Thursday, April 18

கோவை மேயர் யார்? முட்டி மோதும் செந்தில் பாலாஜி ! வேலுமணி ! ஸ்டாலின் திட்டம் பலிக்குமா ?

கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 19-ந் தேதி நடக்குது.

கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் இருக்குது. இந்த தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி மாநகராட்சியில் 50 வார்டுகள் பெண்களுக்கும், 50 வார்டுகள் ஆண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.தேர்தல்ல பெண்களுக்கு 30%இட ஒதுக்கீடு கேட்டும் இதுவரை கிடைக்கலை. ஆனா திமுக அரசு 50% இட ஒதுக்கீடு குடுத்திருக்கு. அனைத்து வார்டுகளிலும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

வேட்பாளர்கள் எல்லாருமே உற்சாகத்தோட தங்கள் வார்டுகளில் பிரசாரம் செஞ்சிட்டு வர்றாங்க. இதில் கிழக்கு மண்டலத்தில் 8, மேற்கு மண்டலத்தில் 11, தெற்கு மண்டலத்தில் 4, வடக்கு மண்டலத்தில் 14, மத்திய மண்டலத்தில் 13 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர பொதுபிரிவிலும் பெண்கள் போட்டியிடுறாங்க.

இதன்படி கோவை கிழக்கு 63, மேற்கு 78, தெற்கு 43, வடக்கு 95, மத்திய மண்டலத்தில் 93 என மொத்தம் 372 வேட்பாளர்கள் கோவை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடுகின்றனர். கோவை வடக்கு மண்டலத்தில் 14 வார்டுகளுக்கு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 12 வார்டுகள் பொதுப்பிரிவிலும், இரு வார்டுகள் ஆதிதிராவிடர்களுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கு.

கோவை மாநகராட்சியின் வடக்கு மண்டலத்தில் தான் அதிக வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. வடக்கு மண்டலத்தில் அதிகபட்சமாக 95 பெண்கள் வேட்பாளர்களாக களமத்தி இருக்கிறாங்க.. இதற்கு அடுத்தபடியாக மத்திய மண்டலத்தில் 93 பெண்கள் வேட்பாளர்கள் போட்டியிடுறாங்க..

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுக நிர்வாகிகளிடையே உட்கட்சி பூசல் விவகாரம் வெடித்து வருகிறது. யார் மேயராக தேர்ந்தெடுப்பார்கள் ? என்ற கேள்வி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கோவை திமுக வேட்பாளர் பட்டியலில் கட்சி நிர்வாகி மனைவிகளுக்கும், கட்சியில் பாடுபடாத பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுது. இதேபோல, வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே மீனா ஜெயக்குமார் கோவையில் உள்ள 57வது வார்டில், தேர்தல் அலுவலகத்தை திறந்து பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். ஆனால், அந்த வார்டில், திமுக சாந்தாமணியை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

ஆளுங்கட்சியான திமுகவில் மேயர் பதவிக்கான போட்டியில் 3 பேர் இருக்கிறார்கள். 46-வது வார்டில் போட்டியிடக் கூடிய மீனா லோகு ஏற்கனவே மாமன்ற உறுப்பினராக இருந்தவர், ஆசிரியர் பணியை துறந்துவிட்டு அரசியலுக்கு வந்தவர். மேயர் ரேஸில் தற்போது முன்னணியில் இருக்கிறார்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாநகர் மாவட்டச் செயலாளருமான சிங்காநல்லூர் கார்த்திக்கின் மனைவி இளஞ்செல்வியும் மேயர் ரேஸில் பிரதான இடத்தில் இருக்கிறார். கார்த்திக் ஏற்கனவே கோவை மாநகராட்சி துணை மேயராக இருந்தவர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் மகேந்திரனால் தனது வெற்றிவாய்ப்பை சிங்காநல்லூரில் இழந்த கார்த்திக், அமைச்சராகும் வாய்ப்பையும் நழுவவிட்டார். இந்நிலையில் இந்த முறை தனது மனைவி இளஞ்செல்வியை கோவை மேயராக்குவதுங்கிற முடிவில் இருக்கிறாரு.

22 வயதே ஆன இளம் பெண் ஒருவரும் கோவை மேயர் பதவிக்கான போட்டியில் இருக்கிறார். கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதியின் மகளான நிவேதா சேனாதிபதி 97-வது வார்டில் போட்டியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.அநேகமாக இவரை தேர்ந்தெடுக்கவும் வாய்ப்பு இருக்குதுன்னு ம் சொல்றாங்க திமுகவினர். எப்படி இருந்தாலும் முதல்வர் ஸ்டாலின் தான் ‘கோவை’ மேயர் யாருன்னு தேர்ந்தெடுப்பார்ன்னு சொல்றாங்க..

கோவை மாநகராட்சியைத் தங்களது கோட்டையாகத் தக்கவைக்க அ.தி.மு.க-வும், கடந்தகாலத் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தி.மு.க-வும் அனல்பறக்க மோதிக்கொண்டிருக்கிறாங்க.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சி தனி கவனம் ஈர்த்துள்ளது. கோவையைத் தங்களது கோட்டையாகத் தக்கவைக்க அ.தி.மு.க-வும், கடந்தகாலத் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தி.மு.க-வும் அனல்பறக்க மோதிக் கொண்டிருக்கின்றன.

அதிமுக கோவை மேயர் ரேஸ்… `புறப்பட்ட புதிய புயல்’ – அப்செட்டில் எஸ்.பி வேலுமணி நிழல்?!

அ.தி.மு.க-வின் வெற்றியைத் தக்கவைக்க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், தி.மு.க-வை வெற்றிபெறவைக்க அமைச்சர் செந்தில் பாலாஜியும் வியூகங்களை வகுத்துவர்றாங்க. கோவை மாநகராட்சித் தேர்தல் களத்துக்கு முன்பு, மாநகராட்சி நிர்வாகத்தில் உள்ள பிரச்னைகளைத் தெரிந்துகொள்வோம்.

“கோவையைப் பொறுத்தவரை அ.தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணியின் சொந்த ஊர். அவர் கண் அசைவில்தான் கோவை மாநகராட்சி இயங்கிவந்தது. இதனால் ஏராளமான ஊழல் புகார்களும் தெரிய வந்தது. கடந்த ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வேலுமணி வீட்டில் ரெய்டு நடத்தியபோது, அவருடன் நெருக்கமாக இருந்த அதிகாரிகள் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

ஒவ்வோர் ஆண்டும் மாநகராட்சி பட்ஜெட்டின்போது நிதிப்பற்றாக்குறை எகிறிக்கொண்டே போகிறது. ஆட்சி மாறியவுடன் திட்டப்பணிகளுக்குப் பணம் இல்லாமல், ரூ.100 கோடி மதிப்பிலான பணிகள் ரத்துசெய்யப்பட்டன.

தடுக்கி விழுந்தால் மேம்பாலம், ஸ்மார்ட் சிட்டி பணி, அடுத்து மெட்ரோ ரயில் திட்டம் வரை அடுக்கினாலும், கோவை மாநகராட்சியில் பல இடங்களில் சரியான சாலைகள் இல்லை. ரூ.3,167 கோடிக்கு கோவை குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதும் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வருகிறது.போக்குவரத்தும் பாடாய்ப்படுத்துகிறது. பல இடங்களில் பாதாளச் சாக்கடை பணிகள் முழுமையாக முடியலை. தேர்தலில் வெற்றிபெற்று அரியணை ஏறுபவர்களுக்கு இந்தப் பிரச்னையைச் சரிசெய்யவே இரண்டு, மூன்று ஆண்டுகளாகும்.

2016-ம் ஆண்டிலிருந்தே கோவை மாநகராட்சியைக் கைப்பற்ற அ.தி.மு.க வியூகங்களை வகுத்துவருகிறது. கோவையைப் பொறுத்தவரை தேர்தல் பணிகளில் எப்போதும் அ.தி.மு.க-தான் வேகம் காட்டும். ஆனால், செந்தில் பாலாஜி வருகையால், தி.மு.க-வும் இந்த முறை களத்தில் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் கடந்த காலங்களில் தி.மு.க-வை வதைக்கும் உட்கட்சிப்பூசல் பஞ்சாயத்து இப்போதும் நடந்துக்கிட்டுதான் இருக்குது.வேட்பாளர் தேர்வு, கூட்டணிகளுக்கு சீட் ஒதுக்கியதுன்னு எல்லாத்திலுயேயும் பஞ்சாயத்துதான். செந்தில் பாலாஜியின் கார், வீட்டை முற்றுகையிட்டும் உடன்பிறப்புகள் எதிர்ப்புகளைக் காட்னாங்க.

வேட்பாளர் பட்டியலில் தி.மு.க-வைப் போல, அ.தி.மு.க-விலும் பஞ்சாயத்து இருக்கத்தான் செய்யுது.. பல சீனியர்களுக்கு சீட் கொடுக்கப்படலை. சீட் கேட்ட பலரிடம் லட்சத்தில் வெட்டுங்கள் என்று கூறவே பதறியிருக்கிறார்களாம் ரத்தத்தின் ரத்தங்கள். அதேநேரத்தில் புதிதாக வந்தவர்கள், அந்தந்தப் பகுதிகளில் உள்ள செல்வந்தவர்களுக்கு வாரி வழங்கியுள்ளனர்.வேலுமணியின் நிழலாக வலம்வருபவரும், `நமது அம்மா’ நாளிதழ் வெளியீட்டாளருமான சந்திரசேகர் மனைவி சர்மிளாதான் மேயர் வேட்பாளர் என்று கூறப்பட்டுவந்தது. கடைசி நேர ட்விஸ்ட்டாக, கிருபாலினி என்பவரை டிக் செய்திருக்கிறதாம் அ.தி.மு.க. இதன் காரணமாக வேலுமணியின் ஆதிக்கத்துக்கு எதிராக, ஆங்காங்கே கலகக்குரல்கள் எழத் தொடங்கியுள்ளன.

பாஜக தனித்துக் களமிறங்குவது அதிமுக-வுக்குச் சிக்கலை ஏற்படுத்தும்னு முதலில் சொல்லப்பட்டது. ஆனால், பாஜக கூட்டணியில் இல்லாததால், சிறுபான்மையினர் வாக்குகளை அதிமுக அறுவடை செய்யும்னு பல இடங்களில் அதிமுக – பாஜக `லோக்கல் அண்டர்ஸ்டாண்டிங்கில்’ செயல்படுறாங்கன்னு சொல்லப்படுது.தி.மு.க-விலும் மாவட்டப் பொறுப்பாளர்கள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சீட் விஷயத்தில் தாரளமாக விளையாடியுள்ளனர். சீட் கிடைக்காத ஆத்திரத்தில் சில இடங்களில் உடன்பிறப்புகள் சுயேச்சையாகப் போட்டியிடுறாங்களாம்.தி.மு.க-வைப் பொறுத்தவரை சீனியர் அடிப்படையில் மீனாலோகு, மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் மனைவி லக்குமி இளஞ்செல்வி, புறநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி மகள் நிவேதா ஆகியோர் மேயர் ரேஸில் உள்ளனர்.

ஆனால் மேயர் விஷயத்தில் கட்சித் தலைமையோ, செந்தில் பாலாஜியோ எந்த முடிவும் செய்யவில்லை. வெற்றிபெற்ற பிறகுதான் மேயர் விஷயத்தில் முடிவு செய்யப்படும். அதுவும் சர்ப்ரைஸாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

`களப்பணிகளை பொறுத்தவரை, தேர்தல் முடியும்வரை கட்சிக்காரர்கள் யாரும் தூங்கவே கூடாது’ன்னு வேலுமணி சொல்லிகிட்டே வர்றாராம்.தி.மு.க-வுக்கு இணையாகச் செலவு செய்யணும்ங்கிற்காகவே ஒரு பக்கம் சந்திரசேகர் மனைவி ஷர்மிளா, மற்றொரு பக்கம் புறநகர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணிச் செயலாளர் செந்தில் கார்த்திகேயன் மனைவி கிருபாலினி என்று இருவரையும் இறக்கிவிட்டுள்ளார்.“தேர்தலில் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை தி.மு.க-வுக்கு இணையாகச் செலவு செய்யணும்னு வேலுமணி முடிவு செஞ்சிருக்கிறாராம். தி.மு.க எவ்வளவு வைட்டமின்களை இறக்குகிறதோ, அதற்கு இணையாக அல்லது அவர்களுக்கு ஒருபடி மேல் சென்று வைட்டமின்களைக் கொடுப்போம். தி.மு.க-வை எளிதில் வெற்றிபெற விட மாட்டோம்”ங்கிறாங்க அ.தி.மு.க-உடன்பிறப்புகள்.

ஆனால் களத்தில் அ.தி.மு.க-வில் பெரிய அளவுக்கு உற்சாகம் தென்படலைன்னு வருத்தத்தோட சொல்றாங்க ஒருசில இடங்களில் வேட்பாளர்களுக்கு தலைமையிடமிருந்து ரூ.10 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது.முன்பு பரப்புரைக்குச் செல்பவர்களுக்கு, அ.தி.மு.க-வில் ரூ.500 பேட்டா, உணவு, மது வகைகள் எல்லாம் கொடுப்பாங்களாம். ஆனா இந்த முறை பல இடங்களில் ரூ.100-300-தான் கொடுக்கிறாங்களாம்.

அப்படியே தி.மு.க பக்கம் வந்தால் செலவு செய்வதற்காகவும், தேர்தல் களப்பணிக்காகவும் கரூரிலிருந்து செந்தில் பாலாஜியின் படைகள் களமிறக்கப்பட்டுள்ளனர்.தினசரிச் செலவுக்காக அந்தந்த வார்டு பொறுப்பாளர்களிடம் ரூ.25,000 வரை கொடுக்கப்படுதாம். பரப்புரைக்கு வருபவர்களுக்கே தினசரி ரூ.500 வரை கொடுக்கிறாங்களாம். ஓட்டுக்கு வைட்டமின் `ப’, பரிசுப் பொருள்களை கொடுக்கவும் தி.மு.க திட்டமிட்டுள்ளதாம்.

வேலுமணி, செந்தில் பாலாஜி இருவருமே தேர்தல் அரசியலில் கைதேர்ந்தவர்கள்தான். கோவை அரசியல் செந்தில் பாலாஜிக்கு புதிது என்பது ஒரு மைனஸ். அதேநேரத்தில் ஆளுங்கட்சியாக இருப்பது தி.மு.க-வுக்கு பெரிய ப்ளஸ். கோவை மக்களின் எண்ண ஓட்டங்களை விரல்நுனியில் வைத்திருப்பது அ.தி.மு.க-வுக்கு ப்ளஸ்.

தற்போதைய சூழல்ல வைட்டமின் `ப’ விஷயத்தில் அ.தி.மு.க-வைவிட தி.மு.க கை சற்றே ஓங்குவது அ.தி.மு.க-வுக்கு மைனஸ். கட்சிகளில் நிலவும் உட்கட்சிப்பூசல்கள் இருவருக்குமே மைனஸ். இப்படி எல்லாவற்றிலும் சம பலமாக இருப்பதால், கோவை மாநகராட்சியில் கடுமையான போட்டி ஏற்பட்டு வருகிறது! என்ன தான் செலவு செஞ்சாலும் மக்கள் ஆதரவு யாருக்குங்கிறதுதான் முக்கியம்.பாக்கலாம் திமுகவின் பணபலமும் அதிகார பலமும் வெல்லப் போகுதா இல்லை அதிமுகவின் பணபலமும் மக்கள் ஆதரவும் வெல்லப் போகுதாங்கிறதப் பொறுத்திருந்துதான் பார்க்கணும்.

Related posts:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *