Saturday, April 13

Author: admin

11 கோணங்களில் திரைக்கதை அமைக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் ” சிறகன் ” ஏப்ரல் 20 ம் தேதி வெளியாகிறது !
சினிமா

11 கோணங்களில் திரைக்கதை அமைக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் ” சிறகன் ” ஏப்ரல் 20 ம் தேதி வெளியாகிறது !

ஹைபர் லிங்க் நான் லினியர் கிரைம் திரில்லர் படம் " சிறகன் " ஏப்ரல் 20 ம் தேதி வெளியாகிறது. MAD பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் துர்கா பேட்ரிக் தயாரித்துள்ள படத்திற்கு " சிறகன் " என்று வித்தியாசமாக தலைப்பிட்டுள்ளனர். கஜராஜ், ஜீவா ரவி, அனந்த் நாக், பௌசி ஹிதாயா, வினோத் GD, ஹர்ஷிதா ராம், பாலாஜி, மாலிக், பூவேந்தன், ரயில் ரவி, சானு ஆகியோர் முக்கிய கதாபாத்திரகளில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு : சேட்டை சிக்கந்தர் இசை : ராம் கணேஷ். K பாடல்கள் : வெட்டி பையன் வெங்கட், சந்தோஷ் ஆறுமுகம். கலை : ஹரிபிரசாத் பால் கூலாங்கல் படத்திற்கு சிறந்த சவுண்ட் எபெக்ட்ஸ் விருது வாங்கிய ஹரிபிரசாத் MA இந்த படத்திற்கும் சவுண்ட் மிக்ஸிங் செய்துள்ளார். மக்கள் தொடர்பு : மணவை புவன் தயாரிப்பு : துர்கா பேட்ரிக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, எடிட்டிங் செய்து இயக்கியுள்ளார் - வெங்கடேஷ்வராஜ். S ( இவர் மதுரை காமராஜர் பல்...
ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி & சயின்ஸ் (HITS) நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் (ICITS 2024) ஒருங்கிணைப்பு மற்றும் மாற்றம் குறித்த இரண்டு நாள் சர்வதேச மாநாட்டை நடத்துகிறது.
கல்வி

ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி & சயின்ஸ் (HITS) நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் (ICITS 2024) ஒருங்கிணைப்பு மற்றும் மாற்றம் குறித்த இரண்டு நாள் சர்வதேச மாநாட்டை நடத்துகிறது.

ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி & சயின்ஸ் (HITS) நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் (ICITS 2024) ஒருங்கிணைப்பு மற்றும் மாற்றம் குறித்த இரண்டு நாள் சர்வதேச மாநாட்டை நடத்துகிறது.சென்னையில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி & சயின்ஸ் (HITS), நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் (ICITS 2024) ஒருங்கிணைப்பு மற்றும் மாற்றம் குறித்த இரண்டு நாள் சர்வதேச மாநாட்டை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. ஏப்ரல் 15 மற்றும் 16, 2024 தேதிகளில் திட்டமிடப்பட்ட இந்த மாநாடு சென்னையில் உள்ள HITS பே ரேஞ்ச் வளாகத்தில் நடைபெறும். இந்த முக்கியமான தலைப்பில் நுண்ணறிவு மற்றும் கருத்துகளை பகிர்ந்து கொள்ள உலகெங்கிலும் உள்ள மதிப்புமிக்க நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் புகழ்பெற்ற பேச்சாளர்கள் பங்கேற்கின்றனர் . சென்னை லார்சன் &டூப்ரோ லிமிடெட் நிறுவனத்தில் உள்ள EDRC (HRC SBG) ...
‘வார்2’ படத்தில் இருந்து ஜூனியர் என்.டி.ஆரின் முதல் தோற்றம் வெளியானது!
சினிமா

‘வார்2’ படத்தில் இருந்து ஜூனியர் என்.டி.ஆரின் முதல் தோற்றம் வெளியானது!

'ஆர்.ஆர்.ஆர்.’ படம் மூலம் பான் இந்திய ரசிகர்களின் மனதைக் கவர்ந்த நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். இப்போது பாலிவுட்டிலும் மாஸாக அறிமுகமாகிறார். பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராஃப் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு 'வார்' திரைப்படம் வெளியானது. இதன் சீக்வல் 'வார் 2' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில்தான் ஜூனியர் என்டிஆர் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். பாலிவுட்டின் முதல் படத்திலேயே வில்லனாக நடிக்கிறார். ஒய்ஆர்எஃப் ஸ்பை யுனிவர்ஸின் (YRF Spy Unvierse) ஒரு பகுதியாக ‘வார்2’ திரைப்படம் இருக்கும். இதில் ஜூனியர் என்.டி.ஆருக்கான படப்பிடிப்புத் தற்போது தொடங்கியுள்ளது. இதற்காக, அவர் மும்பை வந்துள்ளார். மேலும், ஜூனியர் என்.டி.ஆரை வரவேற்கும் விதமாக படத்தில் இருந்து மாஸான அவரின் முதல் தோற்றமும் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தை அயன் முகர்ஜி இயக்குகிறார். இதில் கியாரா அத்வான...
சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷனின் அடுத்த தயாரிப்பாக நெஞ்சை நெகிழ வைக்கும் படமாக வெளியாகிறது ‘குரங்கு பெடல்’!
சினிமா

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷனின் அடுத்த தயாரிப்பாக நெஞ்சை நெகிழ வைக்கும் படமாக வெளியாகிறது ‘குரங்கு பெடல்’!

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷனின் அடுத்த தயாரிப்பாக நெஞ்சை நெகிழ வைக்கும் படமாக வெளியாகிறது ‘குரங்கு பெடல்’! நடிகர் சிவகார்த்திகேயனின், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நல்ல கதையம்சம் சார்ந்தப் படங்களைத் தேர்ந்தெடுத்துத் தயாரித்து வருகிறது. இப்போது இயக்குநர் கமலக்கண்ணனின் ‘குரங்கு பெடல்’ திரைப்படத்தை வெளியிடுவதன் மூலம் ரசிகர்களுக்கு மேலும் ஒரு நெஞ்சை நெகிழ வைக்கும் கதையைத் தருவதில் பெருமை கொள்கிறது சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ். தமிழ்நாட்டின் சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள மயக்கும் காவிரி ஆற்றின் அழகிய கரையோரங்களில் 1980 களின் கோடைகாலத்திற்கு பார்வையாளர்களை படம் கொண்டு செல்கிறது. மனதைக் கவரும் இந்தக் கதை, சைக்கிள் ஓட்டும் கலையில் தேர்ச்சி பெறத் துடிக்கும் மகனான மாரியப்பனுக்கும் அவனது தந்தைக்கும் இடையே உள்ள பிணைப்பை வெளிக்கொண்டு வருகிறது. ராசி அழகப்பன் எழுதிய ’சைக்கிள்’ சிறுகதையால்...
’கள்வன்’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவுக்கு தங்க சங்கிலி வழங்கிய தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு!
சினிமா

’கள்வன்’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவுக்கு தங்க சங்கிலி வழங்கிய தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு!

  தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபுவின் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் குமார், பாரதிராஜா, இவானா மற்றும் தீனா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ‘கள்வன்’. இந்தப் படம் ஏப்ரல் 4, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இரண்டாம் வாரத்திலும் குழந்தைகளுடன் குடும்பமாகப் இந்தப் படத்தைத் திரையரங்குகளில் ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். ஊடகங்களும் படம் குறித்து பாராட்டி விமர்சனம் வெளியிட்டுள்ளது. இதைக் கொண்டாடும் விதமாக படத்தில் தன்னுடைய தேர்ந்த நடிப்பின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த ‘இயக்குநர் இமயம்’, நடிகர் பாரதிராஜாவுக்கு தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு தங்கச்சங்கிலி வழங்கி தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்தத் தருணத்தில் கதாநாயகன் ஜிவி பிரகாஷ், ...
‘லவ் டுடே’ மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் மற்றும் பிரதீப் ரங்கநாதன்
சினிமா

‘லவ் டுடே’ மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் மற்றும் பிரதீப் ரங்கநாதன்

கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்கும் புதிய படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்க பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கிறார் திரைப்படத்தின் அறிமுக வீடியோ ரசிகர்களிடம் அதிரடி வரவேற்பை பெற்றுள்ளது தென் இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் தயாரித்து, பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த 'லவ் டுடே' அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது. கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்கும் இந்த புதிய படத்தை 'ஓ மை கடவுளே' புகழ் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்க பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கிறார். முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ள இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெறுகிறது...
அல்லு அர்ஜூன் பிறந்தநாள் ட்ரீட்டாக வெளியான ‘புஷ்பா2:
சினிமா

அல்லு அர்ஜூன் பிறந்தநாள் ட்ரீட்டாக வெளியான ‘புஷ்பா2:

 தி ரூல்’ டீசர், இணையம் முழுவதும் ஆகிரமித்து இருக்கிறது!ரசிகர்களால் அதிகம் எதிர்ப்பார்க்கப்படும் படமான ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் டீசரை ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. டீசர் வெளியான உடனேயே இணையத்தை ஆக்கிரமித்ததோடு, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் டீசரை சிலாகித்து அல்லு அர்ஜூனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.பிரம்மாண்டம், வண்ணங்கள் மற்றும் மிகப்பெரிய பொருட்ச் செலவில் உருவாகியுள்ள காட்சிகள் அனைத்தும் டீசரில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. டீசரில் இடம்பெற்றுள்ள ஒவ்வொருக் காட்சியிலும் புஷ்பா ராஜ் நம்பமுடியாத, அதே சமயம் சக்தி வாய்ந்த அவதாரத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தின் தீவிரத்தை வெளிக்கொண்டு வந்துள்ளார். இதற்கு இன்னும் வலுசேர்க்கும் விதமாக தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை நம் இதயத்துடிப்பை இன்னும் அதிகப்படுத்துகிறது.படத...
குழந்தைகளுடன் பார்க்கிற மாதிரியான படங்கள் அபூர்வமாகத்தான் வெளி வருகின்றன. குழந்தைகளை வெகுவாக கவரும் விதமாக வந்திருக்கும் படம் தான் டபுள்டக்கர்.!
சினிமா

குழந்தைகளுடன் பார்க்கிற மாதிரியான படங்கள் அபூர்வமாகத்தான் வெளி வருகின்றன. குழந்தைகளை வெகுவாக கவரும் விதமாக வந்திருக்கும் படம் தான் டபுள்டக்கர்.!

அறிமுக இயக்குநர் மீரா மஹதி இயக்கத்தில் தீரஜ், ஸ்ம்ருதி வெங்கட், யாஷிகா ஆனந்த், கோவை சரளா, மன்சூர் அலி கான், ஷாரா, எம்.எஸ். பாஸ்கர், கருணாகரன், சுனில் ரெட்டி என ஏகப்பட்ட பேர் நடித்திருந்தாலும் டபுள் டக்கர் படத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்ப்பது அந்த கடவுளின் காவலர்களான ரைட் மற்றும் லெஃப்ட் பொம்மைகள் தான்.இந்த டபுள் டக்கர் படத்தில் எமதர்மன், சித்ரகுப்தாவுக்கு பதிலாக ரைட், லெஃப்ட் என 2 பொம்மைகள் வருகின்றன. அந்த பொம்மைகளுக்கு முனிஷ்காந்த் மற்றும் காளி வெங்கட் வாய்ஸ் கொடுத்திருப்பது படத்துக்கு மிகப்பெரிய பலமாக மாறியுள்ளது. ஆக்சிடெண்ட் ஒன்றில் அப்பா & அம்மாவை இழந்து விடும் நாயகன் அரவிந்த் ( தீரஜ்) முகத்தில் தீக்காயம் ஏற்படுகிறது பெரிய பணக்காரனாக இருந்தும் அவனிடம் யாரும் பழக மறுக்கிறார்கள். அதே சமயம் இளம் பெண் நாயகி பாரு (ஸ்மிருதி) மட்டும் அவனுடன் கேஷூவலாக பழகுகிறாள்...
‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா
சினிமா

‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

21 கிராப்ட்களை கையாண்டு இப்படத்தை தயாரித்து இயக்கி நடித்துள்ள குகன் சக்வர்த்தியாரின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது மாதா பிதா ஃபிலிம் பேக்டரி வழங்க, தமிழ் திரையுலகில் முதன்முறையாக கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, கலை, நடனம், சண்டை பயிற்சி (தனி), உடைகள், ஸ்டில்ஸ், ஒப்பனை, பின்னணி பாடகர், பின்னணி இசை, புரொடக்ஷன் டிசைனர், டைட்டிலிங், சிகை அலங்காரம், வெளிப்புற படப்பிடிப்பு தள நிர்வாகி, தயாரிப்பு, டைரக்ஷன் இவற்றுடன் கதாநாயகனாக குகன் சக்வர்த்தியார் நடித்திருக்கும் திரைப்படம் 'வங்காள விரிகுடா குறுநில மன்னன்'. நம் மக்களின் வாழ்வியலை படம்பிடிக்கும் அருமையான காவியமாக, அப்துல்கலாமின் கனவு காணுங்கள் எனும் கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா திங்கட்கிழமை அன்று சென்னை கலைஞர் அரங்க...
இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் புதிய சாகச திரில்லர் திரைப்படம் ‘டீன்ஸ்’ டிரெய்லர் மற்றும் இசை புதுமையான முறையில் வெளியீடு
சினிமா

இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் புதிய சாகச திரில்லர் திரைப்படம் ‘டீன்ஸ்’ டிரெய்லர் மற்றும் இசை புதுமையான முறையில் வெளியீடு

திரையரங்கில் நான்கு காட்சிகளாக இசை வெளியிடப்பட்டு புதிய உலக சாதனை, டிரெய்லரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டார் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 13 இளம் வயதினருக்கு பாராட்டு தெரிவித்த 'டீன்ஸ்' படக்குழு. உலகிலேயே முதல் முறையாக திரையரங்குகளில் தணிக்கை சான்றிதழ் உடன் முதல் பார்வை வெளியிடப்பட்டு சாதனை படைத்த இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச திரில்லரான 'டீன்ஸ்' திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் சென்னையில் சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்டது. டிரெய்லரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட நிலையில், 'டீன்ஸ்' திரைப்படத்தின் இசை சென்னை கமலா திரையரங்கில் நான்கு காட்சிகளாக தொடர்ந்து வெளியிடப்பட்டு புதிய உலக சாதனையை படைத்துள்ளது. இதை தொடர்ந்து, ஒரே நாளில் ஒரே இடத்தில் அதிக இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட படம் என்பதற்கான சான்றிதழ் 'டீன்ஸ்' திரைப்ப...