Saturday, April 13

சென்னா ரெட்டி, பன்வாரிலால் வரிசையில் ஆளுநர் ரவி? இறையன்பு விளக்கமும், திமுக அமைதியும்! கொந்தளிக்கும் கூட்டணி கட்சிகள் ! தமிழக முன்னாள் ஆளுநர் சென்னா ரெட்டி முதல் பன்வாரிலால் புரோகித் வரிசையில் ஆர்.என். ரவி தொடர்பான செய்திகளும் அரசியலில் பரபரப்பாக அடிபட ஆரம்பிச்சாச்சு. இதுவரை இல்லாத வகையில் முதல்முறையாக, அதிகாரிகள் நேரடியாக ஆளுநருக்கு, திட்டங்கள் தொடர்பான விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டதாக வெளியான தகவல் தான் இதற்கு காரணம். சில நாட்களுக்கு முன்பு அனைத்து துறை செயலாளர்களுக்கும், தலைமைச் செயலாளர் இறையன்பு எழுதிய கடிதத்தில திட்டங்களின் அமலாக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்த விபரங்களை பவர்பாயிண்ட் மூலம் தயார் செய்து வைக்க வேணும்னு கேட்டிருந்தார். அலுவல் ரீதியாக அனுப்பிய கடிதம் விவாதப்பொருளாக மாறிடிச்சி – வெளியான கடிதம் மத்திய மாநில அரசுகளின் திட்ட விவரங்களை ஆளுநருக்கு சமர்ப்பிக்க அரசுத் துறை செயலாளர்கள் தயாராக இருக்கணும் இதை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு பின்பு தெரிவிக்கப்படும்ணு இறையன்பு சொல்லியிருந்தாரு. இந்த கடித விபரம் இப்போ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்குது. கூட்டணி கட்சியினர் தான் எதிர்ப்பு தெரிவிச்சிருக்காங்க. காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்த்து பேசியிருக்கிறாரு. ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுகிறார், பாஜகவை தமிழகத்தில் காலூன்ற வைக்க ஆளுநர் முயற்சி செய்கிறார் என்றெல்லாம் அடுக்கடுக்காக அழகிரி குற்றம்சாட்டியிருக்கிறாரு. தமிழ்நாடு மாநில சிறுபான்மை நலவாரியத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் என்ன சொன்னார்னா, ஆளுநர் வரம்பை மீறினால் முதல்வர் பயப்படமாட்டாருங்கிறாரு.இதுக்கெல்லாம் சேர்த்து தலைமைச் செயலாளர் இறையன்பு விளக்க அறிக்கை ஒண்ணை வெளியிட்டு இருக்கிறார். இறையன்பு வெளியிட்ட அறிக்கையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆளுநருக்கு அரசின் திட்டங்கள் குறித்து தெரிவிக்கும் விதமாக டேட்டாக்கள் தயாரிக்கப்படுகின்றன. அரசு நிர்வாகத்தில் இது வழக்கமான ஒன்றுதான். நிர்வாக ரீதியான கடிதத்தை அரசியல் பொருள் கொண்ட கடிதமாக்குவது சரியானது கிடையாது என்று இறையன்பு விளக்கம் தெரிவிச்சிருக்காரு. அதேநேரம் , எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக கடுமையாக எதிர்த்த திமுக இந்த முறை இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கலை. ஆளுநருடன் சுமுகமான உறவைக் கொண்டு செல்வதற்கு திமுக விரும்புகிறது என்ற பேச்சுக்கள் இதன்மூலம் வெளிவர ஆரம்பிச்சிருக்குது. . திமுக இது வரை வாயே திறக்கலை. ஆளுநருக்கு பவர்பாயிண்ட் மூலமாக தகவல்களை காண்பிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு கூட்டணி கட்சிகள் தான் கடுமையாக எதிர்ப்பு தெரிவிச்சிருக்குது . திமுக தரப்பில் இருந்து அது பற்றி யாரும் எதுவும் தெரிவிக்கலை என்பது கவனிக்கத்தக்க அம்சமாக இருக்குது. இதுகுறித்து தலைமைச் செயலக வட்டாரங்களில் விசாரித்தபோது, ஆளுநருக்கு பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் தயார் செய்ய சொன்னது பிரச்சனையை உருவாக்கி இருக்கிறது. ஏன்னா இதுவரை அப்படி ஒரு நடைமுறை செயலாளர்கள் மட்டத்தில் இருந்தது கிடையாதுன்னு சொல்றாங்க. பன்வாரிலால் புரோகித் மாவட்டங்கள் தோறும் சென்று ஆய்வுக் கூட்டங்களை நடத்தினாரு. இதை எதிர்த்து திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி இருந்தன. ஆனால் இப்போது ஆளுநர் மாளிகைக்கு அதிகாரிகள் சென்று விவரங்களை சமர்ப்பிக்க தயாராகிட்டு வர்றாங்க. ஆனா பன்வாரிலால் புரோகித் செய்ததை எதிர்த்த திமுக இப்போது அவர்கள் அரசு அமைந்த போது அதை விடவும் ஆளுநருடன் மிகுந்த நட்புடன் நடந்து கொள்ள முயல்கிறதுங்கிறாங்க அரசியல் பார்வையாளர்கள். ஆளுநர் பொதுவாக முதல்வரிடம் இருந்து நிர்வாகம் தொடர்பாக சந்தேகங்களை கேட்கலாம். ஆனால் , நேரடியாக துறை செயலாளர்களிடம் கேட்பது அல்லது பவர்பாயிண்ட் மூலமாக தரவுகளை அரசுத்துறை செயலாளர்கள் தயார் செய்வது நடைமுறையில் இல்லாதது. 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஆளுநராக சென்னாரெட்டி பதவி வகித்தார். அப்போது மத்தியில் காங்கிரஸ் அரசாங்கம் நடைபெற்றது. அப்போது அதிகாரிகளிடம் சென்னாரெட்டி இதுபோல தரவுகள் கேட்டதாக சர்ச்சைகள் எழுந்துச்சுன்னு குறிப்பிடுகிறார்கள் சில மூத்த அரசியல் பார்வையாளர்கள். சென்னா ரெட்டி காலத்தில் நடந்தது என்ன 1993 ஆகஸ்ட் மாதம் சென்னை எழும்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. பெருத்த சேதத்துடன் உயிர் பலியும் ஏற்பட்டது. ஆளுநராக இருந்த சென்னாரெட்டி பதறியடித்து ஓடிவந்து நேரடியாக வந்து கள ஆய்வு செய்தார். இப்படி ஒரு இடர் காலத்திலும் கூட, ஆளுநர் அங்கு சென்றதற்கு, ஜெயலலிதா கடுமையான ஆட்சேபனை எழுப்பினாரு இதன்பிறகு 1995ல் மதுரை காமராஜ் பல்கலை பட்டமளிப்பு விழாவிற்குச் சென்ற சென்னாரெட்டி மாவட்ட அதிகாரிகளை விருந்தினர் மாளிகைக்குக் கூப்பிட்டுச் சில விவரங்களைக் கேட்டாரு. ஆனால் அதையும் எளிதில் விடவில்லை ஜெயலலிதா. ஆளுநரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து ஆளுநருக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதினாரு. மாநில அரசின் அதிகாரங்களில் ஆளுநர் தலையிடுகிறாருன்னு சொல்லி சென்னாரெட்டி வாகன அணிவகுப்பைத் திண்டிவனம் அருகே வழிமறித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி ஷாக் கொடுத்தனர். மேலும், சுதந்திர தினம் மற்றும் குடியரசு நாளன்று ஆளுநர் நடத்தும் மாலை நேரத் தேநீர் விருந்துகளை ஜெயலலிதா புறக்கணிச்சாரு.. அதுமட்டுமல்லாம, அரசு தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆளுநரின் தேநீர் விருந்துக்கு போகக் கூடாதுன்னு கடும் உத்தரவும் பிறப்பிச்சாரு. சென்னா ரெட்டி ஆளுநராக இருந்தபோதுதான், தன்னிடம் அவர் தகாத முறையில் நடந்துகொண்டாருன்னு குற்றம் சாட்டினார். அப்போதைய தூத்துக்குடி எம்.எல்.ஏ. ரமேஷ் தலைமையில் அதிமுகவினர் ராஜ்பவனுக்கு ஊர்வலமாகச் சென்று ஆளுநருக்கு நெருக்கடியை அதிகரித்தனர். இதன்பிறகு பன்வாரிலால் புரோகித் ஆளுநராக இருந்தபோதுதான், அதிகார தலையீடு பற்றி பேச்சுக்கள் வந்தன. சென்னா ரெட்டிக்கு பிறகு எந்த ஆளுநரும், தமிழக அரசோடு உரசியது கிடையாது.இப்ப நடக்கிற விஷயங்களை திமுக சாதாரணமா எடுத்துக்கிட்டுச்சு.ஆனா கூட்டணி கட்சிகள் தான் கூப்பாடு போடுது.முதல்வர் ஸ்டாலினைப் பொறுத்த வரைக்கும் மடியில கனமில்ல நாம் ஏன் கூச்சல் போடணும்னு அமைதியா இருக்காரு.மக்களுக்கு நல்லது செய்யணும்னா எல்லாத்தையும் பொறுத்து கிட்டு தான் போகணும்.

 

 

 

Related posts:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *