Thursday, April 18

மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளர் ஸ்டாலின் ?

மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளர் ஸ்டாலின் ? இது சாத்தியமா ! ..  “அச்சாரம்” போட்ட அண்ணா அறிவாலயம் பிரதமர் ஸ்டாலின் என்ற முழக்கம் இன்று தமிழகமெங்கும் ஒலிக்க தொடங்கியிருக்குது..தேசிய அளவில் முன்னணியில் இருக்கும் முதல்வர்.ஸ்டாலின். இதற்கு என்ன காரணம்? திமுக தொண்டர்களின் உண்மை மனநிலை என்னங்கிறதப் பாப்போம்.10 வருடம் கழித்து ஆட்சியை பிடித்ததில் இருந்து, தன்மீதான கவனத்தை நாட்டு மக்களிடம் குவித்து வருகிறது திமுக அரசு..  திமுக ஆட்சி பொறுப்பேற்ற 100 நாட்களில், நாட்டிலேயே மிகவும் பிரபலமான முதல்வர்கள் பட்டியலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முதலிடம் பெற்றிருந்ததே இதற்கு சாட்சியாக அமைஞ்சிருக்குது. இதைதவிர, ஆட்சிக்கு வந்த 100 நாட்களிலேயே கொரோனாவை சிறப்பாக கையாண்ட விதம், மக்களுக்கான நலத்திட்ட உதவிகள், அதேநேரத்தில் நிதிச் சுமையை சீரமைக்க எடுத்துக்கொண்ட சீரிய முயற்சிகள் தமிழக மக்களிடமும் நாளுக்கு நாள் ஆதரவு ஸ்டாலினுக்கு பெருகியதும் இதற்கு முக்கியமான காரணமா அமைஞ்சது. மேலும், மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுக்கணும்னு பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு, கடந்த மாதம் முக ஸ்டாலின் எழுதியிருந்த கடிதம் பாஜக மேலிடத்தையே சற்று அதிர வைக்கவும் செய்தது. இது எல்லாவற்றிற்கும் மேலாக, தேசிய தலைவர்கள் அடிக்கடி தமிழகம் வந்து போய் கொண்டிருப்பதும், மேலிடத்தை யோசிக்க வச்சிருக்குது. நேற்றைய தினமும் அந்த மாதிரியான காட்சிதான் தமிழகத்தில் காண முடிந்தது.. ராகுல்காந்தி, பினராயி விஜயன், உமர் அப்துல்லா, தேஜஸ்வி யாதவ்ன்னு எத்தனையோ தலைவர்கள் ஸ்டாலினின் நூல் விழாவிற்கு வந்திருந்து சிறப்பித்திருந்தனர்..  இதில், முதல்வர் ஸ்டாலின் பேசும் போது, என்ன சொன்னார்ன்னா “மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கொண்ட வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படணும். அதற்கு அகில இந்திய காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும், அனைத்து மாநிலக் கட்சிகளும் குரல் கொடுக்கணும். நிதி உரிமைகள் பறிக்கப்பட்டு, மாநிலங்கள் அதிகாரமற்ற பகுதிகளாக உருக்குலைக்கப்படுவதை தடுத்தாக வேண்டும்.  இங்கு சட்டத்தின் ஆட்சியாக மட்டுமல்லாமல், சமூகநீதியின் ஆட்சியாக மாற்றப்பட வேண்டும். இதற்காக அகில இந்திய அளவிலான சமூகநீதிக் கூட்டமைப்பை திமுகசார்பில் உருவாக்கி, அனைத்து அகில இந்தியக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறேன். இந்த வகையான திராவிடவியல் கோட்பாட்டை இந்தியா முழுமைக்கும் விதைப்பதை எனது பணியாக மேற்கொள்வேன். அந்த வகையில் எனது அரசியல் வாழ்க்கையின் திருப்புமுனைதான் இந்த நிகழ்ச்சி” என்று ஸ்டாலின் பேசிய பேச்சு பாஜக கூடாரத்தையே அசைத்து பார்த்து வருகிறது. மம்தா, பினராய் அதாவது ஒரு முதிர்ந்த தேசிய தலைவரப் போல பக்குவம் நிறைந்ததாக ஸ்டாலினின் பேச்சு நேற்றைய தினம் இருந்ததாக அரசியல் விமர்சகர்கள் சொல்றாங்க.. வரப்போகும் எம்பி தேர்தலுக்கு, பாஜகவுக்கு எதிரான சக்திகள் ஒன்று திரண்டு வரும் இந்த சூழலில் ஸ்டாலினின் பேச்சு கவனத்தை ஈர்த்து வருது.. மம்தா, சந்திரசேகரராவ், பினராய், உத்தவ்தாக்கரே என பெருந்தலைகள் இறங்கி உள்ள மெகா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்ற சிக்கல்கள் இனி கண்டிப்பாகவே எழவே செய்தாலும், இதில் ஸ்டாலின் பெயரும் இடம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுது. இது முன்கூட்டியே தெரிஞ்சுகிட்ட பிரசாந்த் கிஷோர் ஹிந்தி எதிர்ப்பை கொஞ்சம் ஒதுக்கி வைங்க.நீங்க எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஹிந்தி தெரியாது போடாங்கிற மாதிரி நேரடியாக எதிர்ப்புக் காமிச்சிராதீங்கன்னு சொன்னதுனால ஸ்டாலின் கொஞ்சம் அடக்கித் தான் வாசிக்கிறாரு. ”மு.க. ஸ்டாலின் போன்றவர்கள், பிரதமராக இருந்தால் நாடு செழிக்கும்னு டெல்லியில் உள்ள அகில இந்திய தலைவர்கள் அனைவரும் எண்ணத்தொடங்கிட்டாங்கங்கிறதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டி இருக்குது… இதை மேலும் வலுப்படுத்தும் விதமாக, திமுக தொண்டர்களே அத்தகைய முழக்கத்தை எழுப்ப தொடங்கிட்டாங்க. முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாள் இன்று, தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அண்ணா அறிவாலயத்தில் காலையில் இருந்தே திமுக தொண்டர்கள் குழுமியிருந்தனர்.. முதல்வர் ஸ்டாலினின் கார் நுழைந்ததுமே, வருங்கால பிரதமர் வாழ்க என்று உற்சாகமாய் முழக்கமிட்டனர்.. இந்த முழக்கம் வெறும் தொண்டர்களின் விருப்பம் என்று மட்டும் எடுத்து கொண்டு கடந்து விட முடியாது என்றாலும், பிரதமர் வேட்பாளருக்கான சாதகமான சூழல் அறிவாலயத்தை சூழ்ந்து வருவதாக தெரிகிறது.என்னதான் திமுக தொண்டர்கள் எங்கள் தளபதி பிரதமராகணும்னு விருப்பப்பட்டாலும் டெல்லியில் அதுக்குண்டான சூழ்நிலை உருவாகணுமே.
ஒருவேளை மூன்றாவது அணி சார்பில் ஸ்டாலினை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் சூழ்நிலை உருவாகும்னு நம்பலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *