Saturday, April 13

ஸ்கெட்ச் போட்டு கே.டி.ராகவனை காலி பண்ணிய நிர்வாகிகள்.? அடுத்த 15 பேருக்கு ஆப்பு ரெடி

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப் பெருமாள் கோவிலைச் சேர்ந்தவர் 45 வயதான கேடி ராகவன். வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டு வந்தவர், தமிழக பாஜகவில் மாநிலப் பொதுச் செயலாளராக இருக்கிறார்1999ம் வருஷம் செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி, 2006ம் வருஷம் காஞ்சிபுரம் தொகுதி, 2011ம் வருஷம் செங்கல்பட்டு தொகுதி மற்றும் 2016ம் வருஷம் கொளத்துார் சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டவர்.

இந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனத்தில் பணியாற்றுபவரும், பாஜக உறுப்பினருமான மதன் ரவிச்சந்திரன்ங்கிறவர் செவ்வாய்க்கிழமைஅண்ணைக்கி அவரோட யூடியூப் சேனலில் கேடி ராகவன் பற்றிய சர்ச்சைக்குரி்ய வீடியோ ஒண்ணை வெளியிட்டாரு, அதில், கே.டி ராகவன் பாஜகவின் மகளிர் அணியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் செல்போனில் வீடீயோ காலில் பேசுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுருக்கு

சட்டையின்றி வீட்டில் கேடி ராகவன் இருந்த நிலையில் ஒரு கட்டத்தில் ஆபாசமான செய்கைகளிலும் ஈடுபடுவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியிருக்கு. வீடியோவை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன், பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலோடு தான் வீடியோவை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், பாஜகவில் அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண்களைப் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்குவதை அம்பலப்படுத்துவதற்காகத் தான் வீடியோ வெளியிடப்பட்டதாக, அதன் தயாரிப்புக் குழுவில் இடம் பெற்றுள்ள வெண்பா கீதாயன் என்பவரும் தெரிவித்துள்ளார்.

பெண் நிர்வாகியுடன் வீடியோ காலில் பேசியபடி சுய இன்பம் காணும் ஆபாச வீடியோவில் கே.டி.ராகவன் சிக்கியது எப்படி என்று பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்குது. பாஜவில் உள்ள முக்கிய தலைவர்கள், பெண்கள் விஷயத்தில் ரொம்ப மோசம். கட்சி நிகழ்ச்சிகளுக்கு வரும் நிர்வாகிகள், பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக சொல்லப்படுது.இந்த செய்திகளை தினமலரில் போட்டிருந்தாங்க.திநகரில் இருக்கிறது கமலாலயமா இல்லை காமாலயமாங்கிற தலைப்புல செய்தி போட்டதுக்கு இதே ராகவன் கொதிச்சிப்போய் மறுப்பு அறிக்கை வெளியிட்டதோட 1 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்கு போட்டாங்க இப்ப அதே ராகவன் சிக்கிகிட்டாரு. மேலும் மேலும் அக்கட்சியின் தலைவர்கள் மீது தொடர்ந்து பாலியல் தொல்லை புகார்கள் வந்துகிட்டே தான் இருந்தது. தலைவர்கள் மீதான புகார்களை விசாரிக்க தலைமை மறுத்து விட்டதாகவும், சிலர் மிரட்டப்பட்டதாகவும் கூறப்படுது. இதனால், பயந்து போய் பல பெண்கள் புகார் அளிக்கவில்லை. ஒரு சிலர் தைரியமாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதனால், போலீசில் புகார் அளித்த பெண் நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

‘கத்திரிக்காய் முத்தினா கடை தெருவுக்கு வந்துதானே ஆகணும்’. எவ்வளவு நாட்களுக்கு தான் ஒரு பிரச்னையை மூடி மறைக்க முடியும். அப்படிதான், வந்து சிக்கி உள்ளார் கட்சியின் மாநில பொதுச்செயலாளராக இருந்த கே.டி.ராகவன். இவர், டெல்லி தலைமையிடம் மிக நெருக்கமாக இருந்தார். பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவரும், தமிழக பாஜ பொறுப்பாளருமான பி.எல்.சந்தோஷ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களிடம் தனக்கு இருக்கிற நெருக்கத்தைப் பயன்படுத்தி, கட்சியில் உள்ள பெண்களிடம் கைவரிசை காட்டி வந்திருக்காரு. மாநில பொதுச்செயலாளராக இருந்தாலும், கட்சியை தனது கட்டுப்பாட்டிற்குள் கே.டி.ராகவன் வைத்திருந்தாருங்கிறாங்க சங்கிகள். இதனால், இவர் மீது டெல்லியில் புகாரளிக்க மாநில நிர்வாகிகளே தயங்குவாங்களாம்.

இதை பயன்படுத்தி கட்சியில் முக்கிய முடிவுகளை எடுப்பது, நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் மாநில தலைவருக்கு கே.டி.ராகவன் முட்டுக்கட்டையாக இருந்தாரு பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி தமிழிசை, முருகன், அண்ணாமலை வரை மாநில தலைவர்களை ராகவன் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள்ள தான் வைச்சிருந்தாராம். கட்சியில் உள்ள பொறுப்புகளில் நிர்வாகிகளை நியமிப்பதற்கு முட்டுக்கட்டையாக இருந்ததாலும், பாலியல் தொல்லை கொடுத்ததாலும், பெண்கள் மற்றும் கட்சியினர் கே.டி.ராகவன் மீது கடும் அதிருப்தியில் இருந்தாங்க. நேரம் வரட்டும்னு காத்திருந்தாங்க.
கட்சியில் உள்ள பெண்களிடம் எப்போது பேசினாலும், வீடியோ காலில் தான் வர சொல்லி கே.டி.ராகவன் டார்ச்சர் செய்துள்ளார்.

இதனால், பெண்கள் விஷயத்தில் அவரை சிக்க வைக்க திட்டமிடப்பட்டு, சென்னை மாடம்பாக்கத்தில் உள்ள மூன்று எழுத்து மாநில மகளிரணி பெண் நிர்வாகி மூலம் கட்சி நிர்வாகிகள் வலைவிரித்தனர். அப்போது, அவருடன் வீடியோ காலில் பேசும் போது தான் கே.டி.ராகவன் வசமாக சிக்கிக்கிட்டாரு. பெண் நிர்வாகிக்கு சுமார் 35 வயது இருக்கும். இவர் பார்க்க அழகாக இருப்பார். திருமணம், நடிகர் மற்றும் நடிகைகளின் நிகழ்ச்சி ஏற்பாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில், ‘ஈவன்ட் மேனேஜ்மென்ட்’ நடத்தி வருகிறார். இவர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது, பள்ளி கரஸ்பாண்டன்ட் ஒருவருடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டு இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தாங்களாம். பெண் நிர்வாகியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன், வீட்டின் படுக்கை அறையில் ரகசிய கேமரா வைத்து கண்காணித்தார்.

அப்போது, அந்த பள்ளி கரஸ்பாண்டன்ட் அடிக்கடி பெண் நிர்வாகியின் வீட்டிற்கு வந்து அவருடன் உல்லாசமாக இருந்துவிட்டு சென்றது கேமராவில் பதிவாகி இருந்தது. இதை பார்த்து ஆத்திரமடைந்த பெண் நிர்வாகியின் கணவர் அவரை அடித்து, வீட்டை விட்டு துரத்தி உள்ளார். இதுகுறித்து, ‘கணவர் அடித்து துன்புறுத்தி, கொடுமைப்படுத்துவதாகவும், தனக்கு பாதுகாப்பு அளிக்கணும்னு சேலையூர் போலீசில் பெண் நிர்வாகி புகார் அளித்திருந்தார். இதையடுத்து, தான் தங்கிய வீட்டை தனக்கு மீட்டு தரணும்னு தனது நண்பர்களிடம் பெண் நிர்வாகி கூறி வந்துள்ளார். அப்போது, காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பாஜ நிர்வாகிகளுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

தனக்கு கட்சி பக்க பலமாக இருக்கும் என்று எண்ணி பாஜவில் சேர்ந்தார். பின்னர், கட்சி நிர்வாகிகள் துணையுடன் கணவனை அடித்து உதைத்து வீட்டை விட்டு விரட்டி உள்ளார் அந்த பெண் நிர்வாகி. தற்போது, அந்த பெண் நிர்வாகி மட்டும் வீட்டில் வசித்து வருகிறார். இவரின் நடவடிக்கையை தெரிந்து தான் கே.டி.ராகவனுடன் பேச வைத்துள்ளனர். அதன்படி, கே.டி.ராகவன், பெண் நிர்வாகியுடன் தொடர்ந்து வீடியோ காலில் பேசி வந்துள்ளார். அடிக்கடி தனிமையில் வெளியே சந்தித்து வந்துள்ளனர். பெண் நிர்வாகியுடன் கே.டி.ராகவன் ஒன்றாக இருக்கும் போது வீடியோ எடுக்க சொந்த கட்சியினரே திட்டம் போட்டுள்ளனர். 2 முறை தோல்வி அடைந்தது வீடியோ எடுக்கும் திட்டம் மூன்றாவது முறையாக வெற்றியடைந்து உள்ளது.

முதன்முறை சென்னை தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் பாஜ ஆதரவாளருக்கு சொந்தமான ஒருவரது ஓட்டலில், கே.டி.ராகவன் ரூம் போட்டு, அந்த பெண் நிர்வாகியுடன் தனிமையில் இருந்துள்ளார். அப்போது, வீடியோ எடுக்க முயன்றனர். ஆனால், திட்டம் தோல்வியில் முடிந்தது. 2வது முறையாக, சென்னை மேடவாக்கத்தில் கே.டி.ராகவனுக்கு சொந்தமான வீட்டில் சந்தித்துள்ளனர். அப்போது, இருவரும் தனிமையில் இருக்கும்போது வீடியோ எடுக்க முயன்றனர். ஆனால், எடுக்கவில்லை. இதனால், 3வது முறையாக வீடியோ காலில் பேசும் போது தான் கே.டி.ராகவனை ஸ்கெட்ச் போட்டு தூக்க மதன் தலைமையிலான கட்சியினர் பக்காவாக திட்டம் போட்டனர்.

அதன்படி, வீடியோ காலில் பேசிய கே.டி.ராகவன் அரை நிர்வாணத்துடன் பூஜை அறை முன் அமர்ந்து, பெண் நிர்வாகியை ஆடைகளை களைய சொல்லி அவரது உச்சி முதல் பாதம் வரை ரசித்து, ரசித்து காம உணர்ச்சியுடன் உதட்டை கடித்தபடி சுய இன்பம் அனுபவித்தார். தயாராக இருந்த கட்சியின் ஒரு கோஷ்டி பக்காவாக வீடியோ எடுத்தது. மேலும் கே.டி.ராகவன், அந்த பெண் நிர்வாகியுடன் வாட்ஸ் அப்பில் பேசிய மெசேஜ் உரையாடல்களையும் சேகரித்து வைத்தது. இந்த வீடியோ வெளியிட உள்ளதை இரண்டு நாட்களுக்கு முன்பே தெரிந்து கொண்ட கே.டி.ராகவன் சம்பந்தப்பட்ட பெண் நிர்வாகியிடம் சமரசம் பேசியுள்ளார். ஆனால் அந்த பெண் நிர்வாகி, சமாதானம் அடையவில்லை.

இதையடுத்து கே.டி.ராகவனின் காம லீலைகள் பற்றி ஆதாரத்துடன், கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையிடம் பாஜ பிரமுகர் மதன் புகார் அளித்தார். அப்போது, அவர் ஆதாரத்தை தன்னிடம் தாருங்கள். கட்சி மேலிடத்திற்கு அனுப்பி விசாரிக்கிறோம். இது பெரிய வேலை. 6 மாதத்திற்கு மேல் ஆகும் என்று கூறி தட்டிக்கழித்துள்ளார். இருப்பினும், மதன் இரு முறை அண்ணாமலையை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளார். ஆனால், அண்ணாமலை மழுப்பலான பதிலே கூறி உள்ளார். இறுதியாக, வாட்ஸ் அப்பில் மதன் கேட்டுள்ளார். அப்போது அண்ணாமலை, பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால், நீங்கள் வீடியோ வெளியிடுங்கள். எந்த கட்டுப்பாடும் இல்லை என்று பதிலளித்துள்ளார்.

இதையடுத்து, மதன் தான் நிர்வகித்து வரும் யூடியூப் சேனலில் வீடியோவை நேற்று முன்தினம் காலை வெளியிட்டார். ஆதாரத்துடன் சிக்கியதால் எந்த மறுப்பும் தெரிவிக்க முடியாமல் கட்சி தலைமையிடம் பேசி தனது பதவியை ராஜினாமா செய்வதாக டிவிட்டரில் கே.டி.ராகவன் அறிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளே கூண்டோடு சேர்ந்து சிக்க வைத்ததால் வேறு வழியின்றி அவர் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கால் பதிக்க வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை பாஜ எடுத்தது. குறிப்பாக, கோயில் உள்ளிட்ட விவகாரங்களை கையிலெடுத்து பிரசாரம் செய்தது. ஆனால், தமிழகத்தில் அது எடுப்படவில்லை.

அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் தான் அவர்களுக்கு 4 தொகுதிகளாவது கிடைத்தது. இந்த 4 எம்எல்ஏக்களை வைத்து பல்வேறு கணக்குகளை போட்ட பாஜவுக்கு, அக்கட்சி நிர்வாகிகளின் காமக் களியாட்டம் பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக மற்றும் பாஜவில் உள்ள தலைவர்கள் எங்கு போனாலும் பத்திரிகையாளர்களை சந்திப்பார்கள். ஆபாச வீடியோ வெளியானதில் இருந்தே 2 நாட்களாக பத்திரிகையாளர்களை சந்திக்காமல் இரு கட்சி தலைவர்களும் ஓடி ஒளிந்துள்ளனர். குறிப்பாக, தமிழகத்தில் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக, இந்த விவகாரம் குறித்து ஒரு வார்த்தை கூட இதுவரை பேசவே இல்லை.

மலர்கொடி தலைமையிலான குழுவினர், *பெண் நிர்வாகியிடம் விசாரணை நடத்தியதாகவும், அடுத்து *கே.டி.ராகவனிடமும் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. கட்சிக்குள்ளே பல பிரிவுகளாக செயல்பட்டு இந்த விவகாரம் வெளி வந்துள்ளதால், பலரிடம் இந்த குழு விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. அதேநேரம், டெல்லி தலைமையிடம் இருந்து அண்ணாமலையிடம் தனியாக அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அண்ணாமலையும் தனி அறிக்கையை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அறிக்கையை பார்த்த பின் டெல்லியில் இருந்து ஒரு குழு வந்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. இதனால், கட்சிக்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதன், மகளிரணி நிர்வாகி நீக்கம்
தமிழக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பா ஆகியோர் மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து பாஜ சார்பில் அமைக்கப்பட்டுள்ள நடவடிக்கை குழுவிற்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். அதே வேளையில் பாஜ கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக வீடியோ பதிவில் கருத்துகள் தெரிவித்துள்ள மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பா ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுகிறார்கள்.

மேலும் பல தலைவர்கள் சிக்குகின்றனர்.
கே.டி.ராகவனின் ஆபாச வீடியோ வெளியிட்டு பேசிய பாஜ பிரமுகர் மதன் தெரிவிக்கும் 15 தலைவர்களும் மாநில நிர்வாகிகள் என்று கூறப்படுகிறது. இதனால், மாநில தலைவர்கள் கிலியில் உள்ளனர். 15 பேர் பட்டியலில் நம்ம பெயர் இருக்குமோ என்று ஒவ்வொருவரும் பீதியில் உள்ளனர். 15 பேர் யாராக இருக்கும் என்று கட்சி நிர்வாகிகளே வாட்ஸ் அப் காலில் ஒரு கணக்கு போட்டு வருகின்றனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட யாருமே நேற்று வரவில்லை. இதனால், கமலாலயம் வெறிச்சோடி காணப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *