Saturday, April 13

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையக் குழு உறுப்பினராக சுனில்குமார் ஐபிஎஸ்

கூடுதல் இயக்குனர் அந்தஸ்தில் இருந்த சுனில்குமார் ஐபிஎஸ் அண்மையில் ஓய்வுப் பெற்றார். தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையக் குழு உறுப்பினராக அவரை தமிழக அரசு நியமித்துள்ளது. 2006 ஆம் ஆண்டு திமுக சார்பில் சாலை மறியல் நடந்தது அப்போ, காவல்துறையினரால் திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிந்தாரிப்பேட்டை திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அப்போ அவங்களை பார்ப்பதற்காக அப்போதைய திமுக இளைஞரணிச் செயலாளர் மு.க.ஸ்டாலின் திருமண மண்டபத்திற்குச் சென்றார். அந்தநேரத்தில் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரியான இதே சுனில்குமார் ஐபிஎஸ், மு.க.ஸ்டாலினை அனுமதிக்கலை. அப்போது நியாயம் கேட்டு, மண்டபத்திற்குள் நுழைய முயன்ற மு.க.ஸ்டாலினை நெஞ்சில் கை வைச்சு சுனில்குமார் ஐபிஎஸ். தள்ளிவிட்டதா சொல்றாங்க . அந்த சம்பவத்தோட படம் மறுநாள் ஒரு நாளிதழ்ல வெளி வந்தது. அப்போ சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்துக்கிட்டு இருந்ததால், இந்த விவகாரம் சட்டமன்றத்திலும் அப்போ எதிரொலிச்சது. நாளிதழில் வெளியான புகைப்படத்தை பேரவையில் காட்டி, போலீஸ் அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த மு.க.ஸ்டாலினை கைது செய்யணும்னு அப்போதைய அதிமுக எம்.எல்.ஏ., ஒருவர் ( சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்) ஆவேசமாக பேசினாரு. அதனை கேட்ட அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள், ஐபிஎஸ் அதிகாரி சுனில்குமாரிடம் இதுதொடர்பாக புகார் பெற்று, வழக்குப்பதிவு செய்து மு.க.ஸ்டாலினை கைது செய்யும்படி காவல்துறை உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டாரு. அதன்பேரில், சுனில்குமார் ஐபிஎஸ்.ஸை அணுகி மு.க.ஸ்டாலினுக்கு எதிராக புகார் கொடுக்கும்படி கேட்டனர். ஆனால், அப்படியொரு நிகழ்வே நடக்கவில்லை என்று கூறி மு.க.ஸ்டாலினுக்கு எதிராக புகார் தர மறுத்துவிட்டாரு.என்னைத் தள்ளில்லாம் விடலை.என்னோட தொப்பி கீழ் விழுந்திடுச்சு வேற ஒண்ணும் நடக்கலைன்னு சொல்லி புகார் தர மறுத்திட்டாராம்.இதுக்கு. முக்கியமான காரணம் என்னன்னா சுனில் குமார் ஐபிஎஸோட அப்பா டிஜிபியா இருந்தவரு.அவருடைய ஆலோசனைல தான் புகார் கொடுக்கலை யாம். அதனாலேயே, அதிமுக ஆட்சி முடியும் வரை சுனில்குமார் ஐபிஎஸ் செல்வாக்கு இல்லாத துறையிலேயே காலத்தை கழிக்க நேர்ந்தது. காவல்துறை பணியில் அரசியலை கலக்காமல் கண்ணியம் காத்த சுனில்குமார் ஐபிஎஸ்.ஸுக்கு இன்றைக்கு ஓய்வுக்குப் பிறகும் முதல்வர் மு.க.ஸ்டாலின், மரியாதைக்குரிய பதவியை வழங்கி அழகுப் பார்த்திருக்கிறார். ஆனால், அன்றைக்கு மு.க.ஸ்டாலினை கைது செய்து சிறையில் அடைக்கணும்னு சட்டசபையில் ஆவேசமாக முழங்கிய அப்போதைய அதிமுக எம்.எல்.ஏ., இன்றைக்கு திமுக ஆட்சியில் அமைச்சராக இருப்பதும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனதுக்கு நெருக்கமானவராக மாறியிருப்பதும்தான் காலத்தின் விசித்திரம். அரசியலில் இதெல்லாம் சாதாரணம்ப்பா… இந்த கதையெல்லாம் இருக்கட்டும் அவர் யாருன்னு தெரிஞ்சிப்போமா ?

உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியைச் சேர்ந்தவர். 1961ம் ஆண்டு பிறந்தார். எம்ஏ, எல்எல்பி பட்டங்களை முடித்துள்ளார். தமிழ், ஆங்கிலம், இந்தி தெரிந்தவர். இவர், 1988ம் ஆண்டு, ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று, தமிழக பணிக்காக நியமிக்கப்பட்டார். கூடுதல் எஸ்பியாக வேலூரில் முதன் முதலாக பணியில் நியமிக்கப்பட்டார். பின்னர் காவல் துறையின் பல்வேறு பதவிகளில் பணியாற்றி உள்ளார். டிஜிபியாக பதவி உயர்வு பெற்று, மனித உரிமை ஆணையத்திலும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவிலும் பணியாற்றினார். இவர், சென்னை போக்குவரத்துப் பிரிவு கூடுதல் கமிஷனராக இருந்தபோது உடலுறுப்பு தானத்திற்காக சென்னையில் பசுமை வழித்தடம் ஏற்பாடு செய்யப்பட்டது .உறுப்புதானம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட காரணமாக இருந்தவர் டிஜிபி சுனில்குமார்.

ரயில் விபத்து வழக்கு ஒன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். முற்றிலும் அறிவியல்பூர்வமான விசாரணையின் அடிப்படையில் ரயில் எஞ்சின் ஓட்டுனரின் மேல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஐந்து அப்பாவிகளின் உயிரைப் பறித்த ஒரு விமான நிறுவனத்தின் உரிமையாளரின் மகன் ஏற்படுத்திய விபத்தில், அந்த நபரின் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டது.வாச்சாத்தியில் பொய்யாகக் குற்றம்சாட்டப்பட்ட காவல் அதிகாரிக்கு உறுதுணையாக நின்றார். சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் பணியாற்றியபோது, 25 சதவீதத்துக்கும் அதிகமான தமிழ்நாடு காவல்படையினரைத் தேர்வு செய்ததில் பங்காற்றி இருக்கிறார். தூத்துக்குடியில் பணியாற்றியபோது சாதி கலவரத்தை கட்டுப்படுத்தி, அமைதியை ஏற்படுத்தினார் என்று காவல்துறை உயர் அதிகாரிகள் பெருமையாக கூறி உள்ளனர். ஓய்வுக்கு பிறகும் உழைப்புக்கும் நேர்மையாக பணியாற்றியதற்கும் கிடைத்த மரியாதையைப் பாத்தீங்களா.

Related posts:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *