Sunday, April 14

அதிமுக எம்எல்ஏக்களுக்கு ஆண்மையில்லைன்னு நெல்லை சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் சட்டசபைல சூடா பேசுனதுனால அதிமுக பாஜக கூட்டணி உடைஞ்சது இனிமே தான் பாஜகவுக்கு சிக்கலே..இருக்குது! தனித்து களமிறங்கியதன் பலனை அதிமுக அறுவடை செஞ்சிட்டோம்னு.. அக்கட்சி மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறாங்களாம்.. ஆனால், வரப்போகும் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி சேருமா? என்ற சந்தேகம் இப்போதே கிளம்ப ஆரம்பித்துவிட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், பாஜகவின் ஆதரவாளராகவே இருந்துகிட்டு வர்றாருங்கிறது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.. பாஜக மேலிடத்துக்கு நெருக்கமானவர் என்பது மட்டுமல்லாமல், நம்பிக்கையானவரும்கூட என்பதும் தெரிந்த விஷயம்தான். பாஜக மேலிடத்தை ஓபிஎஸ் பகைத்து கொள்ளாத அதேசமயம், தான் முதல்வராக ஆட்சியில் இருந்தபோது, மேலிடத்துக்கு சில விஷயங்களில் வளைந்து கொடுக்காமல் இருந்தவர் எடப்பாடி பழனிசாமி என்பதும் அறிந்த விஷயம்தான். ஆனால், சமீபகாலமாக ஓபிஎஸ்ஸிடம் மாறுதல் காணப்படுகிறதோ இல்லையோ எடப்பாடியிடம் நிறையவே மாற்றம் காண முடியுது.. குறிப்பாக பாஜகவுடனான உறவில் நெருங்கியே இருக்கிறாரோ என்ற பிம்பத்தையும் ஏற்படுத்த துவங்கியிருக்காரு. இதற்கு 3 உதாரணங்களை சொல்லலாம்.. 3 மாத காலமாகவே, ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற பாஜகவின் முழக்கத்தை எடப்பாடியும் கையில் எடுத்திருக்கிறார். ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ என்பது பாஜகவின் முழக்கமாகும்.. இதற்கு இப்போதுவரை பெரிய அளவில் யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை.. அது என்ன ஒரே தேசம் ! ஒரே தேர்தல்? “மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேணும்னு முதன்முதலில் இந்த விஷயத்தை ஆரம்பிச்சு வைச்சதே வாஜ்பாய் ஆட்சியில் துணைபிரதமராக இருந்த அத்வானிதான்.. அதைதான் இப்போது பாஜக முழங்கிவருகிறது.. இந்த விவகாரத்தை இதை இன்னும் ஓபனாக சொல்லணும்னா மாநிலங்களின் உரிமைகளை பறித்து விட்டு, மத்தியில் ஒரே ஆட்சி என்று கொண்டுவர வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம்.. அதன் தொடர்ச்சியாகத்தான், 2009-ம் ஆண்டு எம்பி தேர்தலில் பாஜகவின் தேர்தல் அறிக்கையிலும் “ஒரே தேசம், ஒரே தேர்தல்” இடம்பெற்றது. எடப்பாடி பழனிசாமி இதைதான் பாஜக சொல்வதைவிட அதிகமாக எடப்பாடி பழனிசாமி சொல்ல ஆரம்பித்துவிட்டதே தமிழக அரசியல் களத்துக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் வந்தால் திமுக ஆட்சியில் நீடிக்காது.. இந்த ஆட்சி இன்னும் கொஞ்சம் காலத்துக்குதான் என்று செல்லுமிடமெல்லாம் காட்டமாக நடந்து முடிந்த பிரச்சாரங்களிலும் பயன்படுத்தினார்.. இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.ஆனா மக்கள் மத்தியில் இந்த பிரச்சாரம் எடுபடலை. க அதேபோல, கூட்டணி பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாமல், பாஜக தனித்து போட்டின்னு அறிவிச்சப்போ செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசினார்.. அப்போது, “உள்ளாட்சி தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் அதிக தொகுதிகள் போட்டியிட்டு, அதிக இடங்களை வெல்ல வேண்டும் என்றுதான் நினைப்பார்கள்.. அதனால்தான் பாஜக தனித்து போட்டியிடுயுது”ன்னாரு. எடப்பாடி இப்படி சொன்னதுமே அவரது ஆதரவாளர்களான கேபி முனுசாமியும், சிவி சண்முகமும் “ஏங்க இப்படி சொல்லிட்டீங்க? நமக்கு இதைவிட்டா வேற சான்ஸ் இல்லை, இப்படியே வரப்போகிற தேர்தலிலும் பாஜகவை விட்டு தனித்து போட்டியிடுவதுதான் சரின்னு சொல்லியிருக்காங்க. அதற்கு எடப்பாடி, “இது உள்ளாட்சி தேர்தல்தானே.. எப்படியும் குறைவான வாக்குகளைதான் வாங்குவார்கள்… அவர்கள் பெறும் அந்த வாக்குகளை அடிப்படையாக வைத்து, வரப்போகும் எம்பி தேர்தலில் சீட் தந்துடலாம்.. 2 வருடம் இன்னும் பாஜக ஆட்சிதான்.. அவர்களை பகைத்து கொள்ள முடியாதுன்னு அவர்களை சமாதானப்படுத்தியதாக கூறப்பட்டது. அதேபோல, நீட் விஷயத்தில் அனைத்து கட்சி கூட்டத்தையும் அதிமுக புறக்கணித்ததற்கு காரணமே எடப்பாடி பழனிசாமிதாங்கிற தகவலும் வெளிவந்தது.. “கூட்டத்தை நாம் புறக்கணித்தால் அதிமுகவுக்குத்தான் கெட்டப் பெயர் வரும். திமுகவுக்கு சாதகமாகிவிடும். பாஜகவின் முடிவுக்கேற்ப நாம் ஏன் முடிவு செய்ய வேண்டும்?’ என்று ஓபிஎஸ் சொல்லியும், எடப்பாடி ஏற்கவில்லையாம்.. கூட்டத்தை புறக்கணிப்போம்ன்னு அழுத்தமாக சொல்லி உள்ளார். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் எடப்பாடி பழனிசாமி, பாஜகவுக்கு சாதகமாக மாறி கொண்டிருக்கும் சூழலில்தான் இன்றைய உள்ளாட்சி தேர்தல் ரிசல்ட் வந்திருக்குது.. எதிர்பார்த்தபடியே ஆளும்தரப்பு பெரும்பான்மையை கைப்பற்றிவிட, 2வது இடத்துக்கு அதிமுக தள்ளி விடப்பட்டிருக்குது.. தனித்து போட்டியிட்ட பாஜக ஆங்காங்கே வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.. அதிமுகவின் இந்த வெற்றியானது 2 வகையான லாபத்தை ஏற்படுத்தி தந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. பாஜகவை கூட்டணியிலிருந்து கழட்டி விட்டதால்தான் இந்த அளவுக்கு அதிமுகவுக்கு வெற்றி கிடைச்சிருக்குதுன்னு தொண்டர்களே பூரித்து சொல்கிறார்களாம். கடந்த எம்பி தேர்தலிலேயே அதிமுக வெற்றி பெற்றிருக்க வேண்டியதுதான்.. ஆனால், முத்தலாக், சிஏஏ இயற்றிய சமயத்தில்தான், தேர்தலை பாஜகவுடன் இணைந்து அதிமுக சந்திக்க வேண்டி வந்தது.. அதிலும் இடைத்தேர்தல் சமயத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் நிறைந்த திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், பகுதிகளுக்கு பாஜக தரப்பில் ஒருத்தர்கூட பிரச்சாரத்துக்கு வராமல் இருந்ததையும் இங்க ஞாபகப்படுத்த வேண்டி இருக்குது. ஊராட்சி வார்டு எம்பி தேர்தல், சட்டசபைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என அனைத்திலுமே பாஜகவுடன் கூட்டணி வைத்து அதிமுக மண்ணை கவ்வியதுதான் மிச்சம்.. இதனால் பாஜகவுக் வேண்டும்னா லாபம் கிடைச்சு 4 எம்எல்ஏக்களை பெற்றுக்காள்ள முடிஞ்சதே தவிர, அதிமுகவுக்கு எந்த பிரயோஜனமும் கிடைக்கலை.. அதிலும் கடந்த மாவட்ட ஊராட்சி வார்டு தேர்தலில் வெறும் 2 இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றியை பெற்றிருந்தது.. திமுகவோ 139 இடங்களை அள்ளியது… அதேபோல ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலிலும் அதிமுக 212 இடங்களை வென்ற நிலையில், திமுக 982 இடங்களை அசால்ட்டாக பெற்றது. இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில்., சில இடங்களில் திமுகவை முந்திக் கொண்டு அதிமுக வெற்றியை பெற்றிருக்குது.. இது திமுகவுக்கே கொஞ்சம் ஷாக்தான்.. மாநகராட்சிகளில் தவிர, மற்ற இடங்களில் அதிமுக சொல்லிக் கொள்ளும்படியான இடங்களை கைப்பற்றி உள்ளது. இது அதிமுக தரப்புக்கு இழந்து போன தெம்பை மீட்டு தந்துள்ளது.. இனி பாஜக இல்லாமல் நிம்மதியாக போட்டியிடலாம்ங்கிற தைரியத்தையும் தொண்டர்களுக்கு வழங்கி உள்ளதாம்.. நிர்வாகிகள் மனநிலை தொண்டர்கள், நிர்வாகிகளின் மனநிலை இதுவென்றாலும், அதிமுக மேலிடம் என்ன நினைக்கிறது என்பதுதானே முக்கியம்.. மத்தியில் பாஜக 2 வருட காலம் இருக்க போகுதுங்கிறதால மறுபடியும் எம்பி தேர்தலில் கூட்டணி வைக்க தயாராகுமா? அல்லது இதுதான் சாக்குன்னு தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப பாஜகவை கழட்டிவிட்டு தனித்து களமிறங்குமா? அல்லது எடப்பாடியின் வியூகம் பலிக்குமா? என்பதெல்லாம் இனிமேல்தான் தெரியவரும்.. திமுகவுக்கு மாற்று நாங்கள்தான் என்று சொல்லி கொண்டிருக்கும் பாஜகவுக்கு இனிமேல் தான் சிக்கலே..! ஆனாலும் எடப்பாடி யார் நாடாளுமன்ற தேர்தல்ல பாஜகவோடத்தான் கூட்டணி வைப்பாருன்னு அவருக்கு நெருக்கமான விசுவாசிகள் சொல்றாங்க.

Related posts:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *