Sunday, April 14

வெப் -விமர்சனம்!

நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்டி நட்ராஜ், நடிகைகள் ஷில்பா மஞ்சுநாத், அனன்யா மணி, நந்தினி மாதேஷ், ஷஷ்வி பாலா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் வெப் (Web)

வி. எம். முனிவேலன் தயாரிப்பில் ஹரூன் இப்படத்தை இயக்கியுள்ளார். கார்த்திக் ராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.நம்பவே முடியவில்லை.? த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் முன்னதாக வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், படம் எப்படி இருக்குனு பார்க்கலாம்!அதாவது ஐடியில் ஒர்க் செய்யும் ஷில்பா மஞ்சுநாத், சாஷ்வி பாலா, சுபபிரியா மலர் ஆகிய மூவரும் பல்வேறு போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதே நிறுவனத்தில் புதிதாக வந்து சேரும் திருமணம் ஆன அனன்யா மணியை ஒரு விருந்துக்கு அழைத்துச் சென்று மதுப் பழக்கத்திற்கு ஆளாக்கி ஆட்டம் போட்டபடி ஒரு நாள் இரவு கார் ஓட்டிச் செல்கின்றனர். அடுத்த நாள் காலை மூவரும் போதை தெளிந்து கண் விழித்துப் பார்க்கும்போது நட்டி நட்ராஜின் கஸ்டடியில் பாழடைந்த வீட்டில் இருக்கின்றனர். நட்டி நட்ராஜ் – அவரது பெண் உதவியாளர் இருவரும் சேர்ந்து இந்தப் பெண்களுக்கு வேளா வேளைக்கு சாப்பாடு கொடுத்து, போதை மருந்து செலுத்தி, தூங்க வைத்து தொடர் டார்ச்சர் செய்கின்றனர். ஏற்கெனவே இந்த வீட்டில் மற்றொரு பெண்ணையும் கட்டி வைத்து அடித்து துன்புறுத்துகின்றனர். இடையில் சில கொலைகளையும் செய்கிறார். இந்த சூழலில் நட்டி எதற்காக இப்பெண்களைக் கடத்தினார்? இதனைத் தொடர்ந்து நடப்பது என்ன? சைக்கோ வில்லன் நட்டியின் பின்புலம் என்ன? இந்தப் பெண்கள் எப்படி அங்கிருந்து தப்பித்தார்கள் என்பனவற்றை விறுவிறுப்பாக சொல்ல முயன்று இருப்பதே வெப் கதை.

சைக்கோ வில்லனை ஒத்த கதாபாத்திரத்தில் அறிமுகமாகி ஹீரோவா, வில்லனா எனக் குழம்ப வைக்கும் கதாபாத்திரத்தில் நட்டி நட்ராஜ். சைக்கோ வில்லனாக ஆய்.. ஊய்.. என ஒரே மாதிரியான ரியாக்‌ஷன் கொடுத்து முதல் பாதியில் நம்மை சோதிக்கிறார்.நட்டி நடிக்கக் கத்துக்கோங்க இரண்டாம் பாதியில் ஆங்காங்கே கொஞ்சம் ஆசுவாசப்படுத்துகிறார்.இசை கார்த்திக் ராஜாவாம்.. நம்பமுடியவில்லை.படத்துக்கு சம்பந்தமே இல்லாமல் மொட்டை ராஜேந்திரன் திடீரென படத்தில் தோன்றி காமெடி செய்து தன் பங்குக்கு நம்மை சோதிக்கிறார். கொஞ்சமும் சுவாரஸ்யம் கூட்டாத திரைக்கதை சலிப்பூட்டுகிறது.ஒரே இடத்தில் பயணித்து, இரண்டாம் பாதியில் கொஞ்சம் நம்மை தெளிய வைக்கிறது.

இப்படி இளம்பெண்களை கடத்தியதற்கு பின்னணியில் ஒரு பிளாஷ்பேக் இருக்கும், அதில் நட்டியின் குடும்ப பெண் பாதிக்கப்பட்டவராக இருப்பார், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பைத் தூண்டாத, அடுத்தடுத்து இதுதான் நடக்கும் என்பதை சுலபத்தில் யூகிக்க முடிகிற திரைக்கதையால் தொய்வடைய செய்து அனுப்புகிறார்கள்..இறுதியில் வரும் மிகப் பெரும் திருப்பம் நம்மை ஏமாற்றிய உணர்வைத் தருகிறது.