Thursday, April 18

கோடநாடு கொலை வழக்கை எனக்கு எதிராக ஸ்டாலின் பயன்படுத்த நினைத்தால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப்போவதில்லை பதிலடி கடுமையாக இருக்கும்னு எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக எச்சரிக்கிறதுக்குத்தான் ஆளுநருடனான சந்திப்புங்கிறாங்க.

கொடநாடு கொலை வழக்கை ஸ்டாலின் கையில் எடுத்த நிலையில் திமுக அரசின் கலெக்சன் விவகாரங்களை கிளறியுள்ள எடப்பாடி பழனிசாமி திமுகஅரசின் அதிகார மையங்கள் தொடர்பாகவும் ஆளுநரிடம் புகார் கொடுத்திருக்காரு.

கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமி பெயரை சேர்ப்பதற்கான பணிகள் வேகமெடுத்த நிலையில் சட்டப்பேரவையில் அமளி செய்த எடப்பாடியார், தொடர்ந்து வெளியே தர்ணாவில் ஈடுபட்டதோட சுடச்சுட பிரஸ் மீட் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு அடுத்த நாள் ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து பல்வேறு புகார்கள் அடங்கிய மனுவையும் எடப்பாடி பழனிசாமி கொடுத்துள்ளார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, திமுக அரசிற்கு புதிய பெயர் கொடுத்தார்.

அதாவது தற்போதைய திமுக அரசை கமிசன், கலெக்சன் வென்ஜன்ஸ் அரசு அதாவது பழிவாங்கும் அரசுன்னு சொல்லி குற்றச்சாட்டுகளை அடுக்கினார். திமுக ஆட்சிக்கு வந்த இந்த நூறு நாட்களில் தமிழகம் முழுவதும் கமிசன் மற்றும் கலெக்சன் நடைபெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கொடநாடு கொலை விவகாரத்தில் நேற்று வரை தன் தரப்பு விளக்கத்தை மட்டுமே எடப்பாடி பழனிசாமி கொடுத்து வந்தார். ஆனால் திடீரென அவர் பதில் தாக்குதலை திமுகவிற்கு எதிராக தொடுத்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியை கமிசன், கலெக்சன், கரப்சன் என ஸ்டாலின் விமர்சிப்பார்.

தற்போது அதே பாணியில் திமுக ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி பட்டப் பெயர் வைத்திருப்பதோட கலெக்சன் விஷயத்தையும் லீக் பண்ணியிருக்காரு.. இதன் பின்னணியை பத்தி விசாரிச்சப்போ பேசிய அதிமுக நிர்வாகிகள் சிலர், திமுக ஆட்சிக்கு வந்ததுமே முக்கியமான துறையை சேர்ந்த இனிசியல் அமைச்சர் ஒருவர் அனைத்து ஒப்பந்ததாரர்களையும் அழைத்து மீட்டிங் போட்டதை சொல்றாரு. அந்த மீட்டிங்கில் வைத்து ஏற்கனவே ஒப்பந்ததாரர்கள் செய்து வரும் பணிகளுக்கு கூடுதல் செலவை காட்டி கூடுதல் பணம் பெற்றுக் கொள்ளுமாறு அமைச்சர் அறிவுறுத்தியதாகவும் அவர்கள் சொல்றாங்களாம்.

இதற்காக கமிசனாக பத்து சதவீதம் தர வேண்டும்னும் தான் மாதம் கிச்சன் கேபினட்டிற்கு 100 கோடி ரூபாய் வரை கொடுக்க வேண்டியுள்ளதுன்னு ஒப்பந்ததாரர்களிடம் அந்த அமைச்சர் பேசியதையும் அதிமுகவினர் சொல்றாங்க.. இதன் அடிப்படையில் பழைய ஒப்பந்தங்களை பெற்ற ஒப்பந்ததாரர்களிடம் முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் ஐந்து சதவீத தொகை வசூலித்து முடிக்கப்பட்டுள்ளதாகவும், இதே போல் வேறு சில முக்கிய துறைகளிலும் ஒப்பந்ததாரர்களிடம் படு ஜரூரராக கலெக்சன் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் இதனைத் தான் எடப்பாடி பழனிசாமி ஊடகங்களில் லீக் செய்துள்ளதாக அதிமுகவினர் சொல்றாங்க.

இப்போ எந்த அமைச்சரின் பெயரையோ அல்லது கமிசன் தொகையையோ குறிப்பிடாமல் எடப்பாடி பேசியிருக்காரு. ஆனால் அமைச்சர் யார் மூலம் பணத்தை பெற்றார், யாரிடம் பெற்றார், எவ்வளவு பெற்றார், எப்படி பெற்றார் என்கிற விவரங்களை எல்லாம் எடப்பாடியார் தோண்டி எடுத்து வைச்சிருக்கிறதாகவும், அடுத்தடுத்த செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த தகவல்களை அவர் கசியவிடுவார்னு சொல்லி அதிர வைக்கின்றனர் எடப்பாடிக்கு நெருக்கமான அதிமுகவினர்.

இதனிடையே இது தவிர தமிழகத்தில் கலெக்சன் செய்யப்பட்ட பணம் போலீஸ் வாகனங்கள் மூலம் அண்டை மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தகவலையும் பிரபல வார இதழ் ஒன்றுக்கு எடப்பாடி தரப்பு தான் லீக் செய்ததாக சொல்றாங்க.. அத்தோடு ஆளுநரை சந்தித்து கொடுத்த மனுவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவிர மற்ற சிலரும் அதிகார மையமாக உருவெடுத்து தமிழக அரசை இயக்குவதாகவும் ஒரு குண்டை தூக்கிப் போட்டுள்ளார் எடப்பாடியார். யார் யார் என்று பெயரை கூறவில்லை என்றாலும் அவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனைத்தான் சொன்னதாகச் சொல்றாங்க. இப்படி தனக்கு எதிராக கொலை வழக்கை ஸ்டாலின் பயன்படுத்த நினைத்தால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப்போவதில்லை பதிலடி கடுமையாக இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக உணர்த்தவே ஆளுநருடனான சந்திப்பு என்கிறார்கள்.ஆனாலும் கோடநாடு கொலை வழக்கு எடப்பாடிக்கு எதிராகவேத் தான் இருக்குதாம்.
அதுலேருந்து எடப்பாடி தப்பிக்கிறது ரொம்ப கஷ்டம்னு சொல்றாங்க.

இப்படி தனக்கு எதிராக கொலை வழக்கை ஸ்டாலின் பயன்படுத்த நினைத்தால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப்போவதில்லை பதிலடி கடுமையாக இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக உணர்த்தவே ஆளுநருடனான சந்திப்பு என்கிறார்கள்.

கொடநாடு கொலை வழக்கை ஸ்டாலின் கையில் எடுத்த நிலையில் திமுக அரசின் கலெக்சன் விவகாரங்களை கிளறியுள்ள எடப்பாடி பழனிசாமி திமுகஅரசின் அதிகார மையங்கள் தொடர்பாகவும் ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார்.

கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமி பெயரை சேர்ப்பதற்கான பணிகள் வேகமெடுத்த நிலையில் சட்டப்பேரவையில் அமளி செய்த எடப்பாடியார், தொடர்ந்து வெளியே தர்ணாவில் ஈடுபட்டதுடன் சுடச்சுட பிரஸ் மீட் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு அடுத்த நாள் ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து பல்வேறு புகார்கள் அடங்கிய மனுவையும் எடப்பாடி பழனிசாமி கொடுத்துள்ளார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, திமுக அரசிற்கு புதிய பெயர் கொடுத்தார்.

அதாவது தற்போதைய திமுக அரசை கமிசன், கலெக்சன் மற்றும் வென்ஜன்ஸ் அரசு என்று கூறி குற்றச்சாட்டுகளை அடுக்கினார். திமுக ஆட்சிக்கு வந்த இந்த நூறு நாட்களில் தமிழகம் முழுவதும் கமிசன் மற்றும் கலெக்சன் நடைபெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கொடநாடு கொலை விவகாரத்தில் நேற்று வரை தன் தரப்பு விளக்கத்தை மட்டுமே எடப்பாடி பழனிசாமி கொடுத்து வந்தார். ஆனால் திடீரென அவர் பதில் தாக்குதலை திமுகவிற்கு எதிராக தொடுத்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியை கமிசன், கலெக்சன், கரப்சன் என ஸ்டாலின் விமர்சிப்பார்.

தற்போது அதே பாணியில் திமுக ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி பட்டப் பெயர் வைத்திருப்பதுடன் கலெக்சன் விஷயத்தையும் லீக் செய்துள்ளார். இதன் பின்னணியை விசாரித்த போது பேசிய அதிமுக நிர்வாகிகள் சிலர், திமுக ஆட்சிக்கு வந்ததுமே முக்கியமான துறையை சேர்ந்த இனிசியல் அமைச்சர் ஒருவர் அனைத்து ஒப்பந்ததாரர்களையும் அழைத்து மீட்டிங் போட்டதை சுட்டிக்காட்டினார். அந்த மீட்டிங்கில் வைத்து ஏற்கனவே ஒப்பந்ததாரர்கள் செய்து வரும் பணிகளுக்கு கூடுதல் செலவை காட்டி கூடுதல் பணம் பெற்றுக் கொள்ளுமாறு அமைச்சர் அறிவுறுத்தியதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

இதற்காக கமிசனாக பத்து சதவீதம் தர வேண்டும் என்றும் தான் மாதம் கிச்சன் கேபினட்டிற்கு 100 கோடி ரூபாய் வரை கொடுக்க வேண்டியுள்ளது என்று ஒப்பந்ததாரர்களிடம் அந்த அமைச்சர் பேசியதையும் அதிமுகவினர் சுட்டிக்காட்டினர். இதன் அடிப்படையில் பழைய ஒப்பந்தங்களை பெற்ற ஒப்பந்ததாரர்களிடம் முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் ஐந்து சதவீத தொகை வசூலித்து முடிக்கப்பட்டுள்ளதாகவும், இதே போல் வேறு சில முக்கிய துறைகளிலும் ஒப்பந்ததாரர்களிடம் படு ஜரூரராக கலெக்சன் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் இதனைத் தான் எடப்பாடி பழனிசாமி ஊடகங்களில் லீக் செய்துள்ளதாக அதிமுகவினர் கூறியுள்ளனர்.

தற்போது எந்த அமைச்சரின் பெயரையோ அல்லது கமிசன் தொகையையோ குறிப்பிடாமல் எடப்பாடி பேசியுள்ளார். ஆனால் அமைச்சர் யார் மூலம் பணத்தை பெற்றார், யாரிடம் பெற்றார், எவ்வளவு பெற்றார், எப்படி பெற்றார் என்கிற விவரங்களை எல்லாம் எடப்பாடியார் தோண்டி எடுத்து வைத்துள்ளதாகவும், அடுத்தடுத்த செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த தகவல்களை அவர் கசியவிடுவார் என்று கூறி அதிர வைக்கின்றனர் எடப்பாடிக்கு நெருக்கமான அதிமுகவினர்.

இதனிடையே இது தவிர தமிழகத்தில் கலெக்சன் செய்யப்பட்ட பணம் போலீஸ் வாகனங்கள் மூலம் அண்டை மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தகவலையும் பிரபல வார இதழ் ஒன்றுக்கு எடப்பாடி தரப்பு தான் லீக் செய்ததாக கூறுகிறார்கள். அத்தோடு ஆளுநரை சந்தித்து கொடுத்த மனுவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவிர மற்ற சிலரும் அதிகார மையமாக உருவெடுத்து தமிழக அரசை இயக்குவதாகவும் ஒரு குண்டை தூக்கிப் போட்டுள்ளார் எடப்பாடியார். யார் யார் என்று பெயரை கூறவில்லை என்றாலும் அவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனைத்தான் கூறியிருப்பதாக சொல்கிறார்கள். இப்படி தனக்கு எதிராக கொலை வழக்கை ஸ்டாலின் பயன்படுத்த நினைத்தால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப்போவதில்லை பதிலடி கடுமையாக இருக்கும்னு எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக சொல்றதுக்குத்தான் ஆளுநருடனான சந்திப்பு என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *