Thursday, April 18

உதயநிதிக்கு மந்திரி பதவி !துர்கா ஸ்டாலின் அழுத்தம்? திணறும் ஸ்டாலின்!

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்க ஸ்டாலினின் குடும்பத்தினர் அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

கலைஞருக்கு பின் ஸ்டாலின்தான் என்ற நிலையை உருவாக்க ஸ்டாலினுக்கு நீண்ட வருடங்கள் பிடித்தது. திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற போதே, அவரது மகன் உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறாமல் இருந்தது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

முன்னதாக, வாரிசு அரசியலை அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கையில் எடுத்தபோது, உதயநிதி ஸ்டாலினுக்கு சீட் கொடுப்பதில் திமுக மேலிடம் தயக்கம் காட்டி வந்தது. இந்த தகவலை அவரது தாயாரும் ஸ்டாலினின் மனைவியுமான துர்கா ஸ்டாலினே தேர்தல் பிரசாரத்திற்கிடையே டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். மேலும், உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுப்பது பற்றியும் கட்சிதான் முடிவு செய்யும் என்றும் துர்கா ஸ்டாலின் அப்போது தெரிவித்திருந்தார்.

இதனிடையே, தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், தொடர்ந்து தனது தொகுதியில் விசிட் அடித்து நல்ல பெயரை வாங்கி வருகிறார். அத்துடன், ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக உதயநிதியை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதிலும் அவரது குடும்பத்தினரும் கவனமாக இருப்பதாக கழக உடன்பிறப்புகள் சொல்றாங்க.. அதன் எதிரொலியே, அமைச்சர்கள் முதல் எம்.எல்.ஏ.க்கள் வரை புதிய திட்டங்கள் தொடங்கி வைப்பதற்கும், முக்கிய நிகழ்ச்சிகளுக்கும் உதயநிதி ஸ்டாலினின் நேரத்தைத்தான் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்க ஸ்டாலினின் குடும்பத்தினர் அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, வாக்குப்பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் இடையேயான காலகட்டத்தில் திமுகதான் வெற்றி பெறும் என்ற கணிப்புகள் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருந்த சமயத்தில், உதயநிதியை அமைச்சராக்கிடணும்னு அவரது குடும்பத்தினர், குறிப்பாக துர்கா ஸ்டாலின் அழுத்தம் கொடுத்து வந்ததாக தகவல்கள் வெளியாச்சு.

ஆனால், முதல்முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்கவுள்ளதால், எந்தவிதமான விமர்சனமும், எந்த பகுதியில் இருந்தும், தன் மீது வந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்த ஸ்டாலின், அதனை சுட்டிக்காட்டியே தனது குடும்பத்தினரை ஆஃப் செய்து வைத்திருந்தார். தற்போது திமுக அரசு பொறுப்பேற்று 200 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இதுவரை ஆட்சி மீது பெரிய விமர்சனங்கள் எதுவும் எழவில்லை. இந்த சூழலில், இந்த சமயத்திலாவது உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பை கொடுக்கணும்னு அவரது குடும்பத்தினர் மீண்டும் ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுக்கத் துவங்கியுள்ளதாக, சித்தரஞ்சன் சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்குது.உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு துறைமுகம் தொகுதியில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ‘எனது அருமை நண்பர் உதயநிதியின் பணிகள் ஒரு சட்டமன்றத் தொகுக்குள் அடங்கிவிடக் கூடாது. அவர் அமைச்சராகி அவரது பணிகள் தமிழகம் முழுவதும் இருக்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இதே போல்தான் கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் நடந்தது. ‘கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது சில மாவட்டச் செயலாளர்கள் உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடணும்னு விருப்பமணு அளித்தார்கள். ஆனால், ‘நான் தேர்தலில் போட்டியிடலை’ன்னு மறுப்பு தெரிவித்தார் உதயநிதி. அதன் பிறகு பல மாவட்டச் செயலாளர்கள் ‘உதயநிதி கண்டிப்பாக போட்டியிடணும்னு’ வீட்டிற்கே சென்று வற்புறுத்தினார்கள்.

இந்த நிலையில்தான் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று துர்கா ஸ்டாலின் விரும்புகிறாராம். அதனால்தான், துறைமுகம் தொகுதியில் உதயநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், ‘அருமை நண்பர் உதயநிதியின் பணிகள் ஒரு தொகுதிக்குள் அடங்கிவிடக்கூடாது. அவரது பணிகள் தமிழகம் முழுவதும் தொடர வேண்டும். எனவே அவருக்கு ‘அமைச்சர் புரமோஷன்’ தரவேண்டும் என்று ஓபனாகவே பேசினார் அமைச்சர் அன்பில் மகேஷ். துர்கா ஸ்டாலின் வற்புறுத்தலின் பேரிலேயே அன்பில் அப்படி பேசினார் என்கிறார்கள் ஸ்டாலின் குடும்பத்திற்கு நெருக்கமான வட்டத்தில் உள்ளவர்கள்.

முதன் முதலாக அன்பில் பேசிவிட்டார்… இனி அடுத்தடுத்து உள்ள ஜூனியர் அமைச்சர்களும், ‘உதயநிதி அமைச்சராக வேண்டும்’ணு சொல்ல இருக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர். அதன் பிறகு, தவிர்க்க முடியாத காரணத்தால், கட்சித் தலைமை உதயநிதிக்கு அமைச்சரவையில் முக்கியத்துவம் வாய்ந்த உள்ளாட்சித் துறையை ஒதுக்கவும் வாய்ப்பு இருக்கிறதாம்.

இந்த நிலையில்தான் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று துர்கா ஸ்டாலின் விரும்புகிறாராம். அதனால்தான், துறைமுகம் தொகுதியில் உதயநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், ‘அருமை நண்பர் உதயநிதியின் பணிகள் ஒரு தொகுதிக்குள் அடங்கிவிடக்கூடாது. அவரது பணிகள் தமிழகம் முழுவதும் தொடர வேண்டும். எனவே அவருக்கு ‘அமைச்சர் புரமோஷன்’ தரவேண்டும் என்று ஓபனாகவே பேசினார் அமைச்சர் அன்பில் மகேஷ். துர்கா ஸ்டாலின் வலியுறுத்தி சொன்னதாலேயே அன்பில் அப்படி பேசினார் என்கிறார்கள் ஸ்டாலின் குடும்பத்திற்கு நெருக்கமான வட்டத்தில் உள்ளவர்கள்.

இருந்தாலும், முதல்வர் ஆனதில் இருந்தே கொரோனா இரண்டாம் அலை, கனமழை வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை திமுக அரசு சந்தித்து வருகிறது. உள்ளாட்சித் தேர்தலை போன்று நகர்ப்புற தேர்தலிலும், மகத்தான வெற்றியை அடைய வேண்டும் என்று ஸ்டாலின் கணக்கு போட்டு வருகிறார். இந்த நிலையில், உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் அது விமர்சனங்களுக்கு வழி வகுத்து விடும் என்பதால், ஸ்டாலின் மீண்டும் அதற்கு முட்டுக் கட்டை போட்டு வருவதாக, திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும், தொடர்ந்து துர்கா ஸ்டாலின் உள்ளிட்டவர்களிடம் இருந்து அழுத்தம் வருவதால் என்ன செய்வதென்று தெரியாமல் முதல்வர் திக்குமுக்காடிப் போயுள்ளாராம்.

இந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின் நிதானத்தை கடைபிடிக்க விரும்பினாலும், திமுகவின் கிச்சன் காபினெட் அரசியல் வேகமாகவே இருக்கிறது என்கின்றனர் சகலமும் அறிந்தவர்கள். அதனால் தான் அன்பில் மகேஷ் பேச வைக்கப்பட்டு இருக்கிறார்.

இனி கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம்… அமைச்சர் உதயநிதி என்ற பேச்சுகள் மெதுவாகவும், பின்னர் வேகம் எடுக்கும் என்றும் 2022ம் ஆண்டு ஜூன் திமுக பதவியேற்று ஓராண்டு கழித்து நிச்சயமாக உதயநிதி அமைச்சராக அமர்வார் என்று போட்டு தாக்கின்றனர் திமுகவை நன்கறிந்தவர்கள்….!!

இதுகுறித்து அரசியல் விமர்சகர்களிடம் கேட்டபோது, கலைஞருக்கு பின் ஸ்டாலின்தான் என்ற நிலையை உருவாக்க ஸ்டாலினுக்கு நீண்ட வருடங்கள் பிடித்தது. ஆனால், உதயநிதி மிக விரைவில் அந்த இடத்தை பிடித்து விடுவார். ஆனால், அது இப்போது உடனடியாக நடக்காது என்கின்றனர்.

தி.மு.க.வில் உள்ள சீனியர்கள் உதயநிதி அமைச்சராக வேண்டும் என்று வற்புறுத்தினாலும், ‘தங்களது மடியில்’ (துறைகள்) கை வைத்துவிடுவார்களோ? என்ற அச்சத்திலும் இருக்கிறார்களாம். உதயநிதிக்காக இனி அடுத்தடுத்த குரல்கள் ஒலிக்க ஆரம்பிக்கும் என்பதில் இனி சந்தேகமில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்…!

Related posts:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *