Sunday, April 14

நிதி அமைச்சர் பிடிஆரை பதவியில் இருந்து தூக்குங்க…நெருக்கடி கொடுக்கும் டெல்லி!

நிதி அமைச்சர் பிடிஆரை பதவியில் இருந்து தூக்குங்க…நெருக்கடி கொடுக்கும் டெல்லி! திருப்பி அடிக்கும் ஸ்டாலின் !மத்திய அரசின் நிதி உதவிகள் கிடைக்கணும்னா முதலில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை அமைச்சர் பதவியில் இருந்து தூக்குங்கன்னு முதல்வர் ஸ்டாலினுக்கு டில்லியில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல் கசிஞ்சு வருது.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை அமைச்சர் பதவியில் இருந்து தூக்குங்க வேற யாரையாவது போடுங்கன்னு ஸ்டாலினுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்திட்டு வருது.ஆட்சி, அதிகாரம், அரசியல் என அனைத்திலும் எப்போதும் பரபரப்பாக பேசப்படுபவர்கள் பட்டியலில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு எப்போதும் சிறப்பான இடம் உண்டு.அமைச்சராக பொறுப்பேற்றதும் அவர் பங்கேற்ற முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலேயே மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ எனக் குறிப்பிட்டு, தேசிய அளவில் கவனத்தை பெற்றாரு… இன்னுமொரு சந்தர்ப்பத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காமல், தமிழக அரசின் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றதுடன், அதனை பொதுவெளியில் பகிரங்கமாக தெரிவித்து உடன்பிறப்புகளையே ஒரு கணம் அதிர்ச்சியில் ஆழ்த்தியவர்.

இவற்றுக்கு நடுவே, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மத்திய அரசை துறைரீதியாக விமர்சித்து மத்திய அரசை கடுப்பேத்திக்கிட்டே வர்றாரு. தமிழக நிதியமைச்சரின் இதுபோன்ற தன்னிச்சையான செயல்பாடுகளால் ஒட்டுமொத்த மத்திய நிதியமைச்சகமும் செம டென்ஷனில் இருக்குதாம். விளைவு…. மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டுக்கான நிதி உதவிகள் கிடைப்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டிருக்காம்.மாநிலத்தில் அண்மையில் வரலாறு காணாத பருவமழையின் காரணமாக 20 மாவட்டங்கள் சின்னாபின்னமாச்சு. மழையால் சேதமடைந்த மாவட்டங்களை நிரந்தரமாக சீரமைக்க மொத்தம் 6,200 கோடி ரூபாய் தேவைப்படுவதாக மத்திய அரசிடம் தமிழக அரசு சில, பல மாதங்களுக்கு முன்னால கோரிக்கை வச்சிருந்துது.

மாநில அரசின் இந்த கோரிக்கையையடுத்து, மழையால் சேதமடைந்த மாவட்டங்களை மத்திய குழுவினர் நேரில் வந்து ஆய்வு பண்ணிட்டுப் போய் இரண்டு மாசம் ஆயிடுச்சு. ஆனால் தமிழகம் கேட்ட நிதியை மத்திய அரசு இதுவரை தரவேயில்லை. இதேபோல. மாநில பேரிடர் மேலாண்மை பணிகளை மேற்கொள்ள, கடந்த மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட 500 கோடி ரூபாயும் இன்னும் கிடைக்கலையாம்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடுத்த பொது பட்ஜெட்டையே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துவிட்ட நிலையில், தமிழகத்துக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு ஏன் இப்படி பாராமுகமாக நடந்துக்குதுன்னு விசாரிச்சா, மத்திய நிதி அமைச்சக வட்டாரத்தில் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் சொல்லப்படுது.‘ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் முன்வைக்கும் கருத்துக்கள், மற்ற மாநில நிதியமைச்சர்களை தூண்டிவிடுவதாக இருக்குதாம். இதனால் மத்திய நிதியமைச்சகத்தின் முக்கிய உயரதிகாரிகள் சிலர் கடும் அதிருப்தியில் இருக்காங்களாம்.

நிதியமைச்சர் பொறுப்பில் இருந்து பிடிஆரை கூடிய விரைவில் மாத்தணும்; இல்லேன்னா தமிழகத்துக்கு நிதி வழங்கும் விஷயத்தில் மத்திய அரசின் தற்போதைய நிலைப்பாட்டில் மாற்றம் இருக்காதுன்னு மத்திய நிதியமைச்சகத்தில் கறாரா சொல்லிட்டாங்களாம்.திமுக ஐடி விங் செயலாளர் பதவியை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சமீபத்தில் ராஜினாமா செய்துள்ள நிலையில், அவரை அமைச்சர் பதவியில் இருந்து தூக்கணும்னு டிலலியில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வர்றதால முதல்வர் ஸ்டாலின் என்ன பண்ணலாம்னு சக அமைச்சர்கள் நம்பிக்கைக்குரிய அரசு சட்ட வல்லுனர்களோட ஆலோசனை பண்ணிக்கிட்டு இருக்காராம் . நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததும் இந்த விஷயத்தில் ஒரு முடிவு எடுக்கலாம்னு கொஞ்சம் தள்ளி வைச்சிருந்தாரு. இப்ப மீண்டும் இந்த பிரச்சினைக்கு சரியான தீர்வு கிடைக்க ஆலோசனை பண்றாராம்னு தலைமைச் செயலக வட்டாரங்கள்ல பேசிக்கிறாங்க.நிதி ஒதுக்கலைன்னா உச்சநீதிமன்றத்தை நாடுறதத் தவிர வேற வழி இல்லங்கூற முடிவுக்கு வந்திருக்காராம்.

Related posts:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *