Sunday, April 14

குறைந்த விலையில் சூரிய சக்தி மின்சாரம்!

ஏப்., 1, 2018ல், சூரிய சக்தி உற்பத்தி திட்டத்திற்கான விலையை மேலும் குறைத்து, புதிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. 1 — 10 கிலோ வாட் வரை தயாரிக்கும், யூனிட் அமைக்க, 1 கிலோ வாட்டுக்கு, 60 ஆயிரம் என்ற விகிதத்தில் நிர்ணயித்துள்ளது; இதில், 30 சதவீதம் மானியமாக தரப்படும்.அதேபோல், 11- 100 கிலோ வாட் வரை உற்பத்தி செய்யும் புராஜெக்டுக்கு, 1 கிலோ வாட்டுக்கு, 55 ஆயிரம் ரூபாய் என, நிர்ணயம் செய்துள்ளது. இதற்கும், 30 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

அரசு மானியம் தருவதுடன், மூன்றாண்டு வரை அந்த புராஜெக்டை பராமரிப்பதும், ஒப்பந்ததாரர்களின் பொறுப்பு என, குறிப்பிட்டுள்ளது. சூரிய சக்தி உற்பத்திக்கு பயன்படும் இன்வெர்ட்டர், பேட்டரி களுக்கு ஐந்தாண்டுகள் வரை உத்தரவாதம் உள்ளது.வீடுகள், அப்பார்ட்மென்டுகள், கூட்டுறவு சங்கங்கள், கிளப்புகள், அறக்கட்டளைகளும், இந்த மானியத்தை பெறலாம். வியாபார நிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் மானியம் கிடையாது; ஆனால் அவர்கள், வருமான வரி கட்டும் போது, இந்த முதலீட்டுக்கு சலுகையை பெற்றுக் கொள்ளலாம். ஒரு வீட்டில் சூரிய சக்தி புராஜெக்ட் வேலையை துவங்கும் முன், கடந்த ஓராண்டில், அவர்களின் மின் பயன்பாட்டு சராசரியை கணக்கிடுவோம்.அதன்பின், மின் வாரியத்திலிருந்து அந்த வீட்டுக்கு தரப்பட்டுள்ள உச்சபட்ச மின் பயனீட்டு அளவுடன் ஒப்பிட்டு, மின் தேவையை முடிவெடுத்து, அதற்கேற்ற சூரிய சக்தி உற்பத்தி செய்ய துவங்குவோம். இதிலேயே இன்னொரு முறையாக, ஒரு வீட்டுக்கான சூரிய சக்தி உற்பத்தி புராஜெக்ட் முழுவதையும், அவர்களது வீட்டு மொட்டை மாடியில், எங்களது செலவி லேயே செய்வோம்.உற்பத்தியாகும் மின்சாரத்தை, மின் வாரியம் கேட்கும் விலையை விட, குறைந்த விலையில், வீட்டு உரிமையாளர்களுக்கு தருவோம்.

அடுத்ததாக, ஏதேனும் ஒரு பொது இடத்தில், சூரிய சக்தியை உற்பத்தி செய்து, அதை, கேபிள், ‘டிவி’ கனெக் ஷன் கொடுப்பது போல், பல வீடுகளுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டத்தை, வருங்காலத்தில் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இது நடைமுறைக்கு வந்தால், பயன்பாட்டாளர்களுக்கு எந்த செலவும் கிடையாது; குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்கும்.சூரிய சக்தி உற்பத்தி பேனல் அமைப்பு, மணிக்கு, 150 – 200 கி.மீ., வேகத்தில் காற்ற டித்தாலும் தாங்கும் விதமாக அமைக்கப்பட்டிருக்கும். இவற்றை மொட்டை மாடியில் எப்படி பாதுகாப்பாக அமைக்க வேண்டும் என, திட்டத்திலேயே கூறப்பட்டுள்ளது. இதற்காக செலவழிக்கும் தொகையை நான்கு, ஐந்து ஆண்டுகளில் மின் கட்டண செலவை சேமிப்பதன் வாயிலாக, சரிக்கட்டி விடலாம். அதன் பின் தொடர்ச்சியாக கிடைக்கும் சூரிய சக்தி, நமக்கு லாபமே!

Related posts:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *