Tuesday, April 16

வருங்கால முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்கன்னு இப்பவே வாழ்த்தி வைப்போம்.

சட்டப்பேரவையில் தன்னைப் புகழ்ந்து பேசும் எம்எல்ஏக்களையும் அமைச்சர்களையும் உடனுக்குடன் கண்டிக்கிறதோடு ஆக வேண்டிய விஷயத்தை மட்டுமே பேசணும்னு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிப்போட சொல்லிக்கிட்டே தான் வர்றாரு.ஆனா அத காதிலேயே வாங்கிக்காம உதயநிதிக்கு ஆதரவான முழக்கங்கள் மட்டும் தொடர் கதையாகி வருது.

அடுத்த 50 வருடங்களுக்கு தமிழகத்தை காக்க உள்ள திராவிடத் தலைவர் உதயநிதி என்று அமைச்சர் மா.சுப்ரமணியின் அண்மையில் சட்டப்பேரவையில் பேசியிருந்தாரு. இதே போல் அமைச்சர் எ.வ.வேலுவும் கூட சட்டப்பேரவையில் தனது உரையின் போது உதயநிதியை புகழ்ந்து பேசியிருந்தார். இவர்கள் மட்டும் அல்ல அனைத்து அமைச்சர்களும் சட்டப்பேரவையில் பேசும் போது தவறியும் கூட உதயநிதி பற்றி பேசாமல் இருப்பது இல்லை. அதிலும் மானியக் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து பேசும் அமைச்சர்கள் முதலில் சபாநாயகர் குறித்து சில வார்த்தைகளை சொல்கின்றனர். பிறகு முதலமைச்சரை புகழ்ந்துவிட்டு, உதயநிதியை பாராட்டிவிட்டு பிறகு துரைமுருகன் பக்கம் செல்கின்றனர்.

இந்த புகழுரைகளில் உதயநிதி குறித்து பேசும் பேச்சுகள் மட்டும் தனியாகத் தெரியுது. அதாவது உதயநிதியப் பத்தி என்ன பேசணும் எப்படி பேச பேசணும் னு ஒரு ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணி கொடுக்கப்படுவதாக சொல்கிறார்கள். கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாகவே உதயநிதி தனக்கு என்று தனியாக பிஆர்ஓ டீம் ஒன்றை ஏற்பாடு செய்துவிட்டார். அந்த டீம் தற்போதும் இரவு பகலாக பணியாற்றி வருவதாக சொல்கிறார்கள்.அவர் எங்க போனாலும் ஒரு கேமராமேன் கூடவே போறாரு.அங்க நடக்கிறது எல்லாத்தையும் எடுக்கிறாரு.அந்த வீடியோ ஃபுட்டேஜ்களை அப்ப்ப எடிட் பண்ணி உடனுக்குடன் ஊடகங்களுக்கு அனுப்பப்படுது. அதே போல் சட்டப்பேரவையில் மறுநாள் யார் யார் பேசப் போறாங்க ? எந்த அமைச்சர் எந்த துறையப் பத்திப் பேசப் போறாரு? அந்த அமைச்சருடன் உதயநிதியின் கடந்த கால தொடர்பு என பலவற்றை ஆராய்ந்து சிங்க் ஆகும் வகையில் பேச பாய்ன்ட்டுகள் ரெடி பண்றதா சொல்றாங்க.

அந்த பாய்ன்ட்டுகள் அமைச்சர்கள் எம்எல்ஏக்களுக்கு பாஸ் செய்யப்பட அவர்கள் தாங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள பேச்சில் அதையெல்லாம் இணைச்சு வைச்சுக்கிறதா சொல்றாங்க. முதலமைச்சரும் கூட தன்னை பற்றி புகழ வேண்டாம் என்று மட்டுமே கூறியுள்ளார். இதனால் அமைச்சர்களாக இருந்தாலும் சரி எம்எல்ஏக்களாக இருந்தாலும் சரி உதயநிதியை பற்றி வஞ்சம் இல்லாமல் புகழ்வதாக சொல்கிறார்கள். இதே போல் உதயநிதியை புகழ்ந்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பேசுவது ஏதாவது ஹிட் ஆகிவிட்டால் அந்த வீடியோ கிளிப் உடனடியாக அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுவதாகவும் கூறுகிறார்கள்.இந்த இடத்தில் ஒரு விஷயத்தை சொல்லணும்.அதாவது ஜால்ரா மூணு வகைப்படும்.சட்டமன்றம் பூராவும் ஜால்ரா சத்தமாவே கேக்குது.

இவை. எல்லாத்துக்கும் பின்னணியில கிச்சன் கேபினட்டின் கண்டிப்பான உத்தரவு இருப்பதாக சொல்கிறாங்க. அதனால் தான் மூத்த அமைச்சர்களாக இருந்தாலும் சரி ஜூனியர் எம்எல்ஏக்களாக இருந்தாலும் சரி உதயநிதி மட்டும் புகழ்றதுக்கு கூச்சப்படுவதே இல்லை என்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் உதயநிதியை அடுத்த ஸ்டேஜூக்கு தயார் படுத்துவது தான்ங்கிறாங்க.. விரைவில் கட்சியிலும் சரி ஆட்சியிலும் சரி உதயநிதிக்கு ஒரு மிகப்பெரிய எலிவேசன் இருக்கும்னு பேசிக்கிறாங்க. அதற்கான ஒத்திகை தான் இந்த சட்டப்பேரவை புகழுரைகள்னு சொல்றாங்க உடன்பிறப்புகள்.அசெம்பிளில கூட எத்தனையோ சீனியர் எம்எல்ஏக்கள் இருக்கும் போது முதல்வர் ஸ்டாலினுக்கு பின்னாடி உள்ள சீட்ட திட்டமிட்டே ஒதுக்கியிருக்காங்க.
அப்பத்தான் எல்லா சேனலோட கேமராவும் முதலமைச்சர ஃபோகஸ் பண்ணும்போது பின்னாடி உதயநிதி ஸ்டாலின் அழகா தெரிவாரு.இது வரைக்கும் கவனிக்காதவங்க நல்லா கவனிச்சு பாருங்க.! எல்லாமே கிச்சன் கேபினெட்டோட திட்டப்படியேத்தான் நடக்குது.அடுத்த முதலமைச்சர உருவாக்கிற வேலைய ஆரம்பிச்சிட்டாங்க.வருங்கால முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்கன்னு இப்பவே வாழ்த்தி வைப்போம்.

Related posts:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *