Saturday, April 13

பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் அத்துமீறல் ?

சென்னை கே.கே.நகர் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் , ஆன்லைன் வகுப்பில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்வபம் அம்பலமானது . இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் , ஆசிரியர் ராஜகோபாலனை கைது செய்தனர் . இந்த விவகாரத்தில் பத்ம சேஷாத்ரி பள்ளி மீதும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன . இந்த விவகாரம் சாதிய ரீதியாக அணுகப்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.  இது குறித்து பள்ளியில் மாணவிகள் புகார் அளித்த போது அதை நிர்வாகம் கவனத்தில் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிகழ்வுக்குப் பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி தனது டிவிட்டரில்,

“சென்னையில் உள்ள மரியாதைக்குரிய பத்மா சேஷாத்ரி பள்ளியில் மூன்று கிளைகளில் 10000 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இதை ஒரு ஞானி மற்றும் தியாகி ஆகிய பிராமணர்கள் நிர்வகிக்கின்றனர்.
இங்கு மாணவியிடம் ஒரு ஆசிரியர் தவறாக நடந்து கொண்டதால் திமுக மற்றும் திகவினர் அவர்களை துன்புறுத்துகின்றனர். இந்த குண்டர்கள் தாக்குதலைத் தமிழக முதல்வர் நிறுத்தாவிட்டால் நான் பள்ளியின் பாதுகாப்பை ஏற்றுக் கொள்வேன்” என்றும்

திமுக மீது தனது தாக்குதலைத் தொடர்ந்தார், பெரியாரின் டி.கே (திராவிடர் கழகம்) ஸ்டாலின் தலைமையிலான கட்சியின் முதுகெலும்பாக செயல்படுவதாகக் கூறப்படுகிறது. பெரியாரின் பெயரை பிக்பேக்கிங் செய்வதற்கும், சமீபத்தில் முடிவடைந்த தமிழ்நாடு தேர்தல்களில் 2021 ஐ வென்றதற்கும் அவர் திக கட்சியைக் பயன்படுத்தினார். திமுகவின் வெற்றியின் பெரும்பகுதி மு.க.ஸ்டாலினின் மனைவி துர்காவுக்கு இருக்கு என்றும் அவர் கூறினார். ‘அவர் இந்த வாய்ப்பை நல்ல வழியில் பயன்படுத்த வேண்டும்,’ என்றார்.

‘இதேபோல், இந்த சம்பவத்திற்குப் பிறகு பள்ளி நிர்வாகம் திமிர்பிடிப்பதை நிறுத்த வேண்டும். விசாரணை சார்பு இல்லாமல் நேர்மையாக நடத்தப்பட வேண்டும். அதில் ஒரு துளி சந்தேகம் இருந்தாலும், விசாரணை தமிழ்நாட்டில் நடைபெறுவதைத் தடுப்பேன். அதற்கான சட்ட தந்திரங்களை நான் அறிவேன், என்றார் சுப்பிரமணியம் சுவாமி.இந்த இடத்தில ஒரு சம்பவத்தை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்ததாக முதலில் வழக்கு போட்டதே சாமி தான்.அந்த வழக்குதல தான் திமுக இம்ப்ளீட் பெட்டிஷன் போட்டு அந்த வழக்குல சேர்ந்தாங்க.அந்த வழக்குல தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களும் தண்டிக்கப்பட்டாங்க.
திமுக ஆட்சியயக் கலைப்பேன்னு எந்த தைரியத்தில் சொல்றாருன்னா ஆர்டிக்கிள் 356 அதாவது இந்திய அரசியலமைப்பு சட்டம் 356 பிரிவு இந்த பிரிவைப் பயன்படுத்தித்தான் பல மாநிலங்களில் ஆட்சி கவிழ்க்கப்பட்டிருக்கு.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியை. 1991 ல கவிழ்க்க சுப்பிரமண்யசாமி காரணமா இருந்தாரு. அதனால் ஆட்சியைக் கவிழ்க்கிறது
சு சாமிக்கு கை வந்த கலை. ஆனா இப்போ அது சாத்தியமே இல்லை.

இப்போ பத்ம சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சிறப்புக்கவனம் எடுத்து . குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரான செயல்களை முளையிலேயே கிள்ளி எறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தமிழக ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார் .

இந்நிலையில் , இப்பள்ளி விவகாரத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி களத்தில் இறங்கியுள்ளார் பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில் நியாயமான விசாரணையை மேற்கொள்ளலாம் என்றும் உள்நோக்கத்தோடு அரசு செயல்படுவது தெரியவந்தால் தமிழக அரசை கலைப்பதை தவிர வேறு வழியில்லை ” என்று சுப்ரமணிய சுவாமி பகிரங்கமாக எச்சரித்திருந்தார் .
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவை வெளியிட்ட சுப்ரமணியசாமி , தமிழகத்திலுள்ள ஞானி மற்றும் தியாகிகளான பிராமணர்கள் மத்தியில் இந்துள்ள அச்ச உணர்வு குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு தம் எழுதியுள்ளேன் நாஜி படைகள் ஜெர்மனியில் யூதர்களை குறி வைத்து , தாக்குதல் நடத்திய ஆரம்ப கால கட்டத்தை இந்த சம்பவம் நினைவுபடுத்துகிறது ” என்று திமுக அரசு மீது கடும் விமர்சனத்தை சுப்ரமணிய சுவாமி வைத்திருந்தார்.
இதுதொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் , ” திமுக ஆட்சிக்கு வந்த நாட்களிலேயே குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த ஆசிரியர்கள் , அர்ச்சகர்கள் அதிகம் குறிவைக்கப்படுகிறார்கள் இந்த விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சிறப்புக்கவனம் எடுத்து , இதுபோன்ற செயல்களை முளையிலேயே கிள்ளி எறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இப்பிரச்னைகள் குறித்து தலைமைச் செயலாளருக்கு சம்மன் அனுப்பி , அறிக்கை தயாரித்து வழங்கும்படி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் ” என்று தெரிவித்துள்ளார் .

இந்த பதிவு நெட்டிசன்கள் இடையில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பலரும் பிராமணப் பள்ளி என்பதால் பலாத்காரம் செய்தாலும் ஏற்க முடியுமா? எனவும் ஐந்து வருடங்களாக நடைபெறும் தொந்தரவு குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காத பள்ளி நிர்வாகமும் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் பின்னூட்டம் இட்டுள்ளனர்.மேலும் 30 மாணவிகள் தைரியமா புகார் அளித்துள்ளார்கள்.
சுப்பிரமணிய சாமியிடம் எந்த அரசியல்வாதியும் தொடர்பே வச்சுக்க மாட்டாங்க.மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் கூட இவரைப் பத்தி பேசவே மாட்டார்.முதலமைச்சர் ஸ்டாலினும் இன்னமும் வாய் திறக்கவில்லை.
சுப்பிரமணியசாமியின் மிரட்டலுக்கு அடிபணியாமல் ஸ்டாலின் துணிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மட்டுமில்லாம மக்களோட விருப்பமும் கூட.செய்வீர்களா ஸ்டாலின் அவர்களே !

Related posts:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *