங்களது புதிய கட்டணத்தை அறிவித்துள்ளது.!
சினிமா

ஏர்டெல், வோடபோன், ஜியோ தங்களது புதிய கட்டணத்தை அறிவித்துள்ளது.!

பல்லாயிரம் கோடி பெரும் கடனில் சிக்கி தவித்து வந்த நாட்டின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்கள் இனி தங்களால் இந்தக் கடன் சுமையைத் தாங்க முடியாது என ஒரு வழியாக கட்டண உயர்வை அறிவித்துள்ளனர். ஏற்கனவேநாட்டில் முன்னணி தொலைத் தொடர்ப்பு நிறுவங்களாக ஏர்டெல், வோடபோன், ஆகிய நிறுவங்கள் தங்களது புதிய கட்டணத்தை அறிவித்துவிட்ட நிலையில் இன்று ஜியோ தனது கட்டணத்தை அறிவித்துள்ளது. ஏர்டெல், வோடபோன், ஆகிய நிறுவங்கள், வரும் 6 ஆம் தேதி முதல் தங்களின் புதிய கட்டண உயர்வை அமல்படுத்த உள்ளன. இந்தக் கட்டண உயர்வானது, 5 ஆண்டுகளுக்குப் பிறகு தொலைத் தொடர்பு நிறுவனங்களால் அமல்படுத்தப்படுவதாகவும் தகவல் வெளியானது.வரும் 6 ஆம் தேதி தனது புதிய கட்டணத்தை வெளியிடுவதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவித்திருந்த நிலையில், இன்று, தனது புதிய கட்டண விவரத்தை அறிவித்துள்ளது.மேலும், மற்ற நொட்வொர்க்கில் இல்லாத வகையில் NEW ALL IN ONE PLANS" என்ற புதிய த...
யோகாவில் உலக சாதனை படைத்த விருதுநகர் சிறுமி !
செய்திகள்

யோகாவில் உலக சாதனை படைத்த விருதுநகர் சிறுமி !

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி முஜிதா, கண்டபேருண்ட ஆசனத்தைச் செய்து யோகாவில் உலக சாதனை படைத்துள்ளார்.விருதுநகர் சூலக்கரையைச் சேர்ந்த கோவிந்தராஜ்-பார்வதி தம்பதியின் 9 வயது மகள் முஜிதா. செவல்பட்டியிலுள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு பயின்று வருகிறார்.சிறு வயது முதல் யோகா கற்று வரும் மாணவி முஜிதா, அதைச் சிறப்பாகச் செய்து பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பாராட்டு பெற்றுள்ளார். இந்தநிலையில் 'நோபல் வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெரும் வகையில் யோகா செய்து, அசத்தியிருக்கிறார் முஜிதா. பள்ளி வளாகத்தில் நடந்த இந்நிகழ்வில் ஒரு அடி அகலமும், 21 இன்ச் அளவுள்ள சிறிய மீன் தொட்டியில் கண்டபேருண்ட ஆசனத்தை 8 நிமிடம் செய்து உலக சாதனை படைத்தார். மிகவும் கஷ்டமான இந்த ஆசனத்தை அநாயசமாகச் செய்து சாதனை படைத்த முஜிதாவை அனைவரும் பாராட்டினார்கள். இதற்கு முன் 2012-ல் வெளிநாட்டில் ஒருவர் 3 நிமிடம்...
‘கடலில் கட்டுமரமாய்’ விவசாயிகளுக்கான திரைப்படம் !
சினிமா

‘கடலில் கட்டுமரமாய்’ விவசாயிகளுக்கான திரைப்படம் !

‘கடலில் கட்டுமரமாய்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இப்படம் முழுக்க முழுக்க விவசாயிகளை மையப்படுத்தி எடுத்திருக்கிறார்கள். நடன இயக்குநர் ஸ்ரீதர் இப்படத்தைப் பற்றி கூறும்போது, ஒரு நல்ல கருத்துக்கு அனைவரும் ஆதரவு கொடுப்பார்கள் என்றார். அதேபோல், ‘ஜாகுவார்’ தங்கமும் வெளியிலிருந்து வரும் தயாரிப்பாளர்களுக்கு நாங்கள் எப்போதும் ஆதரவு கொடுப்போம். ‘தோல உரிச்சுப் போட்ருவேன் நிலத்துல கால வெச்சா’ என்று இப்படத்தில் இடம்பெற்றுள்ள வசனம் அனைத்து விவசாயிகளுக்கு பிடித்தமானதாக இருக்கும். இப்படம் நிச்சயம் வெற்றிபெறும் என்றார். மேலும், இப்படத்தைப் பற்றியும் இப்படத்தின் பாடல்களைப் பற்றியும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பேசியதாவது கதாநாயகி ரித்திகா பேசும்போது, இப்படம் குடும்பத்தோடு வந்து பார்க்கும்படி அமைந்திருக்கும் படம். இப்படத்தில் நாயகி கதாபாத்திரத்தில் நீ தான் நடிக்...
’மக்கள் செல்வி’ வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘டேனி’.!
சினிமா

’மக்கள் செல்வி’ வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘டேனி’.!

’மக்கள் செல்வி’ வரலட்சுமி சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, PG Media Works பி.ஜி.முத்தையா மற்றும் எம். தீபா இவர்களின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம்தான், ‘டேனி’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் லா.சி.சந்தானமூர்த்தி இயக்கியிருக்கிறார். படத்திற்கான ஒளிப்பதிவில் ஆனந்த்குமார், படத்தொகுப்பில் எஸ்.என்.ஃபாசில், பின்னணி இசையில் சாய் பாஸ்கர், பாடல்களில் சந்தோஷ் தயாநிதி ஆகியோர் பணியாற்றியிருக்கிறார்கள். ’டேனி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே, ஐந்து வித்தியாசமான போஸ்டர்களில் வெளிவந்து, தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்தது. தற்போது ’டேனி’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான தனஞ்செயன், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்துகளும் தெரிவித்திருக்கிறார்....
இயக்குனர் சச்சின் இயக்கத்தில்,ஐந்து மொழிகளில் ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ !
சினிமா

இயக்குனர் சச்சின் இயக்கத்தில்,ஐந்து மொழிகளில் ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ !

*புஷ்கர் பிலிம்ஸ்’ புஷ்கரா மல்லிகார்ஜுனையா தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சச்சின் இயக்கத்தில், ரக்ஷித் ஷெட்டி, ஷான்வி ஸ்ரீவஸ்தவா நடிப்பில் ஐந்து மொழிகளில் ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ - ஒரு ஃபாண்டஸி அட்வென்சர் காமெடி திரைப்படம்* ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ முற்றிலும் ஒரு கற்பனையான கதை. அமராவதி எனும் ஒரு பழமையான வெகுதூரத்து கிராமத்தில், புதையல் ஒன்றுடன் தொடர்புடைய இன்றளவும் தீர்க்கமுடியாத ஒரு மர்மத்தைத் தீர்க்கும் முயற்சியே இத்திரைப்படம். இப்படத்தை தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் புஷ்கர் பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. புஷ்கர் பிலிம்ஸ்’ புஷ்கரா மல்லிக்கார்ஜுனையா தயாரித்த முதல் படம் ‘கோதி பன்னா சாதாரண மைகட்டு’. அதனைத் தொடர்ந்து, கன்னட திரையுலகில் சிறந்த திரைப்படங்களை தயாரிக்கும் ஒரு வல்லமைமிக்க சக்தியாகவும், புதிய சிந்தனைகளையும் தொழிட்நுட்ப யுக்திகளையும் கொண்டு அனை...
ஆன்லைனில் உடனே பான் கார்டு ! எங்கேயும் அலைய வேண்டாம்!
சினிமா

ஆன்லைனில் உடனே பான் கார்டு ! எங்கேயும் அலைய வேண்டாம்!

ஆதார் கார்டில் உள்ள தகவல்களைக் குறிப்பிட்டு, ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும் ரகசிய பாஸ்வேர்ட் (OTP) மூலம் தகவல்களை உறுதிசெய்தால் போதும். ஆன்லைனில் கட்டணமின்றி ஈ-பான் கார்டு வாங்கும் வசதி விரைவில் அறிமுகம்.ஆதார் எண் இருந்தால் உடனே பான் கார்டு கிடைத்துவிடும்.ஆன்லைன் வழிமுறையில் உடனடியாக பான் கார்டுகளை வழங்குவதற்கான திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.ஆதார் தகவல்கள் மூலம் உடனடியாக ஆன்லைனில் பான் கார்டு பெற்றுக்கொள்ளும் வசதியை அறிமுகம் செய்ய மத்திய அரசு ஆயத்தம் செய்துவருகிறது. அடுத்த சில வாரங்களில் இந்த வசதி நடைமுறைக்கு வரும் என தகவல் கிடைத்துள்ளது. ஏற்கெனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் கார்டு தொலைந்துவிட்டால்,மாற்று பான் கார்டு வாங்குவதும் மிக எளிதாகவிடும்.மேலும் ஈ-பான் கார்டு பெற எந்த கட்டணமும் பெறப்படாது. ஆதார் கார்டில் உள்ள தகவல்களைக் குற...
தங்க நகைகளுக்கு2021-ம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி முதல் ‘ஹால்மார்க்’ முத்திரை கட்டாயம் ?
செய்திகள்

தங்க நகைகளுக்கு2021-ம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி முதல் ‘ஹால்மார்க்’ முத்திரை கட்டாயம் ?

தங்க நகைகளுக்கு வரும் 2021-ம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி முதல் 'ஹால்மார்க்' முத்திரை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது!! தங்க நகைகள் மற்றும் தங்கத்தில் செய்யப்படும் கலைப்பொருள்களுக்கு வரும் 2021 ஜனவரி 15 ஆம் தேதி முதல் ஹால்மாா்க் முத்திரை பெறுவது கட்டாயம் என்று மத்திய நுகா்வோா் விவகாரத்துறை அமைச்சா் ராம்விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளாா். இது தொடா்பான முறைப்படியான அறிவிக்கை வரும் 2020 ஜனவரி 15 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அவா் தெரிவித்தாா். தங்கத்தின் தரத்தை உறுதி செய்து ஹால்மாா்க் முத்திரை அளிக்கப்படுகிறது. கடந்த 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தங்க நகைகளுக்கு ஹால்மாா்க் தரச்சான்று அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இப்போது புழக்கத்தில் உள்ள தங்க நகைகளில் 40 சதவீதம் ஹால்மாா்க் தரச்சான்று முத்திரை கொண்டதாகும். இப்போது 14 கேரட், 18 கேரட், 22 கேரட் என மூன்று பிரிவுகளில் தங்க நகைகளுக்கு ஹால்ம...
ஆதார் பதிவு மையங்களில் ஏடிஎம் அட்டை வடிவில் பிளாஸ்டிக் ஆதார்அட்டை!
செய்திகள்

ஆதார் பதிவு மையங்களில் ஏடிஎம் அட்டை வடிவில் பிளாஸ்டிக் ஆதார்அட்டை!

தமிழகத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளும் வசதி, 308 அரசு இ-சேவை மையங்கள், 1,400 வங்கிக் கிளைகள், 1,500 அஞ்சலகங்கள் ஆகியவற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.மேலும் பிஎஸ்என்எல் சேவை மையங்களிலும் ஆதார் பதிவு மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளும் வசதிகள் கொண்டு வரப்பட உள்ளன. சமூகநலத் துறையின் குழந்தைகள் நல மையங்கள் மூலமாக, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தை களுக்கான ஆதார் பதிவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட ஆதார் அட்டைகள் அழுக்காகியும், சேதமடைந்தும் உள்ளன. பலர் அட்டையை தொலைத்தும் விடுகின்றனர். அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக ஆதார் பதிவு மையங்களில் ஏடிஎம் அட்டை வடிவில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கும் சேவை தொடங்கப்பட்டது.அதில் பெறப்படும் அட்டையில் உள்ள கியூஆர் கோடுகளை, குடும்ப அட்டை பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவற்றால் படிக்க முடியவில்லை. அதனால் அந்...
2020ம் ஆண்டில் ஜீ தமிழ் சினி விருதுகள் !
சினிமா

2020ம் ஆண்டில் ஜீ தமிழ் சினி விருதுகள் !

தமிழில் உள்ள தனியார் சாட்டிலைட் டிவிக்களில் 2008ல் துவங்கப்பட்ட ஜீ தமிழ் டிவிக்கும் தனி இடம் உண்டு.பல வித்தியாசமான நிகழ்ச்சிகளால் அவர்களும் முன்னணி இடத்திற்கு தங்களை முன்னேற்றிக் கொண்டார்கள்.தங்கள் டிவியில் ஒளிபரப்பாகும் டிவி தொடர்களையும், அதன் நட்சத்திரங்களையும் ஊக்கப்படுத்துவதற்காக ஜீ தமிழ் குடும்ப விருதுகள் என்ற நிகழ்ச்சியை நடத்தி ரசிகர்களிடமும் பாராட்டைப் பெற்றார்கள்.தற்போது தமிழ் சினிமா உலகில் உள்ள கலைஞர்களை ஊக்கப்படுத்துவதற்காக ஜீ தமிழ் சினி விருதுகள் நிகழ்ச்சியை நடத்த உள்ளார்கள். 2020ம் ஆண்டில் இந்த விருது விழா நடைபெற உள்ளது.இந்த விருதுகளுக்கான தேர்வுக் குழுவில் சுகாசினி மணிரத்னம், கௌதம் வாசுதேவ் மேனன், பரத்பாலா, கரு பழனியப்பன், பரத்வாஜ் ரங்கன் ஆகியோர் உள்ளனர். தமிழ் சினிமா விருதுகள் பற்றிய பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் நடுவர் குழுவினருடன் சிறப்பு விருந்த...
வாரா கடன் பிரச்னையால் தவிக்கும் தனியார் நிதி நிறுவனங்கள் ?
செய்திகள்

வாரா கடன் பிரச்னையால் தவிக்கும் தனியார் நிதி நிறுவனங்கள் ?

இந்திய வங்கி துறை சார்ந்த கவலைகளும், சந்தேகங்களும் தொடர்ந்து பங்கு சந்தையில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, பொதுத் துறை வங்கிகள் சார்ந்த கவலைகள், சந்தையை கடந்த சில ஆண்டுகளாக பெரிதும் பாதித்ததை பார்த்தோம்.ஆனால், 2019ம் ஆண்டில் பொதுத் துறை வங்கிகளின் நிலைமை ஒரளவு சரியாகி, அவர்களின் கவலைகள் ஒவ்வொன்றாக நீங்க ஆரம்பித்து விட்டன.மாறாக, பல முன்னணி தனியார் வங்கிகள் தங்கள் நிதி நிலையில் பெரும் சரிவையும், வாரா கடன் பெருக்கத்தையும் சந்தித்தன.ஆட்டம் கண்டுவிட்டன இதே காலகட்டத்தில், தனியார் நிதி நிறுவனங்களும் பல சவால்களுக்கு ஆளாகி, நலிந்த நிலைக்கு தள்ளப்பட்டன. பல தனியார் வீட்டு கடன் நிறுவனங்களும் வாங்கிய பணத்தை திரும்ப செலுத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு, பெரிதும் ஆட்டம் கண்டுவிட்டன. அவர்கள் தொடர்ந்து இயங்குவதே கேள்விக்குறி ஆகியிருப்பதை நாம் கண்டோம்.பங்கு சந்தையில் பல தனியார்...