சின்ன கண்ணனைக் கொஞ்சும் அன்னமையாவின் பாடல்!

குழந்தைக் கண்ணனை ஒன்பான் மணிகளோடு ஒப்பிட்டுக் கொஞ்சும் “முத்தம் தூறும்” என்ற பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடல் அன்னமையாவின் “முத்துகாரே யசோதா” என்ற தெலுங்குப் பாடலின் தமிழாக்கமாகும்.
புகழ்பெற்ற இந்தத் தெலுங்குப் பாடலைப் பாடலாசிரியர் மதன் கார்க்கி தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இதனைப் பாடகி சுவேதா மோஹன் பாடியுள்ளார். குழந்தைக் கண்ணனின் சிறுவயது துணிவுமிக்க செயல்களை அழகாக எடுத்துரைத்து, வரிக்கு வரி முத்தே மணியேயென்று கண்ணனை விளிக்கும் இப்பாடல் சுவைமிக்கது. வரிகளின் பொருள் மாறாமல் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள “முத்தம் தூறும்” பாடலுக்குச் சாம் லாரன்ஸ் இசைக்கோர்ப்பு செய்துள்ளார். இப்பாடலின் முன்னோட்டம் கடந்த வாரம் வெளியான நிலையில், பா மியூசிக் யூடியூப் தளத்தில் இப்போது இப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து இசைச் சீரோடைகளிலும் வெளியிடப்படும்

Related posts:

கார்க்கி தமிழ்க் கழகம் மற்றும் சில்வர்சோன் அமைப்பு இணைந்து நடத்தும் "தமிழ் ஒலிம்பியாட் " !

”’டிரான்: ஏரஸ்’ திரைப்படம் சரியான நேரத்தில் வெளியாகிறது”- ஜாரெட் லெட்டோ!

கடன் வாங்கப் போறீங்களா... இந்த 6 விஷயங்களை மறந்துடாதீங்க!

ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி, அமரர் தயாரிப்பாளர் தில்லி பாபு அவர்களின் நினைவேந்தல் கூட்டம்!

’பராரி’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

தமிழக முதல்வர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நடிகர் ராஜ்குமாரின் திருமணம்!

மீண்டும் வரும் அர்னால்டின் Terminator Dark Fate (டெர்மினேட்டர் டார்க் ஃபேட்) !

2026-ல் மாஸான அறிவிப்பு ஒன்று வெளியாகும்: சரத்குமார் பரபரப்பு பேட்டி!