Saturday, April 13

பிடிஆரா ?:அரசு ஊழியர்களா ? ஸ்டாலின் முடிவு என்ன ?

பிடிஆரா ?:அரசு ஊழியர்களா ? ஸ்டாலின் முடிவு என்ன ?

மொதல்ல அவரை அமைச்சர் பதவியில் இருந்து தூக்குங்க…முதல்வரின் தூக்கத்தை கலைத்த டெல்லி! என்ன செய்றதுன்னு தெரியாம முழிச்சு கிட்டு இருக்காரு.தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அமைச்சர்கள் டிரான்ஸ்ஃபர் லிஸ்ட்டில் நிதியமைச்சர் பிடிஆரின் பெயர்தான் முதலில் சேர்க்கப்பட வேண்டுமென அரசு ஊழியர்கள் கொந்தளிச்சிட்டு வர்றதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்குது. ஏன் என்ன காரணம்ன்னு பாக்கலாம் ?

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முதல் அரசு ஊழியர்களின் ஓய்வூதிய விவகாரம் வரை, தான் வெளிப்படுத்தும் தன்னிச்சையான கருத்துகளால அப்பப்போ சர்ச்சைகள்ல சிக்கிகிட்டு வர்றாரு தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு, பெட்ரோல், டீசல் மீதான வரி வருவாய் போன்ற முக்கிய விவகாரங்கள்ல மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, பிடிஆர் அப்பப்போ பதிலடி கொடுக்கிறதை அவர் மட்டுமில்லாம, ஒட்டுமொத்த மத்திய நிதியமைச்சகத்துக்கே புடிக்கலையாம். அதனால பிடிஆரை மாநில நிதியமைச்சர் பொறுப்பில் இருந்து முதலில் வேறு துறைக்கு மாற்றுங்கள்னு டெல்லியில் இருந்து முதல்வர் ஸ்டாலினுக்கு சில. பல மாதங்களாகவே அழுத்தம் கொடுக்கப்பட்டு வருதாம்.
இதுபோதாதுன்னு, அரசு ஊழியர்களுக்கு எதிராக பிடிஆர் அண்மையில் பேசிட்டு வர்ற கருத்துகள் அவருக்கு மட்டுமில்லாம, திமுகவின் வாக்கு வங்கிக்கே வேட்டு வைக்கும் விதத்தில் இருப்பதாக வருத்தப்படுறாங்க திமுக அபிமானிகள்.

திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும்ன்னு 2021 சட்டமன்ற தேர்தலப்போ திமுக வாக்குறுதி அளிச்சிருந்தது. ஆனால் ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததுனால அதை நிறைவேற்ற அரசு ஊழியர்கள் இப்போ அரசை வலியுறுத்திகிட்டு வர்றாங்க.

பிடிஆரா, அரசு ஊழியர்களின் வாக்கு வங்கியா? -முடிவெடு்க்கும் கட்டாயத்தில் முதல்வர் இருக்கிறாரு ?

ஆனால் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் துறைரீதியாக உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து எடுத்துரைக்க வேண்டிய கடமை பிடிஆருக்கு இருக்கதான் செய்யுது. ஆனால் அவர் பழைய ஓய்வூதிய திட்டத்தப் பத்தி பேசும்போது, ‘அரசு ஊழியர்கள் ஒரு லட்சம் ரூபாய் வரை மாத சம்பளம் வாங்குறாங்க. அவர்களுக்கு அகவிலைப்படி அது, இதுன்னு பல்வேறு சலுகைகள் வேறு தர வேண்டியிருக்குதுன்னு பொருள்படும்படி பேசி வர்றது அவர் மேல ஒட்டுமொத்த அரசு ஊழியர்களையும் கொதிப்படைய செஞ்சிருக்குதாம்.

இதன் வெளிப்பாடாகதான் அனைத்து அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அண்மையில் மிகப்பெரிய போராட்டத்தை அறிவிச்சிருந்தது. சங்க நிர்வாகிகளை முதல்வர் அழைத்து பேசியதையடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

இந்த நிலைல அமைச்சரவை மாற்றம்ங்கிற பேச்சு மீண்டும் அடிப்படத் தொடங்கியிருக்குது. :
தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் இருக்கும்ங்கிற தகவல் அரசு ஊழியர்களின் காதுக்கும் எட்டியிருக்குது. அமைச்சர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவின் ஆலோசனைப்படி முதல்வர் ஸ்டாலின் விரைவில் அமைச்சரவையை மாற்றியமைக்கப் போவதாக எதிர்பார்க்கப்படுது. அமைச்சரவை மாற்றத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி, அமைச்சர்கள் பெரியகருப்பன், ராஜகண்ணப்பன் உள்ளிட்ட சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட அதிக வாய்ப்புள்ளதாக கோட்டை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையை மாற்றும் முடிவை எப்போது எடுத்தாலும் அதில் முதல் ஆளாக மாற்றப்பட வேண்டியவர் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தான் என்று கோபம் கொப்பளிக்க சொல்லிக்கிட்டு வர்றாங்களாம் அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் பலர்.

தாங்கள் செய்யும் வேலைக்கு தரப்படும் ஊதியம், டிஏ போன்றவற்றையே பெரிதாக பேசும் பிடிஆர் தொடர்ந்து நிதியமைச்சர் பொறுப்பில் நீடித்தால், பழைய ஓய்வூதிய திட்டம் அமலாக வாய்ப்பில்லைன்னு நெனைக்கிறதால அவர் இலாகா மாற்றம் செய்யப்பட்டே ஆகணும்னு அரசு ஊழியர்கள் விரும்புறாங்களாம்.

தமக்கு அறநிலையத் துறை தரப்படும்ன்னு எதிர்பார்த்ததாக சில மாதங்களு்க்கு முன்னால பிடிஆரே ஒபனாக தெரிவிச்சிருந்தார். அவரது விருப்பப்படியே அவரை அந்த துறைக்கே அமைச்சர் ஆக்கிடலாம்ன்னு முதல்வருக்கே யோசனை தெரிவிக்கும் அளவுக்கு அவர்கள் பேசிகிட்டு வர்றாங்களாம்.

இந்த முறை அமைச்சரவை மாற்றத்தின்போது பிடிஆர் மாற்றப்படலைன்னா திமுகவின் முக்கிய பலமாக இருக்கும் அரசு ஊழியர்களின் வாக்கு வங்கியை அந்த கட்சி அனாவசியமாக இழக்க வேண்டியிருக்கும்னு முதல்வருக்கு எச்சரிக்கை விடுக்காத குறையாக சொல்லிக்கிட்டு வர்றாங்களாம் அரசு ஊழியர்கள்.

தனியார் நிறுவன ஊழியர்களை போல, வாரத்துக்கு ஆறு நாட்கள் பணிபுரிந்து வந்த அரசு ஊழியர்களுக்கு எம்ஜிஆரின் ஆட்சிக் காலத்தில்தான் சனிக்கிழமையும் சேர்த்து வாரத்துக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.ஆனாலும், எம்ஜிஆருக்கு முன்பும், அவருக்கு பின்பும் ஆட்சிபுரிந்த கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக் காலத்தில்தான் ஆசிரியர்கள் பணிநியமனம், பல்வேறு அரசு துறைகளில் புதிய பணி நியமனங்கள்ன்னு பல்லாயிரகணக்கானோருக்கு அரசு வேலை கிடைத்தது.

அத்தோட தீபாவளி போனஸ், அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வுன்னு அதிமுக அரசை ஒப்பிடும்போது கலைஞரின் ஆட்சிக் காலத்தில் அரசு ஊழியர்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே தாராளம் காட்டப்பட்டுதான் வந்தது.

‘அரசு ஊழியர்களுக்கு பொற்காலம்’னு சொல்லும்படியாக கருணாநிதி இவர்களுக்கு கரிசனம் காட்டி வந்தார். தேர்தல் சமயங்களில் வாக்குச்சாவடிகளில் பணியில் இருப்பவர்கள் ஆசிரியர்களும். அரசு ஊழியர்களும்தான் என்பதும் கருணாநிதியின் இந்த கரிசனத்துக்கு முக்கிய காரணம் என்ற விமர்சனமும் வைக்கப்படுவதும் உண்டு.

இந்த விமர்சனங்களை எல்லாம் ஒருபுறம் இருந்தாலும், கலைஞரின் ஆட்சிக் காலத்தில்தான் எங்களுக்கு கவர்மென்ட் வேலை கிடைத்தது. அதற்காக எங்கள் குடும்பமே திமுகவுக்கு தான் ஓட்டுப் போடும் என்று பகிரங்கமாக சொல்லும் அளவுக்கு பல தலைமுறைகளாக பெரும்பாலான அரசு ஊழியர்களின் வாக்கை திமுக அறுவடை செய்து வருகிறது. எம்.பி., எம்எல்ஏக்கள் தேர்தலில் பதிவாகும் தபால் ஓட்டுக்களில் யாருக்கு அதிகமான வாக்கு விழுகிறது என்று பார்த்தாலே, அரசுப் பணியாளர்கள் மத்தியில் திமுகவுக்கு இருக்கும் ஆதரவை தெரிஞ்சுக்க முடியும்.இப்படி தலைமுறை தலைமுறையாக அரசு ஊழியர்களின் ஆசியை பெற்று வந்த திமுகவுக்கு, இப்போ அவர்களின் வாக்கு வங்கியை கணிசமாக இழக்கும் அபாயம் ஏற்பட்டிருக்குது.. இதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் சொல்லப்படுது.

ஆட்சி பொறுப்புக்கு வந்து ஓராண்டுக்கு மேலாகியும், தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை திமுக அரசு அமல்படுத்தாததுடன், இதனை அமல்படுத்த வாய்ப்பில்லை என்பது போன்ற தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசி வர்றது.
நிதியமைச்சர் பிடிஆர், அரசு ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளத்தை எப்பொழுதும் பெரிய சுமையாகப் பார்ப்பதாகவும், மாதத்துக்கு ஒரு லட்சம் ஊதியம் வாங்குகிறார்கள் என்று அடிக்கடி சொல்லி சமூகத்தில் அரசு ஊழியர்களை அரசுக்கு பெரிய சுமை போல காட்சிப்படுத்துவதாகவும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் முதல்வரிடம் அவர் மீது புகார் கூறும் அளவுக்கு நிலைமை போயிருக்குது.

இந்த இரண்டு காரணங்களை மனசுல வச்சுகிட்டு, அரசு ஊழியர்களின் நியாயமான எல்லா கோரிக்கைகளையும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நிறைவேற்றியே ஆகணும். இல்லைன்னா கருணாநிதி காலம் காலமாக கட்டி காத்துவந்த அரசுப் பணியாளர்களின் வாக்குகளை திமுக இழக்க நேரிடும்னு எச்சரிக்கின்றாங்க அரசியல் நோக்கர்கள்.ப

பிடிஆரை மாத்துறதுக்கு என்ன காரணம்னு பாக்கலாம் . துறை ரீதியான தமது வெளிப்படையான பேச்சுக்களால் அவ்வபோது சர்ச்சையில் சிக்குவது தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு பழக்கமான ஒண்ணா இருக்குது. அமைச்சராக பொறுப்பேற்ற பின்னாடி தான்பங்கேற்ற முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலேயே மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்ற புதிய சொல்லாடலில் அழைத்து தேசிய அளவில் கவனத்தை பெற்ற பிடிஆர், பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பு, அரிசி உள்ளி்ட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்ற விவகாரங்களில் மத்திய அரசை கடுமையாக சாடி வர்றாரு. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில் இவர் முன்வைக்கும் கருத்துக்கள் ரசிக்கும்படியாக இல்லை எனவும், இவரது பேச்சு மற்ற மாநில நிதியமைச்சர்களை தூண்டிவிடுவதாகவும் மத்திய நிதியமைச்சகத்தில் இருந்து தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு சில மாதங்களுக்கு முன் ரிப்போர்ட் வந்ததாம். அத்துடன் பிடிஆரை மாநில நிதியமைச்சர் பொறுப்பில் இருந்து மாற்றினால் மட்டுமே மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசுக்கு வர வேண்டிய நிதிகள் உரிய காலத்தில் கிடைக்கும் என்றும் மத்திய நிதியமைச்சக உயரதிகாரிகள் நிலையில் உள்ள அதிகாரிகளால் ஸ்டாலினுக்கு அப்போதே அறிவுறுத்தப்பட்டதாம்.

ஆனால் அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்ததால் இந்த விஷயத்தை ஆறப்போட்ட முதல்வர் ஸ்டாலின், தேர்தல் முடிந்து பிடிஆர் மேல் ஏதாவது நடவடிக்கை எடுப்பாருன்னு எதிர்பார்த்தாங்க. ஆனால் அந்த மாதிரி எதுவும் நடக்காததால், பிடிஆரால் ஸ்டாலினுக்கும், திமுக அரசுக்கும் இப்போ வேறு விதத்தில் சிக்கல் வந்திருக்குது.

 

2021 சட்டமன்ற தேர்தலப்போ திமுக அளித்த வாக்குறுதிகளில், ‘திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்ங்கிற வாக்குறுதி மிகவும் முக்கியமானது. தேர்தலில் அமோக வெற்றிப் பெற்று திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்கு மேல் ஆய்ட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின்படி தங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கைகளை திமுக அரசு இன்னமும் எடுக்காதது தங்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமிழக அரசு மீது தங்களது அதிருப்தியை அவ்வபோது வெளிப்படுத்தி வர்றாங்க.

இந்த நிலையில். அரசின் மீதான அவர்களின் கோபத்தீயில் எண்ணெய்யை ஊற்றுவதாக அமைந்துள்ளது அரசு ஊழியர்கள் குறித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் சமீபத்திய பேச்சுகள். அரசு ஊழியர்களின் ஊதியத்துக்காக மட்டும் அரசு மாதந்தோறும் இவ்வளவு செலவு செய்ய வேண்டி இருக்குது. அத்தோட அவர்களுக்கு DA உள்ளிட்ட சலுகைகளையும் அளிக்க வேண்டியுள்ளது. மாதத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களும் இருக்கதான் செய்றாங்கங்கிற பிடிஆரின் பேச்சை கேட்டு அரசு ஊழியர்கள் கொந்தளிச்சு போய் இருக்காங்கன்னு
சொல்றாங்க.

இதன் வெளிப்பாடாகவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, தமிழக நிதியமைச்சரை கண்டித்தும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும் மாநிலம் தழுவிய போராட்டத்தை அண்மையில அறிவித்திருந்தது. கூட்டமைப்பின் நிர்வாகிகளை முதல்வர் அழைச்சு பேசுனதுக்கப்புறம் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் வாங்கியிருக்காங்களாம்.

இது ஒருபுறம் இருக்க, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிவரும் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது உரிய நடவடிக்கை எடுக்கணும்னு முதல்வருடனான சந்திப்பின்போது ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனராம். அவர்களின் இந்த கோரிக்கையை கவனமாக கேட்ட முதல்வர் ஸ்டாலின் நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்ன்னு உறுதியளிச்சிருக்காராம்.

ஏற்கெனவே பிடிஆர் மீது மத்திய நிதியமைச்சகம் செம கடுப்பில் இருக்கும் நிலையில், தமிழக அரசு ஊழியர்களும் புகார் வாசித்து வருவதால் அவர் மீது முதல்வர் ஸ்டாலின் கூடிய விரைவில் அதிரடி நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கலாம் என்று தெரிவிக்கின்றன கோட்டை வட்டாரங்கள். அதற்கு பின்னர், அரசு ஊழியர்கள். ஆசிரியர்கள் விஷயத்தில் பிடிஆர் அடக்கி வாசிப்பார் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசு ஊழியர்களின் வாக்கு வங்கி ஒப்பீட்டளவில் அதிமுகவைவிட திமுகவுக்கே அதிகமாக இருந்து வருகிறது. பழைய ஓய்வூதிய திட்ட விவகாரத்தால் இந்த வாக்கு வங்கி குறைஞ்சிடுமோங்கிற அச்சத்தில் ஸ்டாலின் இருந்து கொண்டிருக்கும் நிலையில், அரசு ஊழியர்களுக்கு எதிரான பிடிஆர் சர்ச்சை கருத்துக்கள் திமுகவின் வாக்கு வங்கிக்கே உலை வைக்கும்படி அமைந்துள்ளதோங்கிற அச்சமும் ஸ்டாலினுக்கு இப்போது ஏற்பட்டுள்ளது. எனவே இந்த முறை பிடிஆரா, அரசு ஊழியர்களின் வாக்கு வங்கியா?ன்னு முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் முதல்வருக்கு ஏற்பட்டிருக்கிறதா கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.

.

Related posts: