Saturday, April 13

சீனாவை விட்டு வெளியேறும் பெரிய நிறுவனங்கள்! ஜப்பான் நிவாரண நிதி !!

கொரோனா’ பிரச்னையால் உலகமே துவண்டு போய் கவிழ்ந்து கிடக்கிறது. நித்தம் நித்தம் ஒரு பொருளாதார பிரச்னை உருவாகி கொண்டிருக்க, இப்போது, சீனாவுக்கு எதிராகவே சில விஷயங்கள் நடக்க ஆரம்பித்து விட்டன.

‘கொரோனா’ பிரச்னையால், உலகப் பொருளாதாரம் சிக்கலில் மாட்டியிருக்கிறது. நியூயார்க், மும்பை, பெய்ஜிங் உட்பட பல்வேறு பங்கு சந்தைகள், கடும் வீழ்ச்சியை சந்தித்தன. ஆனால், இதை சாதகமாக பயன்படுத்தி, சீனாவின் பல முன்னணி நிறுவனங்கள், உலகம் முழுவதும் உள்ள மற்ற நாட்டு நிறுவனங்களின் பங்குகளை அதிகம் வாங்கி குவித்தன. இதனால், அந்த நிறுவனங்கள், சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் செல்லும் நிலை ஏற்பட்டது. இது, அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சீனாவுக்கு எதிராக சில காய்களை நகர்த்த துவங்கியிருக்கிறது ஜப்பான். உலகின் மிகப்பெரிய உற்பத்தி நாடாக சீனா விளங்குகிறது. உலகின் அதிகமான உணவு பொருட்களை அதுதான் உற்பத்தி செய்கிறது. ஆனால், இந்த ஆண்டு, சீனா ‘கொரோனா’ வைரஸ்களை ஏற்றுமதி செய்து விட்டது என்று உலக நாடுகள் சந்தேகிக்கின்றன. இந்த சந்தேகத்தின் அடிப்படையில், முன்பே சில அமெரிக்க நிறுவனங்கள், சீனாவை விட்டு வெளியேறிவிட்டன.சீனா செய்த வேலைக்கு பதிலடி தர வேண்டும் என்றும், ஒரு கருத்து ஏற்பட்டுள்ளது. சமூக விலகலை கடைபிடிப்பது போல், சீனாவிடம் பொருளாதார விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்று அந்நாடுகள் நினைக்கின்றன. சீனாவில் உள்ள பல வெளிநாட்டு நிறுவனங்கள், அந்நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளன. இனிமேல் சீனாவை நம்பி இருக்கக் கூடாது என்று அவை நினைக்கின்றன.

சீனாவுக்கு பாடம் கற்பிக்க நினைக்கும் முக்கிய நாடுகள் அமெரிக்காவும் ஜப்பானும். ஏனென்றால், வைரஸ் பிரச்னையால் இந்த நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. சீனாவை விட்டு பெரிய நிறுவனங்கள் வெளியேறுவதற்கு, ஜப்பான் உதவி செய்வதாக கூறப்படுகிறது. அப்படி நடந்தால் அதனால், இந்தியாவும், வியட்நாமும் பெரிய அளவில் பலனடையும்.பெரிய நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறுவதற்கு நிவாரண நிதி தருவதற்காக, சுமார் 2.2 பில்லியன் டாலர்களை ஜப்பான் ஒதுக்கி உள்ளதாக தெரிகிறது. அதாவது, இதிலிருந்து உலகுக்கு ஜப்பான் தெரிவிக்கும் செய்தி, சீனாவை விட்டு வெளியேறுங்கள் என்பது மட்டுமே.வைரஸ் பிரச்னையின் போது, பல சீன நிறுவனங்கள் மூடப்பட்டதால், உலகம் முழுவதும் பல பொருட்களின் விலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இது, மற்ற நாடுகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. சீனாவில் உற்பத்தி குறைந்தால், அதனால் பலனடையும் முக்கிய நாடு இந்தியா. ஏனென்றால், இந்தியாவில் ஏற்கனவே உற்பத்திக்கான கட்டமைப்பு மனித சக்தி கிடைக்கிறது. எனவே, நிறைய பொருள்களை இந்தியாவால் ஏற்றுமதி செய்ய முடியும்.

அடுத்து வியட்நாம், இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கும். இந்த நாடுகள் எல்லாவற்றிலுமே, குறைவான ஊதியத்துக்கு வேலைக்கு ஆட்கள் கிடைக்கின்றனர். இதனால், உற்பத்தி பொருள்களின் விலையும் குறையும். எனவே, இந்த வழிகளை தான் உலக நாடுகள் இப்போது ஆராய்ந்து கொண்டிருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *