Saturday, April 13

கோட்டையில் நிழல் முதல்வர் ! சீனியர் அமைச்சர்கள்.அப்செட்.!

கோட்டையில் நிழல் முதல்வர் ! சீனியர் அமைச்சர்கள்.அப்செட்.! அதிகாரிகள்.குஷி.!
கலைஞர் ஆட்சி காலத்தில் அமைச்சர்கள் எல்லாருமே குறுநில மன்னர்கள் போல செயல்பட்டதா ஒரு புகார் உண்டு. ஜெயலலிதா அரசுக்கும் கலைஞர் அரசுக்கும் இது தான் வித்தியாசம் என்று கூட பேச்சுகள் எழுவதுண்டு.

ஜெயலலிதா இருந்தப்போ எப்படி அரசு இயங்கியதோ அதே பாணியில் தற்போது அரசு இயங்கிக் கொண்டிருப்பதாக பொருமிக் கொண்டிருக்கிருக்கிறாங்களாம் சீனியர் அமைச்சர்கள்.

ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும் போதெல்லாம் துறைகளுக்குன்னு அமைச்சர்கள் இருந்தாலும் அவர்களின் செயலாளர்கள் மூலமாகத்தான் அந்த துறை இயங்கும். டெண்டர், டிரான்ஸ்பர், புதிய திட்டம் எதுவா இருந்தாலும் துறைகளுக்கான செயலாளர்கள் மூலமாக ஃபைல்கள் நேரடியாக போயஸ் கார்டன் போகும். அங்கு அப்போ அதிகாரத்தில் இருந்த சின்னம்மா சொல்லும் அறிவுறுத்தலின் படியே டெண்டர்கள் முடிக்கப்படும், டிரான்ஸ்பர்கள் நடைபெறும்.

ஆனால் கலைஞர் அரசில் சீனியர் அமைச்சர்கள் வைச்சது தான் சட்டம். டிரான்ஸ்பர் மட்டுமல்ல டெண்டர்களையும் அமைச்சர்களே இறுதி செய்து முதலமைச்சர்அலுவலகத்திற்கு தகவல் மட்டும் தான் தெரிவிப்பாங்க.
இதனால்தான் கலைஞர் ஆட்சி காலத்தில் அமைச்சர்கள் எல்லாருமே குறுநில மன்னர்கள் மாதிரி செயல்படுறதா ஒரு புகார் உண்டு. ஜெயலலிதா அரசுக்கும் கலைஞர் அரசுக்கும் இது தான் வித்தியாசம்னு சொல்வாங்க.

இந்த நிலையில் புதுசா அமைஞ்சிருக்கிற மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் சீனியர் அமைச்சர்களாக இருந்தாலும் கூட துறை சார்ந்த முக்கிய முடிவுகளை தன்னிச்சையாக எடுக்க முடியாதுன்னு சொல்றாங்க. டிரான்ஸ்பர், டெண்டர், புதிய திட்டம் என எதுவாக இருந்தாலும் அதற்கு முதலமைச்சர் அலுவலகத்தின் ஒப்புதல் மிக முக்கியம் என்கிறார்கள். அதாவது துறை சார்ந்த செயலாளர்கள் தான் இந்த கோப்புகளை முதலில் அதிகாரம் பொருந்திய அந்த நபருக்கு அதாங்க நிழல் முதல்வருக்கு அனுப்பி வைக்கிறதா. சொல்றாங்க.அவருக்கு 4 பிஏக்கள் இருக்கிறாங்களாம். அதிகாரம் பொருந்திய அந்த நபர் ஓகே சொன்னால் மட்டுமே ஃபைல் முதலமைச்சர் அலுவலகம் போகும்னு கோட்டையில பேசிக்கிறாங்க.

இதே போல் முதலமைச்சர் அலுவலகத்தின் முக்கிய பைல்கள் கூட மிக முக்கிய அதிகாரி மூலமாக அதிகாரம் பொருந்திய அந்த நபரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக சொல்கிறார்கள். அதில் ஏதேனும் நெருடல் இருந்தால் முக்கியமான அதிகாரம் பொருந்திய அந்த நபர் திருத்தம் செய்து அனுப்புவதாகவும் சொல்கிறார்கள். அதாவது அந்த மிக முக்கியமான நபர் தற்போது கட்சி விவகாரங்களை ஒதுக்கிவைத்துவிட்டு ஆட்சி விவகாரங்களில் முழுக்கவனம் செலுத்துவதாக சொல்கிறார்கள்.

அதன்படி சீனியர் அமைச்சர்களாக இருக்க கூடியவர்களின் துறை சார்ந்த எல்லா ஃபைல்களும் அடுத்தகட்டத்திற்கு போறதுக்கு நோட் போட்டு வைக்கப்பட்டுள்ளதாக சொல்றாங்க அதிகாரிகள் பைல் தொடர்பான பின்புலத்தை ஆராய்ந்து அதிகாரம் பொருந்திய நபருக்கு சில டிப்ஸ்களை எடுத்துச் சொல்வார்களாம். அதன் அடிப்படையில் தான் அந்த டெண்டர், டிரான்ஸ்பர் என எல்லாமே போடப்படுறதாக சொல்றாங்க. எல்லாமே அவர் செயல் என்றால் பிறகு அமைச்சர்களாக நாங்கள் எதற்கு என்று சீனியர் அமைச்சர்கள் புலம்ப, அதிகாரிகள் தெம்பாக கோட்டையை ரவுண்ட் வந்து கிட்டிருக்காங்களாம். அமைச்சரோட நெருக்கடி இல்லாம அதிகாரிகள் எல்லாருமே ஜாலியா வேலையைப் பார்க்கிறாங்களாம். ஆனால் வட மாவட்டத்தை சேர்ந்த ஒரே ஒரு அமைச்சருக்கு மட்டும் முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளதால் அவர் அலுவலகத்தில் மட்டும் பைல்கள் உடனுக்குடன் க்ளீயர் ஆகுதாம். யாருன்னு புரிஞ்சிருக்கும் உங்களுக்கு. இதுக்கு. என்ன காரணம் சொல்றாங்கன்னா கடந்த திமுக ஆட்சியில மந்திரிகள் வைப்பது தான் சட்டமா இருந்ததுனால மக்கள் மத்தியில் கெட்டப் பேர் தான் வந்தது.இப்பவும் அந்த கெட்ட பேர் வரக்கூடாதுங்கிற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாம்.இன்னொரு சசிகலாவா மாறாம இருந்தா சரிதான்.

Related posts:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *