Thursday, April 18

தமிழகத்தில் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் !

 இந்த புதிய மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே மின்சார சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான எதிர்ப்புக் குரல்கள் வரத் தொடங்கிடுச்சி.

மின்சாரச் சட்டம் 2003இல் பல முக்கிய திருத்தங்களைச் செய்து புதிய திருத்தச் சட்ட வரைவை கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி மக்களின் கருத்திற்காக மத்திய அரசு வெளியிட்டது. ஆனால், கொரோனா ஊரடங்கில அது நம்மள்ல பலரது கவனத்துக்கும் வராமல் போயிடுச்சு .

இந்த நிலையில், நடப்பு மழைக்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ள 19 மசோதாக்களில் முக்கியமானது இந்த மின்சார சட்டத்திருத்த மசோதா. இந்த திருத்தப்பட்ட மசோதாவில், மாநில மின்வாரியங்ளுக்கு பதிலாக மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, அதனிடம் அனுமதி பெற்று மின் விநியோகத்தில் நேரடியாக தனியார் நிறுவனம் ஈடுபடலாம்னு சொல்றாங்க.. மாநில அரசுகள் மக்களுக்கு அளித்து வரும் இலவச
மின்சாரம் உள்ளிட்ட மானியங்களை நேரடியாக மக்களின் வங்கி கணக்குகளில் செலுத்தவும் இந்த மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மசோதாவின்படி, மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடமே ஏகபோக உரிமை இருக்கும் என்பதால், அது மாநிலங்களில் உரிமையை பறிக்கும் செயல் என்றும், பல தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் மின் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனத்தை கொண்டிருக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம் போன்ற மாநிலங்களின் கட்டமைப்புகள் தனியாரிடம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.இதை மத்திய அரசு எடுத்துக் கொள்ளுமான்னு தெரியல.ஆனா மத்திய அரசு உறுதியாக இருக்குது.

மின்சாரத்தை அண்டை நாடுகளுக்கு விற்பனை செய்து கொள்ளவும் இந்த மசோதாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டக் கூடும் என்றும், லட்சக்கணக்கான மின்வாரிய ஊழியர்கள் வேலையிழக்க நேரிடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த மசோதாவை கண்டித்து, நாடு முழுவதும் மின்சார ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தையும் அறிவிச்சிட்டாங்க.

தமிழகத்தைப் பொறுத்தவரை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், விசைத்தறி தொழிலாளர்களுக்கு 500 யூனிட்கள், குடிசை தொழிலுக்கு 100 யூனிட்கள், வீடுகளுக்கு முதல் 100 யூனிட்களை இலவசமாக மாநில அரசு வழங்கி வருது. கமர்ஷியல் கட்டணங்களை அதிகமாக வசூலித்து, மானியங்களால் ஏற்படும் இழப்பு ஈடு செய்யப்படுகிறது.2500 கோடிக்கு மேலாக வர வேண்டிய மானியம் இன்னமும் வந்து சேரலை !
இந்த மசோதா மூலம், கமர்ஷியல் கட்டணங்கள் வேறு, குடியிருப்புகளுக்கான கட்டணங்கள் வேறு என்ற நிலை மாறி அனைவருக்கும் ஒரு யூனிட்டுக்கு ஒரே விலை என்ற நிலை ஏற்படும். மானியத்தை குறிப்பிட்ட நபர்களின் வங்கிக் கணக்குகளுக்கே செலுத்திக் கொள்ளலாம் என்பதால், விவசாயிகளை அது பாதிக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. அதேசமயம், குடியிருப்புவாசிகள் தங்களது மின் கட்டணத்தை செலுத்திய பிறகு, அவர்களுக்கான மானியமானது வீட்டு உரிமையாளரின் வங்கி கணக்குக்குத் தான் செல்லும் என்றும் சுட்டிக் காட்டப்படுகிறது.மின் இணைப்பு யார் பேர்ல் இருக்கோ அவுங்க வங்கி கணக்குல தான் மான்யம் போடப்படும்.

புதிய மின்சார மசோதா மூலம், மக்களுக்கு பிடித்த நிறுவனங்களில் மின் இணைப்பை பெறலாம், சேவை பிடிக்கவிலன்னா வேறு நிறுவனங்களிடம் இணைப்பை பெறலாம் என்பன போன்ற அம்சங்கள் இடம்பெற்றிருக்கிறதால், மக்களுக்கான மானியங்கள் ரத்து செய்யப்பட்டு விலையேற்றத்துக்கும் வழிவகுக்கும்னு சொல்றாங்க.என்ன செய்யப் போகுது தமிழக அரசு ?

Related posts:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *