Sunday, April 14

அதிமுகவுக்கு புதிய நெருக்கடி?10 மாஜி அமைச்சர்களுக்கு ஒரே நேரத்தில் வருமான வரித்துறை திடீர் நோட்டீஸ்!

அதிமுகவுக்கு புதிய நெருக்கடியாக 10 முன்னாள் அமைச்சர்களுக்கு ஒரே நேரத்தில் வருமான வரித்துறை திடீரென நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறந்த எஸ்யூவி சொந்தமாக வைத்திருக்க உங்களுக்கோர் வாய்ப்பு.. இங்கே கிளிக் செய்யுங்கள்! கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சர்கள் மீதான ஊழல் முறைகேடுகள் தொடர்பான மிக நீண்ட பட்டியல்களை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் திமுக கொடுத்தது. ஆனால் அந்த ஊழல் முறைகேடுகள் மீது பன்வாரிலால் புரோஹித் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ரெய்டில் விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சியில் இருந்த போது தலைமைச் செயலாளராக இருந்த ராம்மோகன் ராவின் தலைமை செயலக அறையிலேயே வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். குட்கா வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கியது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் விஜயபாஸ்கரும் வருமான வரித்துறை ரெய்டுக்குள்ளானார். அப்போது விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்களை எடுத்துக் கொண்டு அவரது உதவியாளர்கள் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிய காட்சிகள் எல்லாம் அரங்கேறின. அங்கே நடந்த சோதனையில்தான் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான பணப்பட்டுவாடா பட்டியலும் கிடைத்தது. இதனடிப்படையிலேயே ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலையும் கூட தேர்தல் ஆணையம் அப்போது நிறுத்தியது. திமுக வாக்குறுதி ஆனால் விஜயபாஸ்கர் உட்பட எந்த ஒரு அமைச்சரும் வழக்கு விசாரணையில் சிக்கவில்லை. மத்திய பாஜக அரசு செய்ய சொன்னதை அப்படியே செய்ததால் அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சர்கள் மீது எந்த நடவடிக்கையுமே பாயவில்லை எனவும் கூறப்பட்டது. சட்டசபை தேர்தலின் போது திமுக, அமைச்சர்களின் ஊழல் விவகாரங்களை கையில் எடுத்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும் ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை பாயும்; தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என எச்சரித்தது.

சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ள முதல்வராக மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்து வருகிறார். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கரூர் விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தமிழக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து சோதனை நடத்தினர். ஆனால் இந்த வழக்கு, அரசியல் உள்நோக்கம் கொண்டது என அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. அத்துடன் 10 ஆண்டுகளுக்கு முந்தைய திமுக ஆட்சிக் கால ஊழல்கள் பட்டியல்கள் எங்களிடமும் இருக்கிறது; நாங்களும் பதிலடி தருவோம் என்றது அதிமுக. இந்த பின்னணியில் அதிமுக தலைவர்களான ஓ. பன்னீர்ச்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் அண்மையில் டெல்லி சென்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்தனர். அப்போது திமுக அரசு ஊழல் வழக்குகளை கையில் எடுத்திருப்பது குறித்து பேசப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் திமுக ஆட்சிக் கால ஊழல் பட்டியல் விவரங்களும் இந்த சந்திப்பில் டெல்லியிடம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் திமுகவுக்கு டெல்லி நெருக்கடி தரும் என பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர் அதிமுக தலைவர்கள். 10 மாஜிக்களுக்கு நோட்டீஸ் இந்நிலையில்தான் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினர் மற்றும் 10 முன்னாள் அமைச்சர்களுக்கு வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் கணக்குகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வருமான வரித்துறை தரப்பில் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.

ஆனாலும் ஒரே நேரத்தில் 10 மாஜி அமைச்சர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் கொடுத்திருப்பதுதான் அதிமுகவினருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி என்கின்றனர். திமுக மீது நடவடிக்கை எடுக்காமல் தங்கள் மீது டெல்லி இப்படி ஒருநடவடிக்கையை தொடங்கி இருப்பது ஏன்? என்கிற குழப்பத்திலும் அதிமுக தலைவர்கள் இருக்கின்றனர். இது குறித்து நாம் விசாரித்த போது, திமுக- பாஜக அரசியல்தான் இனி என தமிழக பாஜக தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். இது ஏதோ மேம்போக்கான பேச்சு அல்ல. அதிமுகவை அப்படியே உள்ளே இழுத்துப் போட்டு அதிமுகவின் இடத்தில் உட்கார்ந்தாக வேன்டிய நெருக்கடியில் பாஜக உள்ளது. அதிமுகவை வளைப்பதற்கு இப்படியான வருமான வரித்துறை நடவடிக்கைகள் போன்றவைதான் பாஜகவின் கையில் இருக்கும் ஆயுதம். அதனால்தான் இந்த ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறது டெல்லி என்கின்றனர். அதாவது தங்கள் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும் எனில் அதிமுகவின் சீனியர்கள் ஒவ்வொருவராக பாஜகவில் இணைந்தாக வேண்டிய கட்டாயத்தை உருவாக்குகிறதாம் டெல்லி. அப்படியாவது அதிமுகவின் வாக்கு வங்கி தங்களுக்கு கிடைத்துவிடாதா? என்கிற ஏக்கம்தான் பாஜகவுக்கு.

இந்த பார்முலாவைத்தான் இந்தியா முழுவதும் பாஜக பின்பற்றி வருகிறது. பிற மாநிலங்களில் இது ஒர்க் அவுட் ஆகி இருக்கலாம். ஆனால் கட்சித் தலைவர்களை இழுத்துப் போட்டுவிட்டாலே வாக்கு வங்கி அப்படியே வந்துவிடும் என தமிழகத்தில் பாஜக கணக்குப் போடுவதுதான் எடுபடாது என்கிறது கள நிலவரம். பாஜக கனவு பலிக்குமா? தமிழகத்தைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு நலன்களை முன்னிறுத்தி பாஜக செயல்பட்டாக வேண்டும். ஆனால் அப்படி செயல்படாமல் போனதால் தமிழக வாக்காளர்களிடம் இருந்து வெகுதொலைவுக்கு போய்விட்டது பாஜக. அந்த கட்சியின் மீது தமிழகம் நம்பிக்கை வைக்க வேண்டும் எனில் செய்ய வேண்டியது ஏராளமாக இருக்கிறது. தமிழக வாக்காளர்கள் மனதில் கனமான தாக்கத்தை ஏற்படுத்தாமல் இப்படியான ஜிம்மிக்ஸ் சித்து விளையாட்டு பூச்சாண்டிகள் எல்லாம் தமிழக வாக்காளர்களிடம் இருந்து பாஜகவை மேலும் மேலும் அன்னியப்படுத்தத்தான் செய்யும் என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கருத்து. இதனை புரிந்து கொண்டு செயல்படும்போதுதான் திமுக- பாஜக என்கிற இருதுருவ அரசியலும் சாத்தியமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *