Sunday, April 14

போதை பொருள் விவகாரத்தில் பிரபலமான அரசியல்வாதி ஒருவர் சிக்கி இருக்கிறாரு !

 

தமிழகத்தை சேர்ந்த மிக பிரபல அரசியல்வாதி போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் வசமா சிக்கி இருக்கிறார்னு தகவல் வந்துருக்குது !!! இப்போது தெரியுதா ஒரு காவல்துறை அதிகாரிய ஆளுநரா போட்டதன் காரணம் என்னன்னு.

கடந்த வாரம் குஜராத் மாநிலம் அகமதாபாத் துறைமுகத்தில் 21000 கோடி மதிப்பிலான போதை பொருள் பிடிபட்டுச்சி ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட போதை பொருட்களை இந்தியாவில் விநியோகம் செய்ய இருந்த நிலையில் பதுங்கியிருந்து கைது செய்தது போதை பொருள் தடுப்பு பிரிவு. இந்நிலையில் அதில் சென்னையில் தங்கி இருந்த தம்பதியினர் பிடிபட்டிருக்காங்க. அவர்கள் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் மிக பிரபலமான அரசியல்வாதி ஒருவர் சிக்கி இருக்கிறாருங்கிற தகவல் வெளியாகியிருக்குது.

ஆப்கானிஸ்தானிலிருந்து கப்பல் மூலமா இரண்டு கன்டெய்னர்களில் ஹெராயின் போதைப்பொருள் கடத்திவரப்படுவதாக மத்திய வருவாய் நுண்ணறிவு இயக்குநரக (டி.ஆர்.ஐ) அதிகாரிகளுக்கு அண்மையில் ரகசியத் தகவல் ஒண்ணு கிடைச்சது. அதன்பேரில் கடந்த வாரம், இரானிலிருந்து குஜராத் மாநிலத்தின் முந்த்ரா துறைமுகம் வந்தடைந்த குறிப்பிட்ட கப்பலை அதிகாரிகள் சோதனை செஞ்சாங்க.. அதில், சுமார் ரூ.21,000 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் இருப்பது தெரியவந்துச்சு.
, அதிகாரிகள் அந்த போதைப்பொருள்களைக் கைப்பற்றி, அந்தக் கப்பலில் இருந்த இரண்டு ஆப்கனியர்களைக் கைதுசெஞ்சிருக்காங்க.கைப்பற்றப்பட்ட ஹெராயின் பெட்டிகள் மேல ‘ஆஷி டிரேடிங் கம்பெனி’, சத்தியநாராயணபுரம், விஜயவாடாங்கிற முகவரி எழுதப்பட்டிருந்துச்சாம்.அதைத் தொடர்ந்து, அந்த முகவரியில் ஆய்வு மேற்கொள்ள, புலனாய்வு அதிகாரிகள் விஜயவாடா போயிருக்காங்க. உள்ளூர் போலீஸாரின் உதவியோட அதிகாரிகள் விசாரித்ததில், அந்தப் பெட்டிகளில் குறிப்பிடப்பட்டிருந்த வீடு பூட்டிக்கிடந்திருக்குது.

பூட்டிக்கிடந்த அந்த வீட்டில் முகப்பவுடர் வியாபாரம் செய்துவரும் காக்கிநாடாவைச் சேர்ந்த கணவன் – மனைவி, சுதாகர் – வைஷாலிங்கிறது போலீஸாருக்குத் தெரியவந்தது. அதேபோல், ஹெராயின் கடத்தலில் தொடர்புடைய அந்தத் தம்பதி இப்போ சென்னையில் வசித்துவருவதாகவும் அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைச்சது. அதைத் தொடர்ந்து, சென்னை விரைந்து வந்த புலனாய்வு அதிகாரிகள் சென்னை போலீஸாரின் உதவியோட தீவிர விசாரணை பண்ணியிருக்காங்க.

அந்த விசாரணையில அந்தத் தம்பதி குறித்த பல தகவல்கள் கெடைச்சிருக்குது. வெளியுலகுக்கு முகத்தில் பூசும் பவுடர் இறக்குமதி செய்து விற்பனை செய்துவருவதைப்போல் காட்டிக்கொண்டு, சுதாகர், தன் மனைவி வைஷாலியின் பெயரில் ஏற்றுமதி, இறக்குமதி உரிமம் பெற்று ஜி.எஸ்.டி பதிவு செய்து கடத்தல் தொழிலில் ஈடுபட்டுவந்தது தெரியவந்தது. காக்கிநாடா பகுதியைச் சேர்ந்த இந்தத் தம்பதி சென்னையில், கொளப்பாக்கம் பகுதியில் கடந்த எட்டு வருஷமா வாடகை வீட்டில் தங்கி, ஆந்திரா முகவரியை வைச்சு கடத்தல் தொழில் செய்துவந்ததும் அம்பலமானது.

இதைத் தொடர்ந்து சென்னை விரைந்த டி.ஆர்.ஐ அதிகாரிகள் பதுங்கியிருந்த சுதாகர் மற்றும் அவரின் மனைவி வைஷாலி இருவரையும் அதிரடியாகக் கைதுசெய்தனர் இவர்களை குஜராத் போதை பொருள் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செஞ்சு வர்றாங்க. இந்தநிலையில் தம்பதி கொடுத்த பதிலால் அதிர்ச்சியில் உறைஞ்சு போய்ட்டாங்களாம்
விசாரணை அதிகாரிகள்.

நான்கு முறை இது போல் வியாபாரம் செய்துள்ளதாகவும், இந்தியாவில் முக்கிய மாநிலங்களில் சட்டமன்றம் நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு ஓராண்டிற்கு முன்னர் போதை பொருள்கள் பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியா வரும் என்றும் அதனை பங்கிட்டு விற்பனை செய்ய நாடு முழுவதும் பல்வேறு ரவுடிகள், அரசியல்வாதிகள், சினிமா துறையை சேர்ந்தவர்கள், காவல்துறையை சேர்ந்தவர்கள் என பலரை பயபுப்படுத்தியதாகவும் விசாரணையில சொல்லியிருக்காங்க.

இதில் தமிழகத்தில் மட்டும் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் ஈடுபடுறதாகவும், ஒரு அரசியல் கட்சி தலைவர் முழு நேர வேலையாக இதற்கு என்றே ஒரு குழுவை வைத்து விநியோகம் செய்ய உதவியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிவிச்சிருக்காங்களாம். இந்த தகவல் உடனடியாக தமிழக ஆளுநருக்கும் முதல்வருக்கும் தெரிவிக்கப்பட்டதுனாலத்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் ரவுடிகள் கைது செஞ்சதா சொல்லுது தமிழக காவல்துறை.

பிரபல ரவுடிகள் கைது என்ற போர்வையில் இந்தியாவை அதிரவைத்த போதை பொருள் கடத்தல் கும்பலை வேட்டையாடி வருகிறது தமிழக காவல்துறை, இந்த வழக்கு NIA அதாவது தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்ற வாய்ப்பு இருப்பதால் முழுமையான தகவலீகளைச் சேகரித்து, இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யவும், ஆதாரங்களை வெளியிடவும் தயாராகி கொண்டு இருக்கிறதாம் மத்திய புலனாய்வு அமைப்புகள்.

விரைவில் மிக மிக பிரபலமான அரசியல்வாதியின் வலது கரமாக செயல்பட்டு கொண்டு இருக்கும் பலர் கைது செய்யப்படலாம்னு சொல்றாங்க.அதில இருந்தே அந்த அரசியல்வாதி யார் என்பது வெளி உலகிற்கு தெரியவரும் என சொல்லப்படுது, இது போல் போதை பொருள்கள் மூலம் கிடைக்கும் பணத்தை வைச்சு நாட்டில கலவரங்கள், போராட்டங்கள் உள்ளிட்ட பல காரியங்களை செய்ய தேவையான பணம் கிடைப்பது தெரியவந்துள்ளது.

மத்தியில் மோடி அரசாங்கம் ஆட்சி பொறுப்பேற்றது முதல் வெளிநாடுகளில் இருந்து வரும் நிதிகளை ஆய்வு செய்து கட்டுப்படுத்திய நிலையில் தங்கம், போதை பொருள்களை சட்டவிரோதமாக கடத்தி அதன் மூலம் பணத்தை சம்பாரிக்கும் செயலை கடத்தல் கும்பலுடன் அரசியல் வாதிகள் கை கோர்த்து இருப்பது பெரும் அச்சத்தை மக்களிடம் உண்டாக்கியுள்ளது.

ஆனால் என்றும் பாரதத்தை காக்கும் மத்திய அரசை குறை சொல்லியே பழக்கப்பட்ட தமிழக அரசியல் கட்சிகள் நாட்டிற்கு எதிராகத்தான் கூச்சல் போடுவார்கள்.உண்மைய எங்க உணரப் போறாங்க.

Related posts:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *