Saturday, April 13

முதல்வர் ஸ்டாலினிடம் இருந்து பறந்த உத்தரவு.. ரெடியானஅதிகாரிகள்.. கலக்கத்தில் அதிமுக மாஜிக்கள்

முதல்வர் ஸ்டாலினிடம் இருந்து பறந்த உத்தரவு.. ரெடியானஅதிகாரிகள்.. கலக்கத்தில் அதிமுக மாஜிக்கள்

ரொம்ப முக்கியமான விஷயங்கள் தலைமைச் செயலகத்தில் உலா வருது எல்லாமே அதிமுக மாஜிக்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் அதனால, அரசியல் களம் சூடுபிடித்து வருது. கடந்த முறை அதிமுக ஆட்சியில், திமுகவை அளவுக்கு அதிகமாக விமர்சித்தது பால் வளத்துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திர பாலாஜிதான்.. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிகூட, ஸ்டாலினை இந்த அளவுக்கு கீழ்த்தரமாகத் திட்டியதில்லை.. விமர்சித்ததும் இல்லை.. ராஜேந்திர பாலாஜி எப்போதெல்லாம் ஸ்டாலினை விமர்சிக்கிறாரோ, அந்த வீடியோக்கள் அத்தனையும் பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டு வைரலாவதுண்டு.. காரணம் அவைகள் அனைத்திலுமே வார்த்தைகளின் எல்லைகள் மீறப்பட்டிருந்தது.

ராஜேந்திர பாலாஜி “நீ ஒரு நல்ல ஆம்பளையா இருந்தால் என் ஊருக்கு வா பார்ப்போம்” என்று கீழ்த்தரமாக, பேசினார். அதேசமயம் ஒருமையில் இதுவரை யாருமே அரசியலில் சவால் விட்டதில்லை.. அதைவிட கொடுமை, ராஜேந்திர பாலாஜி பேசிய பேச்சுக்களுக்கு இதுவரை அதிமுக தலைமை வருத்தமும் தெரிவிக்கலை.. எடப்பாடி பழனிச்சாமி கூப்பிட்டு கண்டிக்கவும் இல்லை. ஆனால், எல்லாவற்றிற்கும் சேர்த்து வைத்து, ராஜபாளையம் பிரச்சாரத்தில் ஸ்டாலின் கே.டி.ராஜேந்திர பாலாஜியை வறுத்தெடுத்துவிட்டார். “ரவுடித்துறை அமைச்சர்.. பபூன் ரவுடி.. அவரை பார்த்தாலே பபூன் ஞாபகம் தான் வருது.. நான் எங்க போனாலும், வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்துத்தான் வாக்கு கேப்பேன்.. ஆனால் முதன்முதலாக ராஜேந்திர பாலாஜிக்கு ஓட்டுப்போடக் கூடாதுன்னு சொல்லி வாக்கு கேக்கறேன்.. ஜெயலலிதா இருந்திருந்தால் இவரெல்லாம் அதிமுகவிலேயே இருந்திருக்க மாட்டார். ஆட்சிக்கு வந்ததும், அவர் மீதுள்ள சொத்துக்குவிப்பு வழக்கை வேகப்படுத்தி, உண்மையை வெளிக் கொண்டுவந்து, அவரை ஜெயிலுக்கு அனுப்புவது தான் முதல் வேலை”..! என்றார். எனவே, எப்போது வேண்டுமானாலும் திமுக அரசு இவர் மீது நடவடிக்கை எடுக்கும்னு எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் தொற்று பிரச்சனை தலைதூக்குனதுனால அந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டியதாகிவிட்டது.. இப்போது மெல்ல தொற்று குறைந்து வருகிறது.. அடுத்தடுத்த பிரச்சனைகளை திமுக அரசும் கையில் எடுத்து வருகிறது.. அந்த வகையில், ராஜேந்திர பாலாஜி மீதான நடவடிக்கை பாயும் என தெரிகிறது.
அதற்கேற்றார்போல, ராஜேந்திர பாலாஜி, மற்றும் அவரது பினாமிகள் ஆவினில் சுமார் ரூ.100 கோடி அளவிற்கு ஊழல் செய்துள்ளதாகவும், அதில் ரூ.61 கோடி ஊழலுக்கான ஆதாரங்களை தற்போதுள்ள அமைச்சரிடம் அளித்துள்ளதாகவும் தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்… இதுதான் முக்கிய மேட்டராக கிடைத்துள்ளது.

ஸ்டாலின் பதவியேற்றதுமே, அவரை ஆஹா, ஓஹோன்று புகழ்ந்து தள்ளி பேட்டி தந்தார் ராஜேந்திர பாலாஜி.. ஒன்னும் வேலைக்காகவில்லை.. அது திமுக தலைமையிடமும் எடுபடவில்லை போலும்.. ஊழல் புகார்கள் ரெடியாகி கொண்டிருக்கிறதாம்.. இந்த லிஸ்ட்டில் விஜயபாஸ்கர், வேலுமணி உள்ளிட்ட பலரும் இடம்பெற்றிருப்பதாகவும் தெரிகிறது..  மஞ்சள் சட்டை, கை நிறைய கயிறுகள், நெற்றிய நிறைய குங்குமம் என வலம் வரும் ராஜேந்திர பாலாஜி, தன்னை விடுவித்து கொள்ளும் முயற்சியிலும் இறங்கி இருப்பதாக தகவல் வருது.. நாளுக்கு நாள் கூடிகிட்டே போகும் நெருக்கடியில் இருந்து, ஆதாரப்பூர்வமான தகவல்களை எதிர்த்து வழக்கில் இருந்து மீள்வாரா? அல்லது சிக்குவாரா? தெரியவில்லை. மோடி எங்கள் டாடின்னு சொல்லியிருந்தாரு.பிஜேபிக்கும் தூது விட்டுப் பாத்தாராம். ஒண்ணும் ஒர்க் அவுட் ஆகலையாம் அதனால் நொந்து போய்ட்டாராம்.ரொம்ப ஓவரா பேசிட்டனோன்னு அவரைப் பார்க்க வரவங்க கிட்ட எல்லாம் கேட்கிறாராம். இது தொடர்பாக இன்னொரு விஷயமும் கசிந்துள்ளது.. லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள கந்தசாமியிடம், கடந்த ஆட்சியில் நடந்த ஊழல் முறைகேடுகள் தொடர்பான ஆவணங்களை சேகரிக்கும்படி, அரசு வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளதாம்.. இதைதவிர, அமைச்சர்களிடமும், அவர்கள் துறைகளில் நடந்த முறைகேடு, ஊழல் தொடர்பான ஆவணங்களை சேகரித்து,லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் கந்தசாமியிடம் வழங்கவும், வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.. அதேபோல, எடப்பாடி பழனிசாமியிடம் இருந்த நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணி துறையில் நடந்த ஊழல் குறித்த விபரங்களை, தோண்டி எடுக்கும் பணியும் நடந்து வருகிறதாம்… “பாரத் நெட் டெண்டரில்” நடந்த முறைகேடுகள், உணவு தானியங்கள் கொள்முதலில் நடந்த முறைகேடுகள், உள்ளாட்சி துறையில் நடந்துள்ள ஊழல்கள், மீன் வளத்துறையில் “வாக்கி டாக்கி” ஊழல், சுகாதாரத் துறையில் கொரோனா சிகிச்சை மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் நடந்த ஊழல்கள் போன்றவை குறித்த விபரங்களை சேகரிக்கும் பணி நடந்து வருவதாக, தகவல் வெளியாகி இருக்குது. பட்ஜெட் கூட்டம் முடியட்டும்னு தான் இவ்வளவு நாள் காத்திருந்தார்களாம்..
எனவே, இப்போது ஒவ்வொரு துறை வாரியாகவும் நடவடிக்கை பாயும்னு தெரியுது.. இந்த சூழ்நிலையில ஊழல் அமைச்சர்கள் ஒவ்வொரும் எங்க மேல நடவடிக்கைகள் எதுவும் வேண்டாம்.நீங்க கேக்கிறதக் கொடுக்கிறோம்னு சமாதானம் பேச ஆரம்பிச்சிட்டாங்களாம்.முதல்வர் ஸ்டாலின் அசரவேயில்லையாம் தேர்தல் பிரச்சாரத்தில மக்களுக்கு குடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியே ஆகணும்ன்னு உறுதியா இருக்காராம்.கேஸ் போட்டே ஆகணும்னு சொல்றாராம்.இந்த சூழ்நிலையில ரஜினியோட டயலாக் ஒண்ணு ஞாபகத்துக்கு வருது.இனிமே தான் இந்த காளியோட ஆட்டத்த பார்க்கப் போறீங்கன்னு சொல்வாரே அதே போல இனிமேல்தான் நம்ம முதல்வர் ஸ்டாலினோட ஆட்டத்தைப் பாக்கப் போறோம்.

Related posts:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *