Saturday, April 13

கட்டி முடிக்­கப்­பட்ட வீடு­களை வாங்­கு­வது சிறந்­ததா?

சொந்த வீடு வாங்க விரும்­பு­கி­ற­வர்­கள், வீட்­டின் அமை­வி­டம், வீட்­டுக்­க­டன் வசதி உள்­ளிட்ட பல்­வேறு அம்­சங்­களை பரி­சீ­லிக்க வேண்­டும். இவற்­றோடு, புதி­தாக கட்­டப்­பட்டு வரும் குடி­யி­ருப்பு திட்­டங்­களை நாடு­வதா அல்­லது உட­ன­டி­யாக பயன்­ப­டுத்­தக்­கூ­டிய, கட்டி முடிக்­கப்­பட்ட வீடு­களை நாடு­வதா எனும் கேள்­வி­யும் முக்­கி­ய­மாக எழ­லாம். தற்­போ­தைய சூழ­லில், கட்டி முடிக்­கப்­பட்ட வீடு­களை நாடு­வ­தில் உள்ள சாத­க­மான அம்­சங்­கள்:

கட்டி முடிக்­கப்­பட்ட வீடு­களை வாங்­கும் போது, குடி­யி­ருப்பு திட்­டம் தாம­த­மா­கும் அபா­யம் இருப்­ப­தில்லை.திட்­டம் முடி­ய­வும், குடி­யி­ருப்பு வச­தி­கள் பூர்த்தி செய்­யப்­ப­ட­வும் காத்­தி­ருக்க வேண்­டி­யி­ருக்­காது. பல்­வேறு கார­ணங்­க­ளால், ரியல் எஸ்­டேட் திட்­டங்­கள் தாம­த­மாக வாய்ப்­புள்ள சூழ­லில் இதுமுக்­கிய சாத­கம்.

கட்டி முடிக்­கப்­பட்ட வீடு எனில்,பய­னா­ளிக்கு எல்லா அம்­சங்­களும் தெளி­வாக இருக்­கும். வீடு, அறை­க­ளின் அளவு, பார்­க்கிங், வச­தி­கள் உள்­ளிட்ட அனைத்துஅம்­சங்­க­ளை­யும் முன்­கூட்­டியே அறிந்து கொள்­­லாம்.இது, வாங்­கும் முடிவை எளி­தாக்­கும் என்­ப­தால்எந்த குழப்­ப­மும் இருக்­காது.வீட்­டுக்­க­டன் வசதி பெறும் போது, கட­னுக்­கான மாதத்­ த­வ­ணையை செலுத்த வேண்­டும். கட்­டப்­பட்டு வரும் திட்டம் எனில், மாதத் ­த­வணை மற்­றும் வாடகை இரண்­டும் கொடுக்க வேண்­டிய நிலை வரும். கட்டி முடிக்­கப்­பட்ட வீட்­டில் உடனே வசிக்­கத்­ து­வங்­க­லாம் என்­ப­தால், மாதத் ­த­வணை மட்டும் செலுத்த துவங்­க­லாம்.

ஜி.எஸ்.டி,வரி குறைக்­கப்­பட்ட நிலை­யி­லும், குடி­யி­ருப்பு திட்­டங்­க­ளுக்கு உள்­ளீடு வரிக்கு ஏற்ப, ஜி.எஸ்.டி., விதிக்­கப்­படும். கட்டி முடிக்­கப்­பட்ட வீடு­க­ளுக்கு, ஜி.எஸ்.டி.,பொருந்­தாது என்­ப­தால், இந்த வரியை மிச்­சம் செய்ய முடி­யும்.ஆனால், கட்டி முடிக்­கப்­பட்ட வீட்­டிற்கு கூடு­த­லாக பணம் கொடுக்க வேண்­டிக்க­லாம். வீட்­டுக்­க­டன் மூலம் வீடு வாங்­கும் போது வரிச்­ச­லு­கையை பெற முடி­யும். வீட்­டுக்க­ட­னுக்­கான மாதத் ­த­வ­ணை­யின் வட்டி தொகை, வரு­மான வரிச்­ச­லு­கைக்கு உரி­யது. மேலும், முதல் முறை வீடு வாங்­கு­ப­வர்­க­ளுக்­கான சலு­கை­யும் இருக்­கிறது. கட்டிமுடிக்­கப்­பட்டு, வீட்­டில் வசிக்­கும் போதே இந்த சலு­கை­களை பெற முடி­யும்.

Related posts:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *