நுரையிரல் சார்ந்த நோய்கள் என்றாலே சித்த மருத்துவத்தில் முக்கிய பங்கு உண்டு!

நுரையிரல் சார்ந்த நோய்கள் என்றாலே சித்த மருத்துவத்தில் முக்கிய பங்கு உண்டு . சித்த மருத்துவத்தில் காணும் பல்வேறு மூலிகைகளும் மருந்துகளும் நுரையீரல் சார்ந்த நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ளவும் , நோய் நிலையில் இருந்து மீளவும் பெரிதும் உதவும் . மேல் மற்றும் கீழ் சுவாசப்பாதை தொற்று நோய்கள் நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் ஆஸ்துமா போன்ற நாள்பட்ட இருமல் நோய் நிலைகளிலும் சித்த மருத்துவ மூலிகைகள் பெரும் பங்கு வகிப்பது நாடறிந்த உண்மை சுவாச மண்டலத்தில் மிக முக்கிய பங்கு நுரையீரலுக்கு உள்ளது . மார்பு கூட்டின் இருபுறமும் விலாஎலும்புக்குள் பாதுகாப்பாக உள்ளது நுரையீரல் . இதன் நுரையீரல் மூலமாக தான் நம் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் உட்கிரகிக்கப்படுகிறது . இன்னும் சொல்லப்போனால் வெட்ட வெளியாக உள்ள இந்த பிரபஞ்சத்தோடு தொடர்புடைய உள்ளுறுப்பு ஒருவருக்கு சுவாசத்துடிப்பு நிமிடத்திற்கு 15 முதல் 20 வரை இருப்பது நலம் பல்ஸ்ஆக்ஸிமீட்டர் எனும் ஆக்ஸிஜன் அளவு அறியும் கருவியில் பொதுவாக 95- க்கு மேல் இருப்பது நுரையீரல் நலத்திற்கான அறிகுறி .

மண்டல நோய் நம்பிக்க மருத்துவம் மேல் சுவாசப்பாதை தொற்று நோய்கள் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை . மூச்சுக்குழ துவங்கி நுரையீரலில் உள்ள காற்று நுண்பைகள் வரை உள்ள கீழ் சுவாச பாதையே பெருமள தொற்றுநோய் , புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பை ஏற்படுத்துகிறது தீநுண்மிக்களாலும் , பாக்டீரியாக்களாலும் பாதிக்கப்பட்டு மூச்சு விட சிரமத்தை ஏற்படுத்த நாளடைவில் உயிரைக்கொல்லும் அளவு பெரிய விளைவு ஏற்படுத்தும் . சித்த மருத்துவத்தில் பல்வேறு மூலிகைகள் நுரையீரல் நலனுக்காக சிறப்பாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது . முக்கியமாக துளசி , ஆடாதோடை , தூதுவளை கண்டங்கத்திரி , திப்பிலி , அதிமதுரம் வாகை , தாளிசபத்திரி , கற்பூரவல்லி , நொச்சி போன்ற நமக்கு தெரிந்த மூலிகைகள் அதிகம் மேலும் சுக்கு , மிளகு , மஞ்சள் , அன்னாசிப்பூ போன்ற வீட்டில் உபயோகப்படுத்தும் அஞ்சறைப்பெட்ட சரக்குகளும் அதிகம் . ஆடாதோடையில் உள்ள வாசின் மற்றும் ப்ரோம்ஹெக்ஸேன் போன்ற வேதிப்பொருட்கள் சுவாசப்பாதையை விரிவடைய செய்யும் , சுவாச பாதை வீக்கத்தையும் சரிசெய்யும் தன்மை உடையதாக உள்ளன . தூதுவளை , கண்டங்கத்திரி இவற்றில் உள்ள பல்வேறு வேதிப்பொருட்கள் சுவாசப் பாதையில் உள்ள வீக்கத்தை குறைத்து,சுரப்புகளை குறைத்து மூச்சு குழாயை விரிவடைய செய்யும் தன்மை உடையதாக உள்ளது.

தாளிசபத்திரி இலையில் உள்ள பக்லிடாக்சோல் எனும் வேதிப்பொருள் , சாதாரண இருமல் முதல் மூச்சுகுழாய் புற்றுநோய் வரையிலும் பயன்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன . இயற்கையாக கிடைக்கும் துளசி இலையை பறித்து கஷாயமாக எடுத்துக்கொள்ள சுவாசப்பாதையில் உள்ள பல்வேறு நோய் கிருமிகளுக்கு எதிராக செயல்படும் தன்மை உடையது . மேலும் நாட்பட்ட நுரையீரல் நோய்களில் இதன் செயல்பாடு சிறப்பாக இருக்கும் . . குழந்தைகளுக்கு வெற்றிலையோடு , கற்பூரவல்லி சேர்த்து கஷாயமிட்டு கொடுக்க சுவாசப்பாதை கிருமிகளும் அழியும் . சளி சுரப்புகள் வெளிப்பட்டு சுவாசபாதை சீராகும் . நாட்பட்ட சுவாசப்பாதை ஒவ்வாமை நோய்களில் சீந்தில் கொடியும் , மஞ்சளும் சிறந்த பயன் தரும் . இவை நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்து ஒவ்வாமை நோய்களில் இருந்து மீட்கும் தன்மை உடையன . சித்த மருத்துவத்தில் காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஆடாதோடை , தாளிசபத்திரி , அதிமதுரம் சேரும் ஆடாதோடை குடிநீரும் , 15 மூலிகைகளை கொண்ட கப சுர குடிநீரும் மேல் மற்றும் கீழ் சுவாச பாதை தொற்று நோய்கள் அனைத்திலும் நல்ல பலனைத் தரும் . மேலும் நொச்சி இலை , மிளகு , கிராம்பு பூண்டு இவற்றை கொண்டு செய்யப்படும் நொச்சி குடிநீரும் ஆஸ்துமா நோய்க்கு அடிமையானவர்களை மீட்கும் வல்லமை கொண்டது .

துளசி லவங்கப்பட்டை சுக்கு , மிளகு சேர்ந்த ஆயுஷ் குடிநீர் என்று மத்திய அரசால் , கொரோனா கிருமிகள் பரவ தொடங்கிய காலகட்டத்திலேயே நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க அறிமுகப்படுத்தப்பட்டு , நல்ல பலனும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது . பொதுவாகவே சுவாசப்பாதை சார்ந்த தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்க பாலில் மஞ்சள் , மிளகு , சுக்கு அல்லது இஞ்சி இவற்றை சேர்த்து எடுத்துக்கொள்வது சிறப்பு . லவங்கப்பட்டை அன்னாசிப்பூ இவற்றையும் சேர்த்துக்கொள்ள மிகுந்த பயன் தரும் . டாமிஃப்ளு மாத்திரைக்கு ஆதாரமான ஷிகிமிக் ஆசிட் எனும் வேதிப்பொருள் அன்னாசிப்பூவிலிருந்து பிரித்தெடுக்கப்படுவது ஆச்சர்யம் . மாலை வேளைகளில் தூதுவளை இலைகளோடு , இஞ்சி பூண்டு , மிளகு மஞ்சள் பெருங்காயம் சேர்த்து சூப் வைத்து எடுத்துக்கொள்ள நுரையீரல் பலப்படும் . சுவாசப்பாதை தொற்றுக்கள் அணுகாமல் தடுக்கும் . நோய் எதிர்ப்பாற்றலை தூண்டும் . மேலும் சித்த மருந்துகளாகிய அதிமதுர சூரணம் , தாளிசாதி வடகம் போன்றவை தொண்டை சார்ந்த தொற்று நோய்களில் இருந்து காக்கும் . நுரையீரல் நோய்களில் இருந்து மீண்டவர்களுக்கு நுரையீரலை வலிமைப்படுத்த திப்பிலி ரசாயனமும் நல்ல பயன் தரும் . இன்னும் தாது பொருட்களை கொண்டு செய்யும் பல பற்பம் , செந்தூரம் போன்ற மருந்துகளும் நல்ல பலனை அளிக்கும் .

சித்த மருத்துவத்தின் ஒரு பகுதியாகிய யோகக்கலையை பின்பற்றுதலும் நுரையீரல் நோய் சிறந்த பயன் தரும் . திருமந்திர நூலில் திருமூலர் வலியுறுத்திய பிராணாயாமம் செய்வதன் நுரையீரல் நோயின் பின் விளைவுகளான ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறையாமல் நுரையீரலுக்கு புத்துணர்வு தரலாம் . முக்கியமாக சவாசனம் , சுகாசனம் , சேது பந்தாசனம் , புஜங்காசனம் , மச்சேந்திராசானம் , பத்தகோணாசனம் , நாடி சுத்தி பிராணாயாமம் , கபாலபதி பிராணாயாமம் இவையும் நல்ல பயனளிக்கும் . இவற்றை முறையாக செய்தால் நுரையீரல் ஆக்ஸிஜன் கொள்திறன் அதிகரிக்கும் . ஆகவே சித்த மருத்துவர்களின் ஆலோசனைப்படி சித்த மருந்துகளையும் , திருமூலர் வழங்கிய பிராணாயாமமும் பயன்படுத்த துவங்கினால் நுரையீரல் நோய்கள் இல்லாத ஆரோக்கியமான உலகத்தை உருவாக்கிட முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை .